Published:Updated:

காதல் உறவை `போக்ஸோ' சட்டத்தின் அடிப்படையில் பார்க்க முடியாது - கர்நாடக உயர் நீதிமன்றம்

கர்நாடக உயர் நீதிமன்றம்

இச்சட்டம் பாராட்டத்தக்கது என்றாலும், காதலில் விழும் சிறு குழந்தைகளை இதன் பேரில் தண்டிக்க முடியாது. வளரிளம் பருவத்தில் ஓர் ஆண் குழந்தைக்கும், பெண் குழந்தைக்கும் இடையிலான காதல் சில நேரங்களில் மோகமாக எழுவதன் விளைவாக இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன.

காதல் உறவை `போக்ஸோ' சட்டத்தின் அடிப்படையில் பார்க்க முடியாது - கர்நாடக உயர் நீதிமன்றம்

இச்சட்டம் பாராட்டத்தக்கது என்றாலும், காதலில் விழும் சிறு குழந்தைகளை இதன் பேரில் தண்டிக்க முடியாது. வளரிளம் பருவத்தில் ஓர் ஆண் குழந்தைக்கும், பெண் குழந்தைக்கும் இடையிலான காதல் சில நேரங்களில் மோகமாக எழுவதன் விளைவாக இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன.

Published:Updated:
கர்நாடக உயர் நீதிமன்றம்

18 வயதுக்குக் கீழ் காதல் வயப்பட்டு உறவு கொள்கிறவர்களை, போக்ஸோ வழக்கின் கீழ் தண்டிக்கக் கூடாது என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  

2021-ம் ஆண்டு 18 வயது நிரம்பாத சிறுவனும் சிறுமியும் காதல் வயப்பட்டு பெங்களூரில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இவர்கள் சில நாள்களுக்குப் பிறகு சிக்மகளூரில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், 16 வயது சிறுவன் மீது போக்ஸோ என்கிற குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அச்சிறுவன் சில நாள்கள் போலீஸ் காவலில் இருந்த நிலையில், சிறார் நீதி வாரியத்தால் அவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. 

போக்ஸோ வழக்கில் கைது
போக்ஸோ வழக்கில் கைது
unknown

இந்நிலையில், இந்த வழக்கைத் தொடர விரும்பவில்லை என சிறுவன் - சிறுமி ஆகிய இருவரின் குடும்பத்தினரும் உயர் நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அச்சிறுவர்களின் இரு தரப்பினரும் வழக்கை முடித்துக்கொள்ள விரும்புவதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தெரிவித்தார்.

மேலும் அவர் போக்ஸோ சட்டம் குறித்துப் பேசுகையில்...  ``இந்தியாவில், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான போக்ஸோ குழந்தைகளைப் பாதுகாப்பதாக இருந்தாலும், பாலியல் வன்முறைக்கும், சிறுவர்களிடையே நிகழும் காதல் உறவுக்கும் இச்சட்டம் வேறுபாடு காட்டவில்லை. 

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இச்சட்டத்தின்படி, 18 வயதுக்குட்பட்ட ஒருவருடன் யாரேனும் பாலியல் ரீதியான உறவில் ஈடுபடுவது குறித்து தகவல் தெரிந்தால் அவர்கள் தண்டிக்கப்படுவர் என்று இருக்கிறது. இச்சட்டம் பாராட்டத்தக்கது என்றாலும், காதலில் விழும் சிறு குழந்தைகளை இதன் பேரில் தண்டிக்க முடியாது.

வளரிளம் பருவத்தில் ஓர் ஆண் குழந்தைக்கும், பெண் குழந்தைக்கும் இடையிலான காதல், சில நேரங்களில் மோகமாக எழுவதன் விளைவாக இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. இதன் காரணமாக ஆண் குழந்தை போக்ஸோ சட்டத்தின்கீழ் தண்டனைக்குட்படுத்தப்படுகிறான். இது தண்டனைக்குரிய செயல் என்கிற தெளிவு அவர்களுக்கு இல்லை. வயதுக்குண்டான முதிர்ச்சியற்ற உணர்ச்சி வேகத்தில் நடைபெறும் இது போன்ற செயல்களை நாம் பாலியல் வன்முறையின் கீழ் கொண்டு வரக்கூடாது" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

Pocso
Pocso

இந்தியாவில் பாலுறவுக்கு இசைவு தெரிவிக்கும் வயது 18 ஆக உள்ள நிலையில், அதன் அடிப்படையில்தான் போக்ஸோ சட்டம் இயங்குகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறவர்களுக்கும், காதல்வயப்பட்டு உறவு கொள்கிறவர்களுக்குமான வேறுபாட்டைப் பிரித்துப் பார்க்க வேண்டும் என்கிற கோரிக்கையை சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக முன் வைத்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு வரவேற்கத்தது.