Published:Updated:

அம்மாவை எரித்துக் கொன்ற அப்பா, ரத்தத்தால் கடிதம் எழுதிய மகள்கள்; சட்டப் போராட்டத்தின் மூலம் தண்டனை

எரித்துக் கொலை - சித்திரிப்பு படம்

மருத்துவமனையில் 80 டிகிரி காயங்களோடு அனுமதிக்கப்பட்ட பெண்ணின் உயிர் பிரிந்தது. இது குறித்து அவரின் மகள்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோதும் கண்டு கொள்ளப்படாததால், மாநிலத்தின் அப்போதைய முதலமைச்சருக்கு கொலையை தற்கொலையாக போலீஸார் மாற்றியதாக, ரத்தத்தால் கடிதம் எழுதினர்.

அம்மாவை எரித்துக் கொன்ற அப்பா, ரத்தத்தால் கடிதம் எழுதிய மகள்கள்; சட்டப் போராட்டத்தின் மூலம் தண்டனை

மருத்துவமனையில் 80 டிகிரி காயங்களோடு அனுமதிக்கப்பட்ட பெண்ணின் உயிர் பிரிந்தது. இது குறித்து அவரின் மகள்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோதும் கண்டு கொள்ளப்படாததால், மாநிலத்தின் அப்போதைய முதலமைச்சருக்கு கொலையை தற்கொலையாக போலீஸார் மாற்றியதாக, ரத்தத்தால் கடிதம் எழுதினர்.

Published:Updated:
எரித்துக் கொலை - சித்திரிப்பு படம்

`ஆண் பிள்ளைகள்தான் வயதான காலத்தில் என்னை பார்த்துக் கொள்வார்கள், பெண் பிள்ளைகள் வரதட்சணை என்ற பெயரில் செலவையே வைப்பார்கள்’ என பெற்றோர் கூறி வரும் வழக்கம் மாறவில்லை.

ஆண் பிள்ளைகள்தான் வேண்டும் என இன்னும் பல குடும்பங்களில் பல தாய்மார்கள் மீது அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஒருவேளை பெண் பிள்ளைகள் பிறக்கும் பட்சத்தில், அவர்களை அடித்து துன்புறுத்துவதும் நிகழ்கிறது.

abuse
abuse

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உத்தரப்பிரதேசத்தில் மனோஜ் பன்சால் என்பருக்கு அடுத்தடுத்து இரு பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். தனக்கு ஓர் ஆண் குழந்தையைப் பெற்று தராததற்காக (!) பல நாள்களாகத் தன் மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில், 2016, ஜூன் 14-ம் தேதி காலையில், தன் மனைவியை பன்சால் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்ததாக, அவரின் 15 மற்றும் 11 வயதான மகள்கள் தெரிவித்தனர். அதிகாலையில் அம்மாவின் அழுகுரல் கேட்டதாகவும், ஆனால் தாங்கள் இன்னொரு அறையில் வைத்து பூட்டப்பட்டிருந்ததால் தங்களால் அம்மாவை காப்பாற்ற முடியவில்லை என்றும் கண்ணீருடன் தெரிவித்தனர் அந்தச் சிறுமிகள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மருத்துவமனையில், 80 டிகிரி காயங்களோடு அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் உயிர் பிரிந்தது. இது குறித்து அவரின் மகள்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோதும் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து, அம்மாநிலத்தின் அப்போதைய முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்வுக்கு, கொலையை தற்கொலையாக போலீஸார் மாற்றியதாக ரத்தத்தால் கடிதம் எழுதினர். அந்தச் சம்பவம் பரபரப்பானது.

அதைத் தொடர்ந்து, அந்தப் புகார் தொடர்பாக, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு, இந்த வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டது. இந்நிலையில் 6 வருடம், ஒரு மாதம் 13 நாள்கள் கழித்து, அந்த மகள்களுக்கு தங்கள் அம்மாவின் கொலைக்கு நீதி கிடைத்துள்ளது.

Law (Representational Image)
Law (Representational Image)
Photo: Unsplash

தற்போது நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், தன் மனைவியைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பன்சால், தன் மனைவி கருவுற்றபோதெல்லாம் சட்ட விரோதமாக குழந்தையின் பாலினத்தை 6 முறை அறிந்து, பிறக்கவிருப்பது பெண் எனத் தெரிந்ததால் 6 முறையும் கருக்கலைப்பு செய்யச் சொல்லி அவரை துன்புறுத்தியுள்ளது ஊர்ஜிதமானது. வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்கும் வகையில் பன்சாலுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தீர்ப்புக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த இளம் பெண்கள் சுமார் 100 முறைக்கும் மேலே நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.