Published:Updated:

`கணவர், மாமியாருடன் சண்டையா? அடைக்கலம் கொடுக்கிறது மகளிர் சேவை மையம்!’ - அமைச்சர் கீதா ஜீவன்

அன்னை சத்யா இல்லத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கீதாஜீவன்

``கணவர், மாமியாருடன் சண்டை வந்தால் பெண்கள் கோபித்துக் கொண்டு எங்கும் செல்ல வேண்டாம். உங்களுக்கு அடைக்கலம் கொடுக்க மகளிர் சேவை மையம் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது’’ - அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி

`கணவர், மாமியாருடன் சண்டையா? அடைக்கலம் கொடுக்கிறது மகளிர் சேவை மையம்!’ - அமைச்சர் கீதா ஜீவன்

``கணவர், மாமியாருடன் சண்டை வந்தால் பெண்கள் கோபித்துக் கொண்டு எங்கும் செல்ல வேண்டாம். உங்களுக்கு அடைக்கலம் கொடுக்க மகளிர் சேவை மையம் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது’’ - அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி

Published:Updated:
அன்னை சத்யா இல்லத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கீதாஜீவன்

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்டம் முழுவதும் துறை சார்ந்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள அன்னை சத்யா நினைவு இல்லம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் மகளிர் சேவை மையம், பாரதி நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அன்னை சத்யா நினைவு அரசு குழந்தைகள் இல்ல புதிய கட்டிடம் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார்.

ஆய்வை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ’தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் முதல்வரின் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும் மாணவர்களை மீட்டெடுப்பது, பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்கள் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்டவை அதில் அடங்கும்.

மகளிர் சேவை மைய உணவுக்கூடங்களில் ஆய்வு
மகளிர் சேவை மைய உணவுக்கூடங்களில் ஆய்வு

மேலும் கல்வித்துறை, சமூக நலத்துறை, சுகாதாரத்துறை ஆகியவை இணைந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து இடங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுக்க உள்ளோம்.

பெண்கள், குழந்தைகள், திருநங்கைகள், முதியோர்கள் ஆகியோரின் பாதுகாப்பு, அவர்களின் உரிமையை நிலைநாட்டுதல், அதற்கான திட்டங்கள், சட்டங்களை முறைப்படுத்தி வருகிறோம். பெண்களின் உதவி சேவை எண் 181 என்பதை அனைத்து தரப்பு பொதுமக்களிடமும் கொண்டு சென்று வருகிறோம். இந்தத் திட்டத்திற்கு முதல்வர் அவர்களே தனிக்கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

கணவர், மாமியாருடன் சண்டை ஏற்பட்டால், பெண்கள் எங்கும் கோபித்துக் கொண்டு செல்ல வேண்டாம். இந்த திட்டம் மூலம், உங்களுக்கென்று மகளிர் சேவை மையம் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உதவி சேவை எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்களின் வீட்டிற்கே சென்று அவர்களை பாதுகாப்பாக அழைத்து வந்து உதவி மையத்தில் தங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.