Published:Updated:

சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார் பூலான் தேவியின் தங்கை!

”சமாஜ்வாடி கட்சியில் இணைவது தாய்வீட்டுக்கு வருவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது” - ருக்மிணி தேவி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பூலான் தேவி, உத்தரபிரதேசத்தின் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பான நிஷாத் பிரிவைச் சேர்ந்தவர். அதிகாரம் அவரைக் கொள்ளைக் கூட்டத் தலைவராகப் பார்த்தாலும் நிஷாத் மக்கள் இன்றளவும் அவரைத் தங்கள் பாதுகாப்புக்கான அடையாளமாகவே கருதுகின்றனர். அவர் இறப்புக்குப் பிறகான நாட்களில் பூலான் தேவியின் தங்கை ருக்மிணி தேவி, ’பிரகதிஷீல் மனவ்’ என்னும் ஒரு சிறிய அமைப்பில் இணைந்து சமூக வேலைகளில் ஈடுபட்டுவந்தார்.

ருக்மிணி தேவி
ருக்மிணி தேவி

இந்த நிலையில் இன்று அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார். கட்சியில் இணைந்தது குறித்துப் பேசிய ருக்மிணி, ”பூலான் தேவியும் இந்த கட்சியிலிருந்துதான் மக்கள் பணியில் ஈடுபட்டுவந்தார். அதனால் சமாஜ்வாடி கட்சியில் சேர்வது தாய்வீட்டுக்கு வருவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது” என்றார்.

பூலான் தேவி தனது கணவரைக் கொன்றவர்களையும் தன்னைக் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிய உயர்சாதி மக்களையும் பழிதீர்த்தார். பின்நாட்களில் சமாஜ்வாடி கட்சியில் இணைந்து அரசியல் பணியாற்றினார்.

இரண்டுமுறை உத்தரபிரதேசத்தின் மக்களவை உறுப்பினராக இருந்தார். 2001-ல் முகம் தெரியாத சில மர்ம நபர்களால் தனது புதுடெல்லி இல்லத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு