Published:Updated:

துபாயில் வேலை, பாகிஸ்தானுக்குக் கடத்தப்பட்ட இந்தியப் பெண்; 20 வருடங்களுக்குப் பிறகு கண்டுபிடிப்பு!

Woman (Representational Image) ( Photo by Nicolas Postiglioni from Pexels )

``இரு நாடுகளுக்கு இடையே நிலவும் உறவைக் கண்டு ஆரம்பத்தில் இவருக்கு உதவ சற்றுத் தயங்கினேன். நண்பர்களும் எச்சரித்தனர். இருந்தபோதும் அவரின் நிலை என்னை மோசமாக உணர வைத்தது.’’

துபாயில் வேலை, பாகிஸ்தானுக்குக் கடத்தப்பட்ட இந்தியப் பெண்; 20 வருடங்களுக்குப் பிறகு கண்டுபிடிப்பு!

``இரு நாடுகளுக்கு இடையே நிலவும் உறவைக் கண்டு ஆரம்பத்தில் இவருக்கு உதவ சற்றுத் தயங்கினேன். நண்பர்களும் எச்சரித்தனர். இருந்தபோதும் அவரின் நிலை என்னை மோசமாக உணர வைத்தது.’’

Published:Updated:
Woman (Representational Image) ( Photo by Nicolas Postiglioni from Pexels )

20 வருடங்களாகக் காணாமல் போன இந்திய பெண், சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ மூலம் பாகிஸ்தானில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் வசிக்கும் ஹமிதா பானு என்பவர், தன்னுடைய கணவரின் இறப்புக்குப் பின்பு, நான்கு குழந்தைகளையும் கவனித்துக்கொள்ள கத்தார், துபாய் மற்றும் சவுதி அரேபியா போன்ற பல வெளிநாடுகளில் சமையற்காரராகப் பணியாற்றி வந்துள்ளார்.

2002-ம் ஆண்டில் துபாயில் வேலையில் சேர்த்து விடுவதற்காக ஏஜென்ட்டிடம் சென்ற ஹமிதா பானுவிடம் இருந்து 20,000 ரூபாய் வரை பெறப்பட்டுள்ளது. ஆனால், துபாய்க்கு அழைத்துச் செல்லாமல் பாகிஸ்தானுக்கு இப்பெண் கடத்தப்பட்டுள்ளார்.

Woman (Representational Image)
Woman (Representational Image)
Photo by Danie Franco on Unsplash

மூன்று மாதங்கள் வரை ஒரு வீட்டில் அடைக்கப்பட்டுள்ளார். சில வருடங்கள் கழித்து கராச்சி நகரத்தில் உள்ள ஓர் ஆணை திருமணம் செய்துள்ளார். கோவிட் தொற்று பரவலின்போது அந்த ஆண் இறந்ததால், வளர்ப்பு மகனோடு வாழ்ந்துள்ளார். கடத்தப்பட்ட இத்தனை வருடங்களில் தன்னுடைய பிள்ளைகளை பார்க்க பல முயற்சிகள் மேற்கொண்ட போதும் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்துள்ளன.

இந்நிலையில், ஜூலை மாதத்தில் வலியுல்லா மரூஃப் என்ற சமூக ஊடகச் செயற்பாட்டாளர் பானுவை நேர்காணல் செய்து அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதைப் பார்த்த மும்பையில் வசிக்கும் பத்திரிகையாளரான கல்பான் ஷேக், வீடியோவை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த பானுவின் மகள் யாஸ்மின் ஷைக், அவர் தன் அம்மா என அடையாளம் கண்டுள்ளார். இந்த இருவரின் மூலம் பானுவும் யாஸ்மினும் வீடியோ கால் மூலம் பேசிக்கொண்டனர். தற்போது பானுவின் வருகைக்காக அவரின் குடும்பம் இந்தியாவில் காத்துக்கொண்டிருக்கிறது.

மரூப் தெரிவிக்கையில், ``15 வருடங்களுக்கு முன்பு கராச்சியில் உள்ள லோக்கல் மசூதியில் இஸ்லாமிய மத குருவாக இருக்கும் போதுதான் முதன்முதலில் பானுவை பார்த்தேன். என் சிறுவயதில் இருந்து அவரை பார்த்துக்கொண்டிருக்கிறேன். எப்போதும் சோகமாகவே தென்படுவார். இரு நாடுகளுக்கு இடையே நிலவும் உறவை கண்டு ஆரம்பத்தில் இவருக்கு உதவ சற்று தயங்கினேன். நண்பர்களும் எச்சரித்தனர். இருந்தபோதும் அவரின் நிலை என்னை மோசமாக உணரவைத்தது.

Social Media
Social Media

அந்த வீடியோவுக்குப் பிறகு, பாகிஸ்தானில் உள்ள இந்திய உயர் அதிகாரிகள் அவரைத் தொடர்புகொண்டு வழக்கின் விவரம் குறித்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க பானுவிடம் கூறி உள்ளனர். இதன்மூலம் பானு நாடு திரும்புவதற்கான செயல்பாடுகள் தொடங்கும். ஆனால், அதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும் எனத் தெரியவில்லை’’ எனக் கூறியுள்ளார்.

``முன்பு வெளிநாட்டுப் பயணங்களின்போது நாங்கள் தினமும் தொலைபேசியில் பேசிக்கொள்வோம். 2002-ம் ஆண்டு எங்களை விட்டுச்சென்ற பிறகு, அம்மாவின் தொலைபேசி அழைப்புக்காக சில மாதங்கள் வரை காத்திருந்தோம். பிறகு அந்த எஜென்டிடம் சென்று விசாரித்தோம். அம்மா நலமாக இருப்பதாகவும், எங்களிடம் பேசுவதற்கு அவர் விரும்பவில்லை எனவும் தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் சென்று பல கேள்விகளை கேட்டோம். திடீரென அந்த ஏஜென்ட் மாயமாக மறைந்து போனார்” என யாஸ்மின் கூறியுள்ளார்.