Published:Updated:

`பெண்களுக்கு பாதுகாப்பற்ற இடம் வீடுதான்!’ - அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவுகள்

குடும்ப வன்முறை

பெண்களுக்கு 49.7% குற்றங்கள் குடும்ப நண்பர்களாலும், அருகில் வசிப்பவர்களாலும், பணிபுரியும் இடத்தில் தெரிந்தவர்களாலும்தான் நடந்திருக்கின்றன. 42.4% குற்றங்கள் நண்பர்களாலும், சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகமானவர்களாலும் அரங்கேறியுள்ளன.

`பெண்களுக்கு பாதுகாப்பற்ற இடம் வீடுதான்!’ - அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவுகள்

பெண்களுக்கு 49.7% குற்றங்கள் குடும்ப நண்பர்களாலும், அருகில் வசிப்பவர்களாலும், பணிபுரியும் இடத்தில் தெரிந்தவர்களாலும்தான் நடந்திருக்கின்றன. 42.4% குற்றங்கள் நண்பர்களாலும், சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகமானவர்களாலும் அரங்கேறியுள்ளன.

Published:Updated:
குடும்ப வன்முறை

`பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மூன்றில் ஒன்று நெருக்கமானவர்களாலேயே நடக்கிறது; 31.8% குற்றங்கள் பெண்ணின் கணவரால் அல்லது உறவினர்களால் நடக்கின்றன’ என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

தேசிய குற்ற ஆவண காப்பகம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய தரவுகளை சமீபத்தில் வெளியிட்டது. அதில் பல தகவல்கள் அதிர்ச்சியூட்டும் விதமாகவே இருந்தன. அதன்படி, 2021-ம் ஆண்டு நடந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 96.5% குற்றங்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நெருங்கிய வட்டத்துக்குள் இருப்பவர்களாலேயே நடந்திருக்கின்றன என்ற தகவலை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது.

குடும்ப வன்முறை
குடும்ப வன்முறை
மாதிரிப் படம்

அதில், 49.7% குற்றங்கள் குடும்ப நண்பர்களாலும், அருகில் வசிப்பவர்களாலும், பணிபுரியும் இடத்தில் தெரிந்தவர் களாலும்தான் நடந்திருக்கின்றன. 42.4% குற்றங்கள் நண்பர்களாலும், சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகமானவர் களாலும் அரங்கேறியுள்ளன. 7.9% குற்றங்கள் குடும்ப உறுப்பினர்களாலேயே நடந்தேறியுள்ளன என்பது வேதனையின் உச்சம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் அஸ்ஸாம் முதலிடம் வகிக்கிறது. 2021-ம் ஆண்டு மட்டும் அஸ்ஸாமில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் 29,046 பதிவாகியுள்ளன. நாட்டின் தலைநகரான டெல்லி இப்பட்டியலில் இரண்டாம் இடம் வகிக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் ஒடிசா, ஹரியானா மற்றும் தெலங்கானா மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும், 31.8% குற்றங்கள் பெண்ணின் கணவரால் அல்லது அவர்களின் உறவினர்களால் நடக்கின்றன. 20.8% குற்றங்கள் சமூகத்தில் ஒரு தனிப்பட்ட பெண்ணின் மாண்பை சீர்குலைக்கும் நோக்கத்திலேயே நடைபெறுவதாகக் கூறுகிறது தேசிய குற்ற ஆவண காப்பகம்.

பெண்ணுக்கு கொடுமை!
பெண்ணுக்கு கொடுமை!

ஆறு வயதுக்குள்ளான குழந்தைகள் 0.2%, 6 - 12 வயதுக்குள்ளான குழந்தைகள் 0.6%, 16 - 18 வயதுக்குள்ளான மாணவிகள் 5.6%, 18 - 30 வயதுக்குள்ளான பெண்கள் 62.9%, 30 - 60 வயதுக்குள்ளான பெண்கள் 27.3%, 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 0.2% பாலியல் ரீதியான வன்முறைக்கு கடந்த ஆண்டு மட்டும் ஆளாகியுள்ளனர்.

என்னதான் இந்தியாவில் பாலியல் ரீதியான வன்முறைகளுக்கு எதிரான சட்டங்கள் வலுவாக இருப்பதாகக் கூறப்பட்டாலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது கவலைக்குரிய ஒன்று.