Election bannerElection banner
Published:Updated:

`இனி பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம்!' - பஞ்சாப் அரசின் பலே அறிவிப்பு

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்

''பெண்களின் வளர்ச்சியை மாநிலத்தின் வளர்ச்சியாகப் பார்க்கிறோம்.''

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்குவதால், ஒவ்வொரு கட்சியும் பெண்களின் வாக்கைப் பெற, பெண்கள் நலன் சார்ந்த அறிவிப்பாக, இல்லத்தரசிகளுக்கு மாதாந்தர ஊதியம் போன்றவற்றைப் போட்டி போட்டுக்கொண்டு அறிவித்து வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் அரசின் மகளிர்தின அறிவிப்பு பெண்கள் பலரிடமும் வரவேற்பைப் பெற்று வருகிறது. மார்ச் - 8 உலக அளவில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

Women's day
Women's day

அலுவலகங்கள் தொடங்கி, ஊடகங்கள் வரை பெண்களை போற்றும் விதமாகப் பல சிறப்பு நிகழ்ச்சிகள் அரங்கேறின. பெண்கள் தினம் கொண்டாடப்படுவதைப் பெருமையாகப் பார்த்தாலும், இந்தக் கொண்டாட்டங்களுக்குப் பதிலாக எங்களுக்கு உரிய மரியாதை கொடுத்தால் போதும் என்பதே பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது.

மகளிர் தினத்தைக் கொண்டாடும் விதமாக, பஞ்சாப் அரசு, தன்னுடைய மாநில பட்ஜெட்டில் மாற்றங்கள் செய்து, பஞ்சாப் மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்தில் பெண்கள் எப்போதும் இலவசமாகப் பயணிக்கலாம் என்ற திட்டத்தை நடைமுறைப் படுத்தியுள்ளது. இது குறித்து பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் பேசியபோது, ''பஞ்சாப் மாநிலம் முழுவதும், அரசுப்பேருந்தில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் சலுகையை அளிப்பதில் பஞ்சாப் மாநிலம் பெருமை கொள்கிறது.

`புது வீடு வாங்கிட்டோம்; அடுத்து சுவிஸ் ட்ரிப்தான்!' - `கோடீஸ்வரி' கெளசல்யா கார்த்திகா ஹேப்பி

பெண்களின் வளர்ச்சியை மாநிலத்தின் வளர்ச்சியாகப் பார்க்கிறோம். மேலும், பெண்களின் நலம் மற்றும் பாதுகாப்புக்காக 8 புதிய திட்டங்களை நடைமுறைப் படுத்துகிறோம். பஞ்சாப் மாநிலம் முழுவதும் 2047 பெண் ஆசிரியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். 181 காவல் நிலைய ஹெல்ப் லைன் தொடங்கப்பட இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் மார்ச் 8 சாதனைப் பெண்கள் இனி கொண்டாடப்படுவார்கள்" என்று தெரிவித்திருந்தார்.

வெல்டன் முதல்வா!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு