Published:Updated:

`பாடப்புத்தகத்தில் வரதட்சணை குறித்து சர்ச்சை கருத்து; எப்படி அங்கீகரித்தது?' - வலுக்கும் எதிர்ப்பு

வரதட்சணை சர்ச்சை

இந்தப் பாடப் புத்தகத்தைப் படித்த சிலர், வரதட்சணையின் நன்மைகள் என்று இடம்பெற்றிருக்கிற அந்தப் பக்கத்தைப் புகைப்படம் எடுத்து `காலேஜ் டெக்ஸ்ட் புக் இன் இந்தியா' என்ற தலைப்பிட்டு தங்களுடைய சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர்.

`பாடப்புத்தகத்தில் வரதட்சணை குறித்து சர்ச்சை கருத்து; எப்படி அங்கீகரித்தது?' - வலுக்கும் எதிர்ப்பு

இந்தப் பாடப் புத்தகத்தைப் படித்த சிலர், வரதட்சணையின் நன்மைகள் என்று இடம்பெற்றிருக்கிற அந்தப் பக்கத்தைப் புகைப்படம் எடுத்து `காலேஜ் டெக்ஸ்ட் புக் இன் இந்தியா' என்ற தலைப்பிட்டு தங்களுடைய சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர்.

Published:Updated:
வரதட்சணை சர்ச்சை

நர்சிங் பாடத்திட்டத்தின், சமூகவியல் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிற வரதட்சணை தொடர்பான கருத்துகள், கடந்த 2 தினங்களாக சமூக வலைதளங்களில் பல்வேறுபட்ட விமர்சனங்களுக்கு உள்ளாகிக்கொண்டிருக்கின்றன. `வரதட்சணை தொடர்பான கருத்து என்றாலே, அது வரதட்சணைக்கு எதிரான கருத்தாகத்தானே இருக்க முடியும்... இதிலெங்கே விமர்சனத்துக்கு இடமிருக்கிறது' என்று பலருக்கும் தோன்றலாம். ஆனால், அந்தப் பாடப்புத்தகத்தில் வரதட்சணைக்கு ஆதரவான கருத்துகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

பாடப்புத்தகத்தின் பக்கம்
பாடப்புத்தகத்தின் பக்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`வரதட்சணையின் பலன்கள்' என்று தலைப்பிட்டு, 'திருமணத்தின்போது தொலைக்காட்சி, ஃபிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோகப்பொருள்களை வழங்குவதால், வரதட்சணை ஒரு குடும்பத்தைக் கட்டமைப்பதற்கு உதவுகிறது. பெற்றோர் சொத்தில் பெண்களுக்கு சமபங்கு கிடைக்க வரதட்சணை உதவுகிறது. படித்து, வேலைபார்க்கும் பெண்கள் குறைவான வரதட்சணை கொடுத்தாலே போதுமானதாக இருக்கிறது. இதன் காரணமாகத்தான், பெற்றோர்கள் பலரும் தங்கள் மகள்களை நன்கு படிக்க வைக்க ஆரம்பித்தார்கள். அந்த வகையில், பெண் கல்வியை ஊக்கப்படுத்தியதில் வரதட்சணைக்கு மறைமுக பங்கிருக்கிறது. இவ்வளவு ஏன், அசிங்கமான தோற்றம் கொண்ட பெண்கள்கூட அதிக வரதட்சணை கொடுத்து அழகான ஆணைத் திருமணம் செய்துகொள்ளலாம்' என்று அச்சிடப்பட்டிருக்கிறது அந்தப் புத்தகத்தில். இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் டி.க.இந்திராணி என்பவர் ஆவார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தப் பாடப் புத்தகத்தைப் படித்த சிலர், வரதட்சணையின் நன்மைகள் என்று இடம்பெற்றிருக்கிற அந்தப் பக்கத்தைப் புகைப்படம் எடுத்து `காலேஜ் டெக்ஸ்ட் புக் இன் இந்தியா' என்ற தலைப்பிட்டு தங்களுடைய சமூகவலைதளங்களில் பதிவிட்டனர்.

இந்தப் பதிவிலொன்றை, பாராளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததோடு, கல்வியமைச்சர் தர்மேந்திர பிராதனை டேக் செய்து `இந்தியப் பாடத்திட்டத்தில் இப்படியொரு கருத்து இருப்பது நம் நாட்டுக்கும் நம் அரசியலமைப்புக்கும் அவமானம் தரக்கூடியதாகும்.

சமூக செயற்பாட்டாளர் ஓவியா
சமூக செயற்பாட்டாளர் ஓவியா

இதை உடனே நீக்குங்கள்' என்று கேட்டிருந்தார்.

இதையடுத்து, நெட்டிசன்கள் பலரும் இந்தப் பாடப்புத்தகம் தொடர்பான தங்களுடைய கருத்துகளைப் பகிர ஆரம்பித்தனர். பலரும் வரதட்சணைக்கு எதிராகவும், புத்தகத்தின் ஆசிரியருக்குக் கண்டனம் தெரிவித்தும் தங்களுடைய கருத்துகளைப் பதிவேற்ற, சிலர் மட்டும், `அந்தப் புத்தகத்திலிருக்கிற வாக்கியங்கள் உண்மைதான். அவை இன்றைக்கும் சமூகத்திலிருக்கிற நடைமுறைதான். வரதட்சணை நம் சமூகத்தைவிட்டு மட்டுமல்ல நம் மனங்களைவிட்டும் முழுமையாக அகலவில்லை' எனக் கோபத்துடனும் வருத்தத்துடனும் தங்கள் கருத்தைப் பகிர்ந்திருந்தனர்.

இந்தப் பாடப்புத்தக சர்ச்சை பற்றி சமூக செயற்பாட்டாளர் ஓவியாவிடம் கருத்துக் கேட்டோம். ``இந்தியாவில் பெண்ணுரிமை இயக்கங்கள் பெண் விடுதலையில் முதலில் தொடுத்த போர் வரதட்சணைக்கு எதிராகத்தான். கடந்த 30 வருடங்களில் பெண் விடுதலை தொடர்பான சிந்தனைகள் எவ்வளவோ வளர்ந்துவிட்டன. அப்படிப்பட்ட ஒரு காலத்தில், இப்படியொரு பாடத்திட்டமா? இப்படிச் சிந்திக்கக்கூடிய ஒருவர் மருத்துவத்துறையில் இருக்கிறார். அதிலும் ஒரு பாடப்புத்தகம் எழுதுகிற பொறுப்பில் இருக்கிறார்.

அவர் எழுதிய கருத்துகளை இந்தியப் பாடநூல் கமிட்டியும் அங்கீகரித்திருக்கிறது என்பதே அதிர்ச்சியாக இருக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி சொன்னதுபோல இந்தக் கருத்துகளை வாசிக்க மிகுந்த அவமானமாக இருக்கிறது. அதிலும் 'அந்த அழகற்ற பெண் பாயின்ட்' யோசிப்பதற்கே மிகுந்த அருவருப்பாக இருக்கிறது'' என்கிறார் கோபமாக.