Published:Updated:

`நைட் 2 மணிக்கு எந்த ஊர்ல பெண்கள் ஜாகிங் போறாங்க!' - விமர்சனங்களுக்கு உள்ளான சாம்சங் விளம்பரம்

சாம்சங் விளம்பரம்!

இரவு நேரத்தில் தனியாகச் சென்று கொண்டிருக்கும் பெண்ணின் அருகில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு யாராவது வந்தால் பயப்படுவாளே தவிர சிரித்துவிட்டு சாதாரணமாகக் கடந்து செல்ல மாட்டாள். இரவு பெண்களுக்கானது அல்ல.

`நைட் 2 மணிக்கு எந்த ஊர்ல பெண்கள் ஜாகிங் போறாங்க!' - விமர்சனங்களுக்கு உள்ளான சாம்சங் விளம்பரம்

இரவு நேரத்தில் தனியாகச் சென்று கொண்டிருக்கும் பெண்ணின் அருகில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு யாராவது வந்தால் பயப்படுவாளே தவிர சிரித்துவிட்டு சாதாரணமாகக் கடந்து செல்ல மாட்டாள். இரவு பெண்களுக்கானது அல்ல.

Published:Updated:
சாம்சங் விளம்பரம்!

வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், பிராண்டை பிரபலப்படுத்தும் எண்ணத்தில் புதிய புதிய ஐடியாக்களோடு, அதிக செலவில் விளம்பரங்கள் எடுப்பது நிறுவனங்களிடையே வழக்கம். ஆனால் சமீபத்தில் வெளியான ஒரு விளம்பரத்தை, `விளம்பரமா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா' என்பது போல் இருப்பதாக விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது.

நகரில் வசிக்கும் பெண் ஒருவர் நள்ளிரவு இரண்டு மணிக்கு காதில் இயர் பட் மாட்டிக்கொண்டு ஜாகிங் செல்கிறார். அங்கே பல பெண்களும் இரவில் ஸ்கேட்டிங் செய்வது, நடனமாடுவது என சகஜமாக இருப்பதாகக் காட்டப்படுகிறார்கள். சிறிது தூரம் சென்றதும் அவரின் பின்னால் சைக்கிள் ஓட்டியபடி ஓர் ஆண் வருகிறார். அவரை பார்த்துப் புன்னகைத்தபடி அந்தப் பெண் தன்னுடைய ஓட்டத்தைத் தொடர்கிறார். சாம்சங் கேலக்ஸி வாட்ச் மற்றும் கேலக்ஸி பட்ஸ்க்காக வெளியான இந்த விளம்பரம் முற்றிலும் அபத்தமானது மற்றும் உண்மையற்றது என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இரவு நேரத்தில் தனியாகச் சென்று கொண்டிருக்கும் பெண்ணின் அருகில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு யாராவது வந்தால் பயப்படுவாளே தவிர சிரித்துவிட்டு சாதாரணமாகக் கடந்து செல்ல மாட்டாள். இரவு பெண்களுக்கானது அல்ல. நிஜ உலகில் பெண் ரன்னர்களுக்கான இரவு வேறுமாதிரியாக இருக்கும் என பெண்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த விளம்பரம் உண்மையைப் பிரதிபலிப்பதாக இல்லை. இரவு நேர பயத்தின் காரணமாக எந்தப் பெண்ணும் ரன்னிங் செய்ய மாட்டார்கள். ``நள்ளிரவு 2 மணிக்கு ஓடும் எந்தப் பெண்ணையும் எனக்குத் தெரியாது'' என விமன்ஸ் ரன்னிங் இதழின் ஆசிரியர் எஸ்தர் நியூமன் கருத்து தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism