Published:Updated:

"தனக்கு நேர்ந்த அநீதியை ஒரு பெண் எப்போது வேண்டுமானாலும் கூறலாம்!"- #MeToo குறித்து தமிழச்சி தங்கபாண்டியன்

பேராசிரியர்.தமிழச்சி தங்கபாண்டியன்
News
பேராசிரியர்.தமிழச்சி தங்கபாண்டியன்

"தனக்கு நேர்ந்த அநீதியைப் பற்றி என்றைக்கு வேண்டுமானாலும் கூற ஒரு பெண்ணுக்கு முழு உரிமையும் உண்டு." - தமிழச்சி தங்கபாண்டியன்

ஆனந்த விகடன் யூடியூப் சேனலுக்காக பேச்சாளர், கல்வியாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட பேராசிரியை பர்வீன் சுல்தானா, பல்துறை ஆளுமைகளைச் சந்தித்து உரையாடி வருகிறார். ‘கதைப்போமா with பர்வீன் சுல்தானா’ என்ற பெயரிலான அந்த நிகழ்வில் திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் தமிழச்சி தங்கபாண்டியனைச் சந்தித்து அண்மையில் உரையாடினார்.

நீண்ட அந்த உரையாடலில் இருந்து சில துளிகள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

#metoo-வின் இன்றைய சூழல் என்னவென்று நினைக்கிறீர்கள்? ஒரு பெண்ணாக, அரசியல் களமாடிக்கொண்டிருக்கும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக, ஒரு மிகப்பெரிய மக்கள்தொகையின் பிரதிநிதியாக #metoo பற்றிய உங்கள் கருத்து என்ன?

மீடூ -வை மிக முக்கியமான ஒரு வரவேற்கப்படவேண்டிய செயல்பாடாக நான் பார்க்கிறேன். இந்த கருத்தினை நான் பதிவு செய்தும் உள்ளேன். நியாயம் கேட்பவர்களிடம் சிலர் இவ்வாறு கேட்கலாம். 'நீங்கள் அன்றைக்கு வாயை மூடிக்கொண்டு இன்றைக்கு மட்டுமே ஏன் பேசுகிறீர்கள்?' என்று. என்னுடைய வாழ்க்கைப் பயணம் உங்களுடைய பயணத்தில் இருந்து முற்றிலும் வேறான ஒன்று. எனக்கு அன்றைக்குப் பேசக்கூடிய சூழல் இருந்திருக்கலாம், வேறொரு பெண்ணுக்கு இதை வெளிப்படையாக பேசும் சூழல் இல்லாமல் இருந்திருக்கலாம். அன்றைக்குச் சொல்லாமல் இன்றைக்கு ஏன் சொல்கிறாய் என்ற கேள்வியே இருக்கக்கூடாது. தனக்கு நேர்ந்த அநீதியை பற்றி என்றைக்கு வேண்டுமானாலும் கூற ஒரு பெண்ணுக்கு முழு உரிமையும் உண்டு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது போன்ற ஒன்று எனக்கு நெருக்கமானவர்களுக்கோ அல்லது கொள்கை சார்ந்து என்னுடன் பயணிப்பவர்களுக்கோ நடந்தாலும் என் நிலைப்பாடு இதுவாகவே இருக்கும். நிச்சயமாக அவர்கள் நீதிமன்றத்தை நாடவேண்டும் என்று நான் சொல்வேன். நீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்கிறதோ அதுவே அனைவருக்கும் பொதுவான ஒன்று."

பேராசிரியர் தமிழச்சி தங்கபாண்டியனை
பேராசிரியர் தமிழச்சி தங்கபாண்டியனை

இவ்வளவு காலம் கடந்த பின்பும் கூட, உங்களின் உடல் தன்மையை ஆரோக்கியத்தோடு அழகியலோடு காத்து வருகிறீர்கள். அதன் ரகசியத்தை எங்களுக்குக் கூறுங்கள்?

"அந்த ரகசியத்தை இன்று பரசியம் ஆக்கிவிடலாம் (சிரிக்கிறார்). ஒரு பெண் என்பவள் முதலில் தன்னை நேசித்து காதலிக்க வேண்டும். தமிழ் சமூகத்திலும் இந்திய நாட்டிலும் ஒரு பெண் என்பவள் தியாகத்தின் திரு உருவமாக போற்றப்படுகிறாள். குடும்ப பெண்ணாக இருந்தால் அவள் தன்னை கவனித்துக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை தன் பிள்ளைகளை கணவன்மார்களை கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற வழக்கம் இருக்கிறது.

ராணி மேரி கல்லூரியில் என் சக பேராசிரியரிடம் நான் இதையேதான் சொல்வேன். வீட்டில் உள்ள அனைவருக்கும் காலை உணவு செய்து கொடுத்துவிட்டு வரும் இவர், 11 மணிக்கு கேன்டீன் சென்று காலை உணவாக வடையை உண்பார். உங்களின் உடலுக்காக ஒரு 10 நிமிடம் ஒதுக்கி வீட்டில் சாப்பிட்டு வரக்கூடாதா என்று கேட்பேன். எனவே அடிப்படையில் உங்களை நீங்கள் நேசிக்க வேண்டும். அதில் எந்த சமரசமும் வைத்துக்கொள்ள கூடாது. நாம் நன்றாக இருந்தால்தானே நாம் மற்றவரை கவனித்துக்கொள்ள முடியும். அதனால் நம்மை நாம் நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும். இது ஒன்றும் குற்றச்செயல் இல்லையே.

பேராசிரியர்.தமிழச்சி தங்கபாண்டியனை
பேராசிரியர்.தமிழச்சி தங்கபாண்டியனை

அடுத்ததாக நம்முடைய மண் சார்ந்த உணவு வகைகளே நம்மை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ளும். அடுத்தபடியாக நடைப்பயிற்சி யோகாசனம் போன்ற உடற்பயிற்சிகள். எப்போதும் நம் உடல் சொல்வதை நாம் கேட்கவேண்டும்.

உங்களை நேசியுங்கள், நல்லதை உண்ணுங்கள், உடல் சொல்வதை கேளுங்கள். இதுவே நான் கூறும் மந்திரம்."

முழு வீடியோ ஆனந்த விகடன் யூடியூப் சேனலில்..!