Election bannerElection banner
Published:Updated:

``விருது வாங்கும்போதும் வறுமையே நினைவுக்கு வந்தது!"-கலங்கிய பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா ( instagram )

என்னை நம்பி அவர்களின் துயரங்களைப் பகிர்ந்த எல்லாக் குழந்தைகளின் முகமும் இப்போது என் கண்முன் வந்துபோகிறது.

பாலிவுட் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா. திரைப்படங்களில் நடிப்பதும் குழந்தைகள் மற்றும் பெண்கள் நலன் குறித்த செயல்பாடுகளில் 18 ஆண்டுகளாகத் தன்னை ஈடுபடுத்தி வருபவர். தன் செயல்பாடுகள் மூலம் யுனிசெஃப் நிறுவனத்தின், குழந்தைகளுக்கான நல்லெண்ணத் தூதராக 2006-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார்.

தாமதமாக வந்த பிரியங்கா சோப்ரா-நிக்; காத்திருந்த `வொண்டர் வுமன்’ #DiorFashionShow
பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா
instagram

அதன்பின் உலகெங்கும் உள்ள பல நாடுகளுக்குச் சென்று, அந்நாட்டில் குழந்தைகளின் கல்வி, பொருளாதார நிலை, அவர்களின் வாழ்வியல் முறைகள் போன்றவற்றை உலகறியச் செய்தார். எங்கேனும் உதவிகள் தேவைப்படும் நாடுகளின் நிலை இருந்தால் ஐ.நாவுக்குத் தெரியப்படுத்தி, அதன் மூலம் மாற்றங்களை ஏற்படுத்திவந்தார். இந்த நிலையில், யுனிசெஃப் அமைப்பின் `டேனி கே' மனிதாபிமானத்துக்கான விருது பிரியங்கா சோப்ராவுக்கு நேற்று (4.12.2019) வழங்கப்பட்டுள்ளது.

யுனிசெஃப் அமைப்பு `ஸ்நோஃப்ளேக் பால்' என்ற நிகழ்ச்சியை, கடந்த 15 ஆண்டுகளாக நடத்திவருகிறது. இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் சமூக செயல்பாடு உட்பட பல பிரிவுகளில் சிறப்பாகச் செயல்படுபவர்கள் தேர்வுசெய்யப்பட்டு, விருதுகள் மூலம் கௌரவிக்கப்படுவார்கள். நேற்று, நியூயார்க்கில்  நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் தாயுடன் வந்து விருதைப்பெற்றிருக்கிறார் பிரியங்கா.

விருது குறித்து அவர் பேசும்போது, ``நான் விருதுக்காகச் செயல்பட்டது இல்லை. ஆனால், இந்த விருது இப்போது என் கையில் இருப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது. மனிதாபிமான விருதை நான் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன். என்னை நம்பி அவர்களின் துயரங்களைப் பகிர்ந்த எல்லாக் குழந்தைகளின் முகமும், அவர்களின் வறுமையும்தான் இப்போது என் கண்முன் வந்துபோகிறது.

அவர்கள்தான் என்னை இந்த இடத்தில் நிறுத்தியிருக்கிறார்கள். நாம் வசதியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால், சாப்பாடு கிடைக்காமல் இன்னும் எத்தனையோ குழந்தைகள் தங்களுடைய இளமைக்காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

பிரியங்கா சோப்ரா பகிர்ந்த புகைப்படம்
பிரியங்கா சோப்ரா பகிர்ந்த புகைப்படம்
instagram

விருது கையில் இருப்பதைக் கூடுதல் பொறுப்பாக உணர்கிறேன். எனக்கு அளிக்கப்பட்ட இந்த விருதை உலகமெங்கும் உள்ள குழந்தைகளின் அமைதி, சுதந்திரம், கல்விக்காகச் சமர்ப்பிக்கிறேன். குழந்தைகளின் நலனுக்கான பணிகளில் என்னுடைய பணி தொடர்ந்து இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு