Published:Updated:

`குடும்ப ஆண் அனுமதியில்லாமல் பெண்கள் வெளிநாடு செல்லக் கூடாது!' - நேபாளின் அதிர்ச்சி சட்டம்

`பெண்கள் வெளிநாடுகளில் பாதுகாப்புடன் பணியாற்றுவதற்கான சூழலை உருவாக்கி, அதைக் கண்காணிப்பதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு பெண்கள் வெளிநாடுகளுக்கே வேலைக்குச் செல்லக் கூடாது என்றால் எப்படி' என்று அவர்கள் கோபத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.

`குடும்ப ஆண் அனுமதியில்லாமல் பெண்கள் வெளிநாடு செல்லக் கூடாது!' - நேபாளின் அதிர்ச்சி சட்டம்

`பெண்கள் வெளிநாடுகளில் பாதுகாப்புடன் பணியாற்றுவதற்கான சூழலை உருவாக்கி, அதைக் கண்காணிப்பதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு பெண்கள் வெளிநாடுகளுக்கே வேலைக்குச் செல்லக் கூடாது என்றால் எப்படி' என்று அவர்கள் கோபத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.

Published:Updated:

நேபாளில், 40 வயதுக்குட்பட்ட பெண்கள் இனி வெளிநாடு செல்ல வேண்டுமென்றால் அவர்கள் தங்களுடைய குடும்ப ஆண்கள், மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் அனுமதியைப் பெற வேண்டும் என்று நேபாள அரசு சமீபத்தில் புதிய சட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளது. ஆனால், இந்தச் சட்டத்துக்கு பெரும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

பெண்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளதாக நேபாள அரசு கூறினாலும், ஆழமாகப் புரையோடியுள்ள ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடே இந்தச் சட்டம், இது மிகவும் அபத்தமானது என்று நேபாளத்தைச் சேர்ந்த பெண்கள் கொதித்துள்ளனர்.

women
women
Pixabay

கடந்த வெள்ளிக்கிழமையன்று நேபாளத்தின் தலைநகரான காத்மண்டுவின் இதயப் பகுதியான `மைத்திகர் மண்டலா’ என்கிற இடத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டனர். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பெண்களின் உரிமைகள் நசுக்கப்படுவதை எதிர்த்துக் கோஷங்கள் எழுப்பிய அவர்கள், மிகக் குறிப்பாக நேபாள அரசு கொண்டுவந்திருக்கும் இந்தச் சட்டத்துக்கு எதிராகத் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

'இளம்பெண்களும் பெண்களும் வெளிநாடு சென்று வேலை செய்யக் கூடாது என்கிற எண்ணத்தில்தான் இந்தச் சட்டம் போடப்பட்டுள்ளது. ஓர் அரசு இமிகிரேஷன் சட்டத்தில் மாறுதல்களைக் கொண்டு வர நினைத்தால் அது ஆண், பெண் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டுமே தவிர, பெண்களை மட்டும் குறிவைத்தால் இதில் என்ன நியாயம் இருக்கிறது?' என்று கேள்வி எழுப்புகிறார் வுமன் லீட் நேபாள் (WOMEN LEAD NEPAL) என்கிற பெண்கள் அமைப்பின் இயக்குநரான ஹிமா பிஸ்டா.

Nepal
Nepal
Image by Kurious from Pixabay

இந்தச் சட்டம் குறித்த விமர்சனங்கள் கடுமையாக இருப்பதைக் கண்ட நேபாள அரசு, 'இந்தச் சட்டம் எல்லாப் பெண்களுக்கு மானதல்ல. மிகவும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையில் இருக்கின்ற பெண்களுக்கு இச்சட்டம் பொருந்தும். குறிப்பாக, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு முதன்முறையாகப் பயணிக்கும் 40 வயதுக்குக் கீழுள்ள பெண்கள் மட்டுமே இந்த அனுமதியைப் பெற வேண்டும்' என்கிற விளக்கத்தைக் கொடுத்துள்ளது.

பெண்கள் வெளிநாடுகளில் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கு இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக நேபாள அரசு கூறினாலும், அந்த நாட்டுப் பெண்கள் இந்தப் பதிலால் சமாதானமாகவில்லை. 'உள்நாட்டில் சரியான வேலைவாய்ப்புகள் இல்லை என்பதால்தான் நாங்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்கிறோம். அப்படியிருக்க பெண்கள் வெளிநாடுகளில் பாதுகாப்புடன் பணியாற்றுவதற்கான சூழலை உருவாக்கி, அதை கண்காணிப்பதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு பெண்கள் வெளிநாடுகளுக்கே வேலைக்குச் செல்லக் கூடாது என்றால் எப்படி?' என்று அவர்கள் கோபத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.