Published:Updated:

மனைவிக்குக் கிடைத்த அரசு வேலை; கையை வெட்டிய கணவன்; நடந்தது என்ன?

தன்னுடைய மனைவி வேலைக்குச் சென்றால் எங்கே தன்னை விட்டுச் சென்று விடுவாரோ என பயந்த முகமது, முதலில் சண்டையிட்டுள்ளார்.

மனைவிக்குக் கிடைத்த அரசு வேலை; கையை வெட்டிய கணவன்; நடந்தது என்ன?

தன்னுடைய மனைவி வேலைக்குச் சென்றால் எங்கே தன்னை விட்டுச் சென்று விடுவாரோ என பயந்த முகமது, முதலில் சண்டையிட்டுள்ளார்.

Published:Updated:

திருமணமான பெண்கள் வேலைக்குச் செல்லலாமா, கூடாதா என்பதைப் பெரும்பாலும் புகுந்த வீட்டாரே முடிவு செய்கிறார்கள். ஒருவேளை குடும்பத்தின் முடிவை மீறி வேலைக்குச் செல்வேன் எனத் தங்கள் முடிவில் உறுதியாக நிற்கும் பெண்கள், குடும்பத்தினராலேயே வன்முறைக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்களையும் கேள்விப்படுகிறோம். இந்த வன்முறை சற்று எல்லை மீறி, மனைவியின் கையையே வெட்டும் அளவுக்கான கொடூரமான சம்பவம் ஒன்று மேற்குவங்கம், கொல்கத்தாவில் நடந்துள்ளது.

representational image
representational image

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஷேர் முகமது என்பவர் வேலை இல்லாமல் சுற்றித்திரிந்த நிலையில், அவரின் மனைவி ரேணு காதுன் செவிலிய பயிற்சிக்குச் சென்றதோடு, துர்காபூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உதவியாளராகப் பணிபுரிந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ரேணுவுக்கு அரசாங்க செவிலிய பணி கிடைத்துள்ளது. பணியில் சேர்வதற்கான நியமன கடிதமும் அரசு தரப்பில் இருந்து வந்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தன் மனைவி வேலைக்குச் சென்றால் எங்கே தன்னை விட்டுச் சென்று விடுவாரோ என பயந்த முகமது, முதலில் சண்டையிட்டுள்ளார். தன்னுடைய முடிவில் இருந்து அவரின் மனைவி சற்றும் பின்வாங்காததால், அவரை வேலைக்குச் செல்லவிடாமல் தடுக்க என்ன செய்வது? என யோசித்திருக்கிறார். மனைவியின் கையை வெட்டிவிட்டால் அவருக்கு வேலை கிடைக்காது எனக் கடந்த சில தினங்களுக்கு முன் மனைவியின் மணிக்கட்டுப் பகுதியிலிருந்து கையை வெட்டி வீசியுள்ளார்.

மனைவிக்குக் கிடைத்த அரசு வேலை; கையை வெட்டிய கணவன்; நடந்தது என்ன?

கையை வெட்டிய அடுத்த கணமே அவரே தன்னுடைய மனைவியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்துள்ளார். ஆனால், வெட்டப்பட்ட கையின் பாகம் கிடைத்தால் எங்கே மருத்துவர்கள் கையை சிகிச்சை செய்து ஒட்டவைத்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், வெட்டப்பட்ட கையை ஒளித்து வைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தாரும் தலைமறைவாகி உள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism