Published:Updated:

தெருவில் குழந்தை பெற்ற கர்ப்பிணி... உதவியாளர் இல்லாததால் மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்ட கொடுமை!

Pregnant (Representational image) ( pixabay )

மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த பெண்ணுக்கு, பிரசவ வலி ஏற்பட்டுள்ளது; தெருவிலேயே கிடந்துள்ள அவருக்கு உதவ அக்கம் பக்கத்தினர் வந்துள்ளனர்.

தெருவில் குழந்தை பெற்ற கர்ப்பிணி... உதவியாளர் இல்லாததால் மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்ட கொடுமை!

மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த பெண்ணுக்கு, பிரசவ வலி ஏற்பட்டுள்ளது; தெருவிலேயே கிடந்துள்ள அவருக்கு உதவ அக்கம் பக்கத்தினர் வந்துள்ளனர்.

Published:Updated:
Pregnant (Representational image) ( pixabay )

ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் கர்ப்பிணியை மருத்துவமனையில் அனுமதிக்காததால், தெருவிலேயே குழந்தை பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

pregnant
pregnant
pixabay

சத்தீஸ்கர் பிளாஸ்பூரைச் சேர்ந்த பெண், திருப்பதி மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கும்படி கேட்டிருக்கிறார். ஆனால் அவரை பராமரிக்க, அப்பெண்ணுடன் யாரும் வராததால் மருத்துவமனை ஊழியர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் தெருவிலேயே கிடந்துள்ள அவருக்கு உதவ, அக்கம் பக்கத்தினர் வந்துள்ளனர். இதனிடையே அங்கேயே அப்பெண்ணுக்கு குழந்தையும் பிறந்தது. அப்பெண் குழந்தையைப் பெற்றெடுக்க உதவியவர், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிபவர் என்று கூறப்படுகிறது.

சுமார் 100 படுக்கைகள் வரை கொண்ட மருத்துவமனைக்கு எதிரிலேயே, அந்தப் பெண் கர்ப்ப வேதனையுற்று, தெருவில் குழந்தை பெற்ற சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Hospital (representational image)
Hospital (representational image)
pixabay

இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகியது. கீழே படுத்திருக்கும் கர்ப்பிணியை மறைக்க, பெண்கள் சிலர் சேலையை நான்கு புறம் பிடித்திருக்க, ஒருவர் அப்பெண்ணுக்குப் பிரசவம் பார்க்கும் காட்சி வெளியானது.  

குழந்தை பிறந்த பின், அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், ``கர்ப்பிணியைப் பார்த்துக் கொள்ள உதவியாளர் இல்லை என்றாலும், எந்தவொரு கர்ப்பிணிக்கும் அனுமதி மறுக்கப்படாது’’ எனவும் உறுதி அளித்துள்ளனர்.

இது குறித்து திருப்பதி மாவட்ட சுகாதாரப் பொறுப்பாளர் ஸ்ரீஹரி கூறுகையில், ``இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு தவறு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.