Published:Updated:

பிரசவத்தின்போது துண்டிக்கப்பட்ட குழந்தையின் தலை... தாயின் வயிற்றிலேயே வைத்து ஊழியர்கள் அலட்சியம்!

சிசு - சித்தரிப்பு படம்

மகப்பேறு மருத்துவர் இல்லாததால், அனுபவமற்ற ஊழியர்கள், பெண்ணுக்கு சிகிச்சை பார்த்துள்ளனர். அவர்களது அலட்சியத்தால் வயிற்றில் இருந்த குழந்தையின் தலை துண்டிக்கப்பட்டது. அதையும் அப்பெண்ணின் வயிற்றுககுள் வைத்து, அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

பிரசவத்தின்போது துண்டிக்கப்பட்ட குழந்தையின் தலை... தாயின் வயிற்றிலேயே வைத்து ஊழியர்கள் அலட்சியம்!

மகப்பேறு மருத்துவர் இல்லாததால், அனுபவமற்ற ஊழியர்கள், பெண்ணுக்கு சிகிச்சை பார்த்துள்ளனர். அவர்களது அலட்சியத்தால் வயிற்றில் இருந்த குழந்தையின் தலை துண்டிக்கப்பட்டது. அதையும் அப்பெண்ணின் வயிற்றுககுள் வைத்து, அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

Published:Updated:
சிசு - சித்தரிப்பு படம்

பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் இருக்கும் கிராமப்புற சுகாதார மையத்தில், 32 வயதான இந்து பெண், பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். தர்பார்கர் மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமத்தைச் சேர்ந்த பழங்குடிப் பெண்ணான அவர், பிரசவத்துக்காக முதலில் அருகில் உள்ள கிராமப்புற சுகாதார மையத்தை அணுகியிருக்கிறார்.

அறுவைசிகிச்சை - சித்திரிப்புப் படம்
அறுவைசிகிச்சை - சித்திரிப்புப் படம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்போது அங்கே மகப்பேறு மருத்துவர் இல்லாததால், அனுபவமற்ற ஊழியர்கள், அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை பார்த்துள்ளனர். சிகிச்சையின்போது, அவர்களது அலட்சியத்தால் வயிற்றில் இருந்த குழந்தையின் தலை துண்டிக்கப்பட்டது.

எனினும் இதுபற்றிக் கவலைப்படாத மருத்துவமனை ஊழியர்கள், குழந்தையின் தலையை, அப்பெண்ணின் வயிற்றின் உள்ளேயே வைத்து அறுவைசிகிச்சை செய்துள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து, அந்தப் பெண் உயிருக்குப் போராடும் ஆபத்தான கட்டத்துக்குச் சென்றார். அதை உணர்ந்த குடும்பத்தினர், உடனடியாக அந்தப் பெண்ணை, லியாகத் மருத்துவ மற்றும் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தில் (LUMHS) உள்ள மகப்பேறு பிரிவுக்கு அழைத்து வந்தனர்.

அங்கே அவரைப் பரிசோதித்த மருத்துவக்குழு, குழந்தையின் தலை உள்ளே சிக்கியிருப்பதையும் தாயின் கருப்பை சிதைந்து இருப்பதையும் கண்டறிந்தனர். தாயின் உயிரைக் காப்பாற்ற, அறுவைசிகிச்சை செய்து குழந்தையின் தலையை வெளியே எடுத்ததாக, அப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரஹீல் சிக்கந்தர் தெரிவித்தார்.

கர்ப்பம்
கர்ப்பம்
சித்திரிப்புப் படம்

மருத்துவமனை படுக்கையில் இருந்தபோது, அப்பெண்ணை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து, வாட்ஸ்அப் குரூப்களில் பகிர்ந்துகொண்டது குறித்தும், மகப்பேறு மருத்துவர் இல்லாதபோது பெண்ணுக்கு சிகிச்சை பார்த்த பெண் ஊழியர்களை விசாரிக்கவும், சிந்து மாகாண சுகாதாரச் சேவை இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஜூமான் பஹோட்டோ உத்தரவிட்டுள்ளார்.

அதிர்ச்சியூட்டும் இந்த நிகழ்வு குறித்து விசாரிக்க, உடனடியாக மருத்துவ விசாரணைக் குழுவை சிந்து மாகாண அரசு அமைத்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism