Published:Updated:

20 வருடங்களுக்கு முன்பே `வெற்றிகரமான தோல்வி'யைச் சந்தித்தவர் சுஷ்மா! #VikatanInfographics

வருண்.நா
HARIF MOHAMED S

20 வருடங்களுக்கு முன்பே 'வெற்றிகரமான தோல்வி'யைச் சந்தித்தவர் சுஷ்மா.

Sushma Swaraj
Sushma Swaraj ( Vikatan )

"நான் சண்டையில் தோற்றிருக்கலாம்; ஆனால், போரில் வென்றுவிட்டேன்". 1999-ம் ஆண்டு பெல்லாரி நாடாளுமன்றத் தொகுதியில் அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராகத் தோல்வியடைந்த பின் சுஷ்மா சொன்ன வார்த்தைகள் இவை. சுஷ்மாவின் இந்தத் தோல்விக்குப் பின் ஒரு கதை இருக்கிறது.

சோனியாவுடன் சுஷ்மா
சோனியாவுடன் சுஷ்மா

1999 காலகட்டத்தில், பெல்லாரி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டை. பெல்லாரியில் எந்த வேட்பாளரைக் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிறுத்தினாலும் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவது நிச்சயம். அப்படியிருக்க, அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே 56,100 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றிபெற்றார். இதற்குக் காரணம், சுஷ்மா!

1999-ம் ஆண்டு தேர்தலில், சோனியா காந்தி பெல்லாரி தொகுதியில் நிற்பது கடைசி நேரத்தில்தான் முடிவானது. சோனியா காந்தி அங்கே நிற்கப்போகிறார் என்ற செய்தியறிந்ததும், அப்போதைய பி.ஜே.பி தலைவர் வாஜ்பாயிடம் அனுமதிபெற்று கடைசி நேரத்தில் பெல்லாரி தொகுதியில் நிற்க முடிவெடுத்தார் சுஷ்மா. நேரம் குறைவாக இருந்ததால், ஹெலிகாப்டர் மூலம் வந்து வேட்புமனுத்தாக்கல் செய்தார் சுஷ்மா. ஒரே வாரத்தில் கன்னடம் கற்று, கர்நாடக மக்களிடம் அம்மாநில மொழியில் பேசி வாக்கு சேகரித்து ஆச்சர்யப்படுத்தினார். 12 நாள்கள் மட்டுமே பெல்லாரியில் பிரசாரம் செய்த அவர் 3,58,000 வாக்குகள் பெற்றார். அத்துடன், வெறும் 7 சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே சோனியாவிடம் தோல்வியடைந்தார். இந்தத் தேர்தலுக்குப் பின் சுஷ்மா, சோனியாவின் போட்டியாளராகவே பார்க்கப்பட்டார்.

20 வருடங்களுக்கு முன்பே, 'வெற்றிகரமான தோல்வி'யைச் சந்தித்தவர் சுஷ்மா என்பதே இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

2004-ம் ஆண்டு, சோனியா காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப் போவதாகச் செய்திகள் வெளியானதும், "சுதந்திரம் பெற்று இத்தனை வருடங்கள் கடந்துவிட்டன. இப்போதும் நாட்டின் முக்கியப் பதவியான பிரதமர் பதவிக்கு இந்தியர் அல்லாத ஒருவரை முன்னிறுத்துவது, 'நாட்டிலுள்ள 100 கோடி மக்களால் ஓர் இந்தியரைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்க முடியவில்லை' என்பதையே உணர்த்தும். மக்களின் உணர்வுகளை இது புண்படுத்தும்" என்று தொடர்ந்து சோனியாவை விமர்சித்துவந்தார் சுஷ்மா.

சோனியாவைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது, நாட்டிலுள்ள 100 கோடி மக்களால் ஓர் இந்தியரைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்க முடியவில்லை என்பதையே உணர்த்தும்.
சுஷ்மா ஸ்வராஜ்

வரி ஏய்ப்பு மற்றும் ஐ.பி.எல் முறைகேடு தொடர்பான வழக்குகளில் தொடர்புடைய ஐ.பி.எல்லின் முன்னாள் தலைவர் லலித் மோடி பிரிட்டனிலிருந்து போர்ச்சுக்கல் செல்வதற்கு மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டு இருந்தபோதிலும், வெளியுறவுத்துறை அமைச்சராகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றார் சுஷ்மா. அந்த வெற்றிகளில் சிலவற்றைக் கீழேயுள்ள இன்ஃபோகிராபிக்ஸில் காணலாம்...

சுஷ்மா சாதனைகள்
சுஷ்மா சாதனைகள்
விகடன் இன்ஃபோகிராபிக்ஸ்

1952-ம் ஆண்டு தொடங்கி 2019-ம் ஆண்டுவரை சுஷ்மா ஸ்வராஜின் அரசியல் பயணத்தைக் கீழே காணலாம்...

சுஷ்மா அரசியல் பயணம்
சுஷ்மா அரசியல் பயணம்
விகடன் இன்ஃபோகிராபிக்ஸ்