‘ஆனந்த விகடன்’ வாசகர்களுக்காக வாரந்தோறும் ஒவ்வொரு விஷயத்தைப் பரிந்துரைக்கிறார்கள் பிரபலங்கள். இந்த வாரம் ‘ சைபர் செக்யூரிட்டி மற்றும் பிரைவசி ஃபவுண்டேஷன்’ நிறுவனத்தின் சி.இ.ஓ ஜெ. பிரசன்னா, பெண்களுக்கான சைபர் பாதுகாப்பு பற்றிப் பேசுகிறார்.

போன்கால்களில் எச்சரிக்கை தேவை

‘OTP வேண்டும் இல்லையென்றால் உங்களது ATM கார்டு பிளாக் செய்யப்படும்’ என்பது போன்ற அழைப்புகளின் ஒரே நோக்கம், வங்கிக் கணக்கின் தகவல்களைப் பெறுவதாகத்தான் இருக்கும். அவர்கள் கேட்கும் தகவல்களைத் தெரிவித்தால் வங்கிக்கணக்கில் இருக்கும் பணம் காணாமற்போகும். இதைப் பற்றித் தெரிந்தவர்களேகூட சில சமயங்களில் ஏமாந்து விடுகிறார்கள். வங்கிகளும், அரசும் தொடர்ந்து எச்சரித்து வந்தாலும் இந்த மோசடி குறைந்தபாடில்லை. இதுபோன்ற அழைப்புகளை அறிந்துகொள்ள/ தவிர்க்க ட்ரூகாலர் போன்ற ஆப்களை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இப்போது போன்களில் இன்பில்ட்டாகவே மொபைல் நம்பரை அடையாளம் காணும் வசதி இருக்கிறது. இவற்றின் மூலமாக மோசடி அழைப்புகளை ஓரளவுக்குத் தவிர்க்கவும் முடியும்.

கேமராவில் ஒரு கண் இருக்கட்டும்

லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்பில் இருக்கும் கேமரா வீடியோ சாட் செய்வதற்கு உதவுகிறது. அதுவே சில சமயங்களில் வீட்டை உளவு பார்க்கும் வழியாகவும் மாறிவிடுகிறது. குற்றவாளிகள் அனுப்பி வைக்கும் ஸ்பேம் லிங்குகளை நீங்கள் க்ளிக் செய்வதன் மூலமாக வேவு பார்க்கும் அப்ளிகேஷன்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்படுகின்றன. அதைப் பயன்படுத்தி அறையில் நடப்பவற்றை அவர்கள் பார்க்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் மற்றும் குழந்தைகள்தான். இதை முழுமையாகத் தடுக்க ஒரு வழி இருக்கிறது. கேமராவின் மேலே ஒரு சின்ன டேப் அல்லது ஸ்டிக்கரை ஒட்டி வைக்கலாம். தேவைப்படும் நேரத்தில் அதை எடுத்துவிட்டு கேமராவைப் பயன்படுத்தலாம்.

மேட்ரிமோனியல்/ டேட்டிங் வெப்சைட்டுகளில் போலிகள்... கவனம்

வரன் தேடுபவர்கள் இன்று மேட்ரிமோனியல் வெப்சைட்டுகளைப் பயன்படுத்துவது சாதாரணமாகிவிட்டது. அப்படிப் பயன்படுத்தினால் அந்தக் கணக்கை நிர்வகிக்கும் பொறுப்பைப் பெற்றோர்களிடம் ஒப்படைத்து விடுவது நல்லது. ஒருவரைப் பிடித்திருந்தால் நன்றாக விசாரித்து விட்டு நேரில் பார்க்கச் செல்லலாம். அடுத்ததாக, பெண்கள் டேட்டிங் தளங்களில் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியம். ஒருவரிடம் பேசும் முன்பாக அவரது கணக்கு வெரிஃபை செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். யாரிடமாவது பேச விரும்பினால் வாட்ஸ் அப்புக்குப் பதிலாக, சாதாரணமாக போன் செய்து பேசலாம். அதற்கடுத்ததாக வேண்டுமானால் வாட்ஸ் அப்பில் வீடியோ கால் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். அப்போது நடவடிக்கைகளில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அவரைத் தவிர்த்து விடுவது நல்லது.

தாராளமாக ‘நோ’ சொல்லுங்கள்

சமூக வலைதளங்களில் உங்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கொடுக்க வேண்டும் என்பது அவசியம் கிடையாது. அப்படியே இருந்தாலும் அவற்றை மற்றவர்களின் பார்வையிலிருந்து மறைத்து விடுங்கள். போட்டோக்களை அப்லோடு செய்யும்போது இருப்பிடம் தொடர்பான தகவல்களை அதில் சேர்க்க வேண்டாம். தெரியாத நபரிடமிருந்து வரும் நட்பு அழைப்புகளை ஒருபோதும் ஏற்காதீர்கள். இருப்பிடம் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் சமூக வலைதளங்களில் அப்டேட் செய்வதையும் தவிர்த்து விடுங்கள். குறிப்பாகச் சமூக வலைதளங்களில் பழக்கமில்லாத நபர்கள் சந்திக்க விரும்பினால் மறுத்துவிடுங்கள். சந்தித்தே ஆக வேண்டிய கட்டாயம் என்றால் காபி ஷாப், மால் போன்ற பொதுவான இடத்தைத் தேர்ந்தெடுங்கள்.

அவசர உதவிக்குக் கைகொடுக்கும் செயலிகள்

ஆபத்து நேரத்தில் மொபைலில் இருக்கும் சில ஆப்கள் உதவி செய்யும். அது போன்ற சில செயலிகளைக் கட்டாயமாக மொபைலில் இன்ஸ்டால் செய்துகொள்ள வேண்டியது அவசியம். எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டுக் காவல்துறை அறிமுகப்படுத்தியிருக்கும் ‘காவலன் SOS’ என்ற ஆப்பைக் கூறலாம். இதன் மூலமாக ஆபத்தில் இருக்கும்போது யாரிடம் தெரிவிக்க வேண்டும் என்று குழப்பமடையாமல் இருக்கலாம். இந்த ஆப்பைப் பயன்படுத்தச் சில நொடிகளே ஆகும் என்பதால் உதவியும் வேகமாகக் கிடைக்கும். இதைப் பதிவிறக்கம் செய்து உங்களைப் பற்றிய தகவல்கள், உறவினர்களின் தொடர்பு எண்கள் ஆகியவற்றைப் பதிவு செய்துகொள்ளலாம். இதன் மூலமாக ஒரே க்ளிக்கில் காவல்துறை மற்றும் உறவினர்களுக்கு ஆபத்தில் இருப்பதைத் தெரிவிக்க முடியும்.