Published:Updated:

``பினாமியாக அல்ல; பெண்கள் நேரடியாக அரசியலுக்கு வர வேண்டும்!" - முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகாமி

சிவகாமி ஐ.ஏ.எஸ்

``பெண்கள் அனைத்துத் துறைகளிலும் இருக்கிறார்கள். அதேபோல நேரடி அரசியலில் ஈடுபட்டு சட்டமன்றம், நாடாளுமன்றம் என்று செல்லும்போதுதான் பெண்களுக்குத் தேவையான உரிமைகள் தொடர்பாக மட்டுமல்லாமல் நாட்டு மக்களுக்காகவும் உழைக்க முடியும்."

``பினாமியாக அல்ல; பெண்கள் நேரடியாக அரசியலுக்கு வர வேண்டும்!" - முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகாமி

``பெண்கள் அனைத்துத் துறைகளிலும் இருக்கிறார்கள். அதேபோல நேரடி அரசியலில் ஈடுபட்டு சட்டமன்றம், நாடாளுமன்றம் என்று செல்லும்போதுதான் பெண்களுக்குத் தேவையான உரிமைகள் தொடர்பாக மட்டுமல்லாமல் நாட்டு மக்களுக்காகவும் உழைக்க முடியும்."

Published:Updated:
சிவகாமி ஐ.ஏ.எஸ்

சமூக சமத்துவப்படை கட்சியின் நிறுவனரான ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகாமி தற்போது அதிமுக கட்சியுடன் இணைந்து கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடவுள்ளார். அவரிடம் பேசினோம்.

சிவகாமி ஐ.ஏ.எஸ்
சிவகாமி ஐ.ஏ.எஸ்

``கட்சி ஆரம்பித்ததிலிருந்து இந்த கவுன்சிலர் வேட்பாளரான வரை மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறேன். எம்.எல்.ஏ., எம்.பி பதவிகள் மட்டுமல்ல கவுன்சிலர் பதவியும் மரியாதைக்குரிய முக்கியமான ஒன்றுதான். தவிர கவுன்சிலர் பதவி என்பது அந்த வார்டை சேர்ந்த மக்கள் எனக்குத் தருகிற அங்கீகாரம் என்றே நான் நினைக்கிறேன். தேர்தலில் வெற்றிபெற்றால் என் வார்டு மக்களின் குறைகளைக் காது கொடுத்துக் கேட்பேன். அவர்களுக்குத் தேவையானதை நிச்சயம் செய்து கொடுப்பேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கார்ப்பரேஷன் தேர்தலில் 50 சதவிகிதம் பெண்களுக்கு என்று ஒதுக்கும்போது அதற்கான பெண் வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் தேட ஆரம்பிக்கின்றன. பெண்கள் சமூக சேவை செய்வதும் அரசியல் தொடர்பாக எழுதுவதும் பேசுவதும் மட்டும் போதாது. பெண்கள் அவர்களுக்குப் பிடித்த அரசியல் கட்சியில் இணைந்து நேரடி அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.

சிவகாமி ஐ.ஏ.எஸ்
சிவகாமி ஐ.ஏ.எஸ்

பெண்கள் அனைத்துத் துறைகளிலும் இருக்கிறார்கள். அதேபோல நேரடி அரசியலில் ஈடுபட்டு சட்டமன்றம், நாடாளுமன்றம் என்று செல்லும்போதுதான் பெண்களுக்குத் தேவையான உரிமைகள் தொடர்பாக மட்டுமல்லாமல் நாட்டு மக்களுக்காகவும் உழைக்க முடியும். நேரடி அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று அரசியல் அறிவு கொண்ட பெண்கள்கூட வீட்டிலேயே இருந்து விட்டால் 33 சதவிகித இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு இன்னும் கால தாமதம் ஆகிவிடும். ஆகையால் அரசியல் ஆர்வம்கொண்ட பெண்கள் நேரடி அரசியலுக்கு வாருங்கள்" என்று அழைப்பும் விடுக்கிறார் சிவகாமி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism