Published:Updated:

"விருந்தினர் நீங்க... சங்கடப்படுத்தக் கூடாதுதான், ஆனாலும்..."- ஜனாதிபதிக்கு நளினியின் அம்மா கடிதம்!

நளினி, பத்மா (நளினியின் அம்மா)

"கீழ் கோர்ட்டு, தனி கோர்ட்டு. மேல் கோர்ட்டுன்னு நாட்டுல உள்ள எல்லா கோர்ட்டும் விசாரிச்சு தூக்கு மேடை வரை கொண்டு போய் நிறுத்தினாங்க. இப்ப நான் உங்ககிட்ட கேக்கற‌ கருணையை அன்னைக்கும் சிலர் தந்தாங்க‌."

"விருந்தினர் நீங்க... சங்கடப்படுத்தக் கூடாதுதான், ஆனாலும்..."- ஜனாதிபதிக்கு நளினியின் அம்மா கடிதம்!

"கீழ் கோர்ட்டு, தனி கோர்ட்டு. மேல் கோர்ட்டுன்னு நாட்டுல உள்ள எல்லா கோர்ட்டும் விசாரிச்சு தூக்கு மேடை வரை கொண்டு போய் நிறுத்தினாங்க. இப்ப நான் உங்ககிட்ட கேக்கற‌ கருணையை அன்னைக்கும் சிலர் தந்தாங்க‌."

Published:Updated:
நளினி, பத்மா (நளினியின் அம்மா)

நாட்டின் முதல் குடிமகனான மாண்புமிகு ஜனாதிபதி ஐயா அவர்களுக்கு...

வணக்கம்.

நீங்க எங்க ஊருக்கு அரசு முறைப் பயணமா, விருந்தினரா வந்திருக்கீங்க. விருந்தினரா வந்தவர்கிட்ட என் வேதனையைக் கொட்டி சங்கடப்படுத்தக் கூடாதுதான். ஆனாலும் என் மனசு கேக்காம அலை மோதுது. 'ஒருமுறை கேட்டுப் பாரேன்'னு சொல்லுது.

'இதுல இனி அவர்தான் முடிவை எடுக்கணும்'னு எல்லாரும் உங்களை நோக்கித்தான் கை காட்டுறாங்க. அதனாலதான் உங்களுக்கு இப்படியெல்லாம் ஒரு லெட்டர் எழுதலாமானு கூட யோசிக்கத் தோணாமக் கேக்கறேன்.

ஒண்ணுமில்லைய்யா. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குல சிறைக்குப் போய் 31 வ்ருஷமா ஜெயில்ல இருக்கிற என் மக‌ நளினிக்கு இப்ப வயசு 57. இன்னைக்கு வந்திடுவா, நாளைக்கு வந்திடுவான்னு நான் காத்துக் கிடந்து காத்துக் கிடந்து கண்ணு பூத்துப் போனதுதான் மிச்சம். எத்தனையோ விசாரணைகள், ஏராளமான தீர்ப்புகள்... வெளியில வந்துடுற மாதிரி நம்பிக்கை தெரியும். ஆனா, கடைசியில அப்படி எதுவும் நடக்காது.

ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த்
ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த்
twitter.com/rashtrapatibhvn

எத்தனையோ அரசுகள் மாறிடுச்சு. ஆட்சியாளர்கள் மாறிட்டாங்க. மாறாதது என் கண்ணீர் மட்டும்தான்யா.

உங்களுக்கு ஒண்ணு தெரியுமாய்யா. அந்தத் துயரமான சம்பவத்தால பாதிக்கப்பட்டவங்கள்ல கூட அதிகமான பேர் என் குடும்பத்தினர்தான். நான், என் பொண்ணு, மகன், மருமகன்னு நாலு பேர் நரக வேதனையை அனுபவிச்சோம். கைது, விசாரணை, ஜெயில்வாசம், அதுக்குப் பிறகு வெளியில வந்து சமூகத்தோட ஒட்ட முடியாத ஒரு வாழ்க்கைன்னு இந்த தேதி வரைக்கும், 'ஏன்டா இப்படி ஒரு ஜென்மம் எடுத்தோம்'னு நினைச்சுட்டேதான் வாழ்ந்திட்டிருக்கோம்.

தேவையே இல்லாம என் குடும்பம் இந்த விவகாரத்துல மாட்டுச்சு. 'நாங்க அப்பாவிங்க'ன்னு கத்திக் கத்தி என் தொண்டைத்தண்ணி வத்திடுச்சு, ஒரு கட்டத்துக்குப் பிறகு இதுக்கெல்லாம் இனி அவசியமில்லைன்னு விட்டுட்டேன்

கீழ் கோர்ட்டு, தனி கோர்ட்டு. மேல் கோர்ட்டுன்னு நாட்டுல உள்ள எல்லா கோர்ட்டும் விசாரிச்சு தூக்கு மேடை வரை கொண்டு போய் நிறுத்தினாங்க.

இப்ப நான் உங்ககிட்ட கேக்கற‌ கருணையை அன்னைக்கும் சிலர் தந்ததால தூக்கு மேடையில இருந்து இறங்கிட்டா என் பொண்ணு.

அந்த நேரத்துல, 'இது போதும் சாமி, என் பொண்ணு ஜெயில்லயாச்சும் உயிரோட இருக்கட்டும்'னு நினைச்சுகிட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனா பெத்த மனசு கேக்க மாட்டேங்குது. மகளுக்கே 57 ங்கிற போது என் வயசு எத்தனை இருக்கும்னு உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. வாழ்க்கையின் அந்திமக் காலத்துல நிக்குறேன். கடைசிக் கொஞ்ச நாளாச்சும் மகளுடன் இருக்கலாம்னு நினைக்கிறேன். அவளைப் பார்க்காம, கொஞ்ச நாளாச்சும் அவ கூட வாழாமப் போயிட்டா என் கட்டை வேகாதுய்யா. என் பொண்ணுமே பல நோய்களால அவதிப்படறா. ஜெயில்ல ஒழுங்கா இருந்து நன்னடத்தை சர்டிபிகேட் எல்லாம் வாங்கிருக்காய்யா. அவளை எங்கிட்டக் கொடுத்துட நீங்க நினைச்சா முடியும்கிறாங்கய்யா. அதனாலதான் உங்ககிட்ட மன்றாடிக் கேக்கறேன்.

நளினி
நளினி

எனக்கு சட்டம் தெரியாதுய்யா. பெரிய வக்கீல்கள், நீதிபதிகள்லாம் விசாரிச்சு 'விட்டுலாம்னு சொல்லிட்டாங்க'ன்னு காதுகளுக்குச் செய்தி வந்தது. ஆனா என்ன தடங்கலோ, அது நடக்க மாட்டேங்குது.

இப்ப நீங்க எடுக்கறதுதான் முடிவுன்னு தெரியவர்றதால உங்ககிட்ட கேக்கறேன். உங்க நாட்டுல கண்ணீரும் கம்பலையுமா வருடக்கணக்கா வாழ்க்கையை நகர்த்திட்டிருக்கிற வயதான ஒரு தாயோட கண்ணீர்க் கோரிக்கையைப் பரிசீலனை பண்ணி, என் பொண்ணு வீட்டுக்கு வர ஒரு உத்தரவு போடுவீங்களாய்யா?

கண்ணீருடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும்,

பத்மா

(நளினியின் அம்மா)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism