Published:Updated:

உள்ளாட்சித் தேர்தல்: 51% இடங்களைப் பெற்று நீலகிரிக்கு மகுடம் சூட்டிய பெண்கள்; சுவாரஸ்ய பின்னணி!

உள்ளாட்சித் தேர்தல்

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நீலகிரியில் மொத்தம் உள்ள 4 நகராட்சிகளின் தலைவர் மற்றும் 11 பேரூராட்சிகளில் 10 பேரூராட்சிகளின் தலைவர் நாற்காலிகளைப் பெண்களே அலங்கரித்திருக்கிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தல்: 51% இடங்களைப் பெற்று நீலகிரிக்கு மகுடம் சூட்டிய பெண்கள்; சுவாரஸ்ய பின்னணி!

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நீலகிரியில் மொத்தம் உள்ள 4 நகராட்சிகளின் தலைவர் மற்றும் 11 பேரூராட்சிகளில் 10 பேரூராட்சிகளின் தலைவர் நாற்காலிகளைப் பெண்களே அலங்கரித்திருக்கிறார்கள்.

Published:Updated:
உள்ளாட்சித் தேர்தல்

பெண்களுக்கு அரசியலில் சம உரிமை வழங்க வேண்டும் என்ற நோக்கின் அடிப்படையில் நடந்து முடிந்த தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாகப் பெண்களுக்கு 50% இடங்கள் ஒதுக்கப்பட்டது பெரும் வரவேற்பைப் பெற, அரசியல் களத்தில் அதுவரை பின் வரிசையில் இருந்த பல பெண்கள் முன்களத்தில் இறங்கிப் போட்டியிட்டனர்.

ஊட்டி நகராட்சி தலைவர்
ஊட்டி நகராட்சி தலைவர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில், 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் என மொத்தமுள்ள 15 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிகளில் 14, பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மாவட்டத்தில் மொத்தம் உள்ள ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகளின் தலைவர் பதவிகளும் பெண்களுக்கே ஒதுக்கப்பட்டதுடன், நெல்லியாளம் நகராட்சியின் தலைவர் பதவி பழங்குடியினப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது கூடுதல் சிறப்பு.

நீலகிரி நகர்ப்புற உள்ளாட்சிகளில் மொத்தம் உள்ள 294 வார்டு உறுப்பினர் பதவிகளில் 150 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, பெண் கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் அரசு ஒதுக்கீடு செய்த 50 சதவிகிதத்தைக் கடந்து ஒட்டுமொத்தமாக 51.02 சதவிகித பெண்கள் தேர்வாகியிருக்கிறார்கள்.

பழங்குடி பெண் பேரூராட்சி தலைவர்
பழங்குடி பெண் பேரூராட்சி தலைவர்

உள்ளாட்சி அமைப்புகளில், எண்ணிக்கையிலும் செயல்களிலும் ஆண்களின் ஆதிக்கத்தையே பார்த்து வந்த நிலையில், ஆண்களைவிட அதிகமாகப் பெண்கள் மிகுந்திருக்கும் இந்தச் சுழல் வரவேற்புக்கு உரியது. பொறுப்புகளுக்கு வந்திருக்கும் பெண்கள் ஆண்களின் அதிகாரம், தலையீடு இன்று பணி செய்ய வேண்டும் என்பது அரசியல் விமர்சகர்களின் விருப்பமாக இருக்கிறது.