Published:Updated:

`சுய தனிமைப்படுத்தல்... எங்களின் ஒரு நாள் இப்படித்தான் கழிகிறது!’ - மிச்சேல் ஒபாமா

மிச்சேல் ஒபாமா
மிச்சேல் ஒபாமா ( instagram )

தனிமைப்படுத்தல் நேரத்தை பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு கொரோனாவில் இருந்து விடுபடுவோம்.

கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்த இதுவரை உரிய மருந்துகள் கண்டறியப்படாத நிலையில், உலகம் முழுவதும் மக்கள் தங்களை, சுயதனிமைப் படுத்தல் செய்துகொள்ள வேண்டும் என எல்லா நாடுகளிலும் வலியுறுத்தப்படுகிறது. "வீட்டுக்குள்ளயே என்ன பண்றது, வெளியே நாட்டு நடப்பு என்னனு தெரிஞ்சுப்போம்" என நிறைய பேர் ஹாயாக வெளியே நடமாடத்தான் செய்கிறார்கள். ஆனால், தனிமைப்படுத்தல் நேரத்தில் தங்கள் குடும்பத்தின் அன்றாட செயல்களை மிச்சேல் ஒபாமா சமூகவலதளங்களில் பகிர்ந்துள்ளார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

அமெரிக்காவின் பிரபல ஸ்டேண்ட் அப் காமெடியனும், டாக் - ஷோ பிரபலமான எலன் டி ஜெனிரெஸ் மிச்சேல் ஒபாமாவுடன் பேசிய வீடியோ ஒன்றை, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கொரோனா பரிசோதனைக்கு இந்தியாவில்தான் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா..? #VikatanFactCheck 

அதில், "நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. எல்லா நாடுகளும் செய்வதறியாத சூழலில் இருக்கிறது. இந்த நேரத்தில் நம்மை நாமே தனிமைப்படுத்துதல் மட்டுமே, நாட்டை கொரோனாவில் இருந்து மீட்க இருக்கும் ஒரே வழி.

இந்த நேரத்தில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக நாங்கள் இருப்பதன் அவசியத்தை உணர்ந்து, எங்கள் குடும்பம் சுயதனிமைப்படுத்தல் செய்துள்ளோம். எங்களின் மகள்கள் ஆன்லைன் மூலம் கல்லூரி படிப்பைத் தொடர்கிறார்கள். நண்பர்களுடன் வீடியோ கால் பேசுவது, செய்திகள், படங்கள் பார்ப்பது, புத்தகங்கள் வாசிப்பது என எங்களின் நேரத்தை செலவிட்டு வருகிறோம்.

ஒபாமா
ஒபாமா

எப்போதும் பிஸியாக இருந்த எங்களுக்கு இப்போது ஒன்றாக உட்கார்ந்து ஒருவருடன் ஒருவர் பேசி நேரம் கழிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தத் தனிமைப்படுத்தல் நேரத்தை பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு கொரோனாவில் இருந்து விடுபடுவோம்" என்று பகிர்ந்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு