Published:Updated:

“தமிழகம்தான் என்னை சமமாக நடத்தியது!”

சோனாஜரியா மின்ஸ்.
பிரீமியம் ஸ்டோரி
சோனாஜரியா மின்ஸ்.

கேரள மாநிலம் வயநாட்டில் ஒரு ஆதிவாசி மாணவன் அவனின் அடை யாளத்தைக் காரணம்காட்டி சக மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் கொடுமைப்படுத்தப்பட்டுப் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறான்.

“தமிழகம்தான் என்னை சமமாக நடத்தியது!”

கேரள மாநிலம் வயநாட்டில் ஒரு ஆதிவாசி மாணவன் அவனின் அடை யாளத்தைக் காரணம்காட்டி சக மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் கொடுமைப்படுத்தப்பட்டுப் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறான்.

Published:Updated:
சோனாஜரியா மின்ஸ்.
பிரீமியம் ஸ்டோரி
சோனாஜரியா மின்ஸ்.

பேராசிரியர் சோனாஜரியா மின்ஸ்... பழங்குடி சமூகத்தில் பிறந்து, தடைகளையெல்லாம் கடந்து ஜார்க்கண்ட் மாநிலம், டும்கா பகுதியில் அமைந்துள்ள சிடோ கன்ஹு முர்மு பல்கலைக் கழகத்தின் (எஸ்.கே.எம்.யூ) துணைவேந்தராக உயர்ந்திருக்கிறார்.

டெல்லி ஜே.என்.யுவில் உள்ள கணினி மற்றும் கணினி அறிவியல் துறையில் 28 வருடங்கள் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். ஜே.என்.யூ-வின் ஆசிரியர் சங்கத்தின் (JNUTA) தலைவராகச் செயல்பட்டவர். ஒடுக்கப்பட்டோர் மற்றும் ஆதிவாசி இன மக்களின் உரிமைக்குரலாக ஒலிப்பவர். ஒரு மாலையில் அவரின் பயணம் குறித்து உரையாடினேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“மத்திய இந்தியாவில், பீகார் மாநிலத்திலுள்ள ஓரான்தான் என் சொந்த கிராமம். என் அப்பா நிமல் மின்ஸ் ஜார்க்கண்டின் பிரபல சுதந்திரப் போராட்ட வீரர். நாங்கள் பேசும் மொழி ‘குறுக்’ (kurukh). தமிழுக்கும் எங்கள் மொழிக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. கண், உட்காரு போன்ற தமிழ் வார்த்தைகளின் பொருள் எங்கள் மொழியிலும் ஒன்றுதான். ஊர் முழுக்கவும் திராவிட முகங்களே தென்படும்.

ராஞ்சியிலுள்ள ஒரு தனியார் கிறிஸ்துவப் பள்ளியில் படித்தேன். அந்தப் பள்ளியில் என்னையும் சேர்த்து நிறைய ஆதிவாசி மாணவர்கள் பயின்றுவந்தார்கள். என்னதான் நான் எப்போதும் நன்கு படித்து நல்ல ரேங்க் வாங்கினாலும் நான் ஆதிவாசிப் பெண் என்பதால் என் ஆசிரியர்களே எனக்கு மிகவும் தொல்லை கொடுப்பார்கள். ஆனால் அரசாங்கப் பள்ளியில் படித்த மற்ற ஆதிவாசி மாணவர்கள் எதிர்கொண்ட கடின நிராகரிப்புகளைக் காட்டிலும் எனக்கு நிகழ்ந்தது குறைவே.

சோனாஜரியா மின்ஸ்.
சோனாஜரியா மின்ஸ்.

பள்ளிப்படிப்பை முடித்தபின் கல்லூரி பற்றிய பேச்சு வந்தபோது, ‘ஒப்பீட்டளவில் வடஇந்தியாவைவிடத் தென்னிந்தியாவில் பாகுபாடு பார்க்கும் மனோபாவம் குறைவு’ என்று என் அப்பா சொன்னார். ‘வடஇந்தியாவில் உன் திராவிடத் தோற்றத்தை வைத்து கேலி செய்வார்கள். தென்னிந்தியா சென்று படி... நிறைய கற்றுக்கொள்வாய்... பாகுபாடும் இருக்காது’ என்று அறிவுறுத்தினார். இப்போதுகூட என் தோற்றத்தை வைத்து கேலி செய்வார்கள். ஒரு முறை என் மகளை அழைக்க அவள் படிக்கும் பள்ளிக்குச் சென்றபோது அவள் தோழி என்னைப் பார்த்து, ‘யார் இது, உங்கள் வீட்டு வேலைக்காரியா?’ எனக் கேட்டாள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வீட்டில் பொருளாதாரச் சிக்கல் இருந்தாலும் எல்லோரும் படித்தவர்கள். என் அப்பா நண்பர் ஒருவரின் தயவில் ஸ்காலர்ஷிப்பில் சென்னை வுமன்ஸ் கிறிஸ்டியன் காலேஜில் (WCC) இளங்கலையும், மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜில் (MCC) முதுகலையும் முடித்தேன். தென்னிந்தியாவில் சாதிப்பாகுபாடு இருந்தாலும் என் கல்லூரிகளில் படிக்க நல்ல சூழலே அமைந்தது. நான் ஒரு ஆதிவாசிப் பெண் என்பதைக் கல்லூரியிலும் சரி, பொது வெளியிலும் சரி... சொல்லிக்கொண்டதே இல்லை. துணைவேந்தர் அறிவிப்பு வந்தபின்புதான் நான் ஆதிவாசி இனப் பெண் என்பது என் கல்லூரி நண்பர்களுக்கே தெரியும்.”

“பல வருடங்கள், பல கல்லூரிகளில் பேராசிரியராகப் பணிபுரிந்திருக்கிறீர்கள் அந்த அனுபவம் பற்றிக் கூறுங்கள்?’’

“முதன்முதலில் போபாலில் உள்ள பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணிபுரிந்தேன். 10 மாதங் களுக்குப் பின்னர் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் கணினிப் பொறியியல் பிரிவில் பணிபுரிந்தேன். 1992-ல் ஜே.என்.யூ-வில் துணைப்பேராசிரியை... 2005 முதல் பேராசிரியை... 1992-ல் நான் ஜே.என்.யூ-வில் பேராசிரியராகப் பணியில் சேரும்போதுகூட ஆதிவாசிகளுக்கான ஒதுக்கீடு என்பது வரவில்லை. அன்ரிசர்வ்டு (unreserved) கோட்டாவில்தான் நான் பணியில் சேர்ந்தேன். இதுவரை எந்த விண்ணப்பப் படிவத்திலும் நான் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவள் என்று குறிப்பிட்டதே இல்லை. ஏன், மதுரையில்கூட நான் இட ஒதுக்கீட்டில் சேர வில்லை.”

“நம் நாட்டில் தொழில்நுட்பம் நன்கு வளர்ந்த இந்நாளிலும் ஆதிவாசிக் குழந்தைகள் பள்ளி, கல்லூரிகள் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே உள்ளதே?”

“சமீபத்தில்கூட ஒரு விஷயம் கேள்விப்பட்டு அதிர்ச்சியுற்றேன். கேரள மாநிலம் வயநாட்டில் ஒரு ஆதிவாசி மாணவன் அவனின் அடை யாளத்தைக் காரணம்காட்டி சக மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் கொடுமைப்படுத்தப்பட்டுப் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறான். என் வாழ்க்கையிலிருந்து கூறுகிறேன். ஆதிவாசி அல்லாத ஒரு ஆசிரியர், சுமாராகப் படிக்கும் ஆதிவாசி மாணவர்களின் வாழ்நிலை, சூழல் தெரியாமல் மட்டம் தட்டவே செய்வார். அதுவே ஒரு ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் அக்குழந்தையின் சமூகப் பொருளாதார நிலையைப் புரிந்துகொண்டு ஊக்குவிப்பார். அந்த மனநிலை அனைத்து ஆசிரியர்களுக்கும் வரவேண்டும்.”

“தமிழகம்தான் என்னை சமமாக நடத்தியது!”

“மாணவர்களின் சமூகப் பொறுப்புணர்வு என்பது எந்த அளவிற்குக் கல்லூரிகளில் கற்றுத் தரப்படுகிறது. அதற்கான தேவை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது?”

“இங்கு சாதிய ஒடுக்கு முறைகள் இருக்கின்றன. அனைவரும் சமம் என்ற எண்ணமே இங்கு எவரிடமும் இல்லை. நமது நாட்டின் கல்வி, ஒரு மனிதன் இன்னொரு மனிதனை சமமாக மதிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுக்கவில்லை என்றால், எதற்கு அந்தக் கல்வி என்ற கேள்வியே இங்கே எழுகிறது. அது தனிமனித வாழ்க்கையை மட்டுமே முன்னேற்றுகிறது. ஆதிவாசி சமூகத்தினர் கல்வி பயின்று பொருளாதார ரீதியாக வளர்ந்தாலும் சமூகத்தின் பார்வையில் அவர்கள் வித்தியாசமாகவே பார்க்கப்படு கின்றனர். எங்கள் திறன்கள் சமூக அடை யாளங்களால் எப்போதும் கேள்விக் குறியாகவே இருக்கின்றது. இச்சூழலே மனிதர்களை சமமற்றதாக மாற்றுமெனில் மாணவர்களே இதைப்பற்றி வெளியே பேசவும் எடுத்துச் செல்லவும் முடியும். அவர்கள் தான் அனைவரையும் சமமாக நடத்தவும் சமமாக்கவும் முடியும். அந்த எதிர்காலத்தை அவர்களுக்காக அவர்களே உருவாக்குகிறார்கள்... உருவாக்குவார்கள்.”

“தமிழகத்தில் மாணவராகவும் படித்துள்ளீர்கள். பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளீர்கள். சமூகப் பொறுப்புணர்வைத் தமிழகச் சூழலில் காண நேர்ந்ததா?’’

“ஒடுக்கப்பட்டு வாழ்ந்துவந்த என்னை முதன் முதலில் தமிழகம்தான் சரிசமமாகப் பார்த்தது. உண்மையில் தமிழ் நாட்டில்தான் நிறைய கற்றுக் கொண்டேன். கல்லூரியில் ஹாக்கி விளையாடுவேன். அப்போது இருந்த இந்திய அணியில் பீகார் பெண்மணிகள் நிறைய இருந்ததால் என்னையும் ஊக்குவித்தார்கள். நானும் விளையாடி தமிழக ஹாக்கி டீமின் வெயிட்டிங் லிஸ்டில்கூட இருந்தேன். பின், அந்தப்பாதை மிகவும் கடினம் என்பதால் விட்டுவிட வேண்டியதாயிற்று. வட இந்தியாவில் என் குடும்பப்பெயரைப் பார்த்த உடனே ஆதிவாசி என்று கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனால் இங்கு அது நடக்கவில்லை. சுதந்திரப் பறவையாக இருந்தேன். தமிழகத்திற்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். அது போலவே தமிழ்நாட்டில்தான் முதன்முதலாக ஈவ் டீசிங் போன்ற கசப்பான அனுபங் களையும் அனுபவித்திருக்கிறேன்.”

“சிடோ கன்ஹு முர்மு பல்கலைக்கழகத்தை நம்பிதான் நிறைய ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள். அவர்களின் வளர்ச்சிக்கு என்ன மாதிரியான எதிர்காலத்திட்டம் வைத்திருக்கிறீர்கள்?”

“முதலில் அந்தப் பல்கலைக் கழகத்தை உருவாக்கிய மனிதர்களின் நோக்கத்தையும் லட்சி யத்தையும் நான் அறிய விரும்புகிறேன். அவர்களின் கனவை, லட்சியங்களை நோக்கி ஓடும் ஓட்டப்பந்தயத்தில் அவர்களோடு சேர்ந்து நானும் ஓட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அங்கு படிக்கும் ஆதிவாசி மாணவர்களுக்கு அவர்கள் அடையாளத்தை நினைத்துப் பெருமைப்படும் வகையில் அவர்தம் கலாசாரங்கள், அவர்கள் சமூகத்தின் உயர்ந்த மனிதர்கள், அழிக்கப்பட்ட வரலாறுகள், அவர்களின் மண் சார்ந்த ஆய்வுகள், தற்காலக் கோட்பாடுகள், கருத்துகள், பருவநிலை மாற்றங்கள் போன்ற ‘பழங்குடிகள்’ ( Tribal) பற்றி மட்டுமே படிக்க தனித் துறையை உருவாக்கவேண்டும் என்பது பெரும் கனவு உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஹாக்கி போன்ற பல விளையாட்டு களுக்கு மாணவர்களை அனுப்ப வேண்டும். அவர்களுக் கான வெளியை விசாலப்படுத்த வேண்டும். எங்கள் ஊரின் பாரம்பரிய முரசைப் பெண்கள் இசைக்கக் கூடாது என்பதுபோன்ற ஐதிகங்கள் முன்பு நிலவி வந்தன. இப்போது பெண்கள் முரசு கொட்ட ஆரம்பித்துவிட்டனர். ஆண்கள் ஆட ஆரம்பித்து விட்டனர். காலம் மாறி வருகி றதல்லவா... நான் மாற்றத்தை ஏற்படுத்த முயல்வேன்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism