Published:Updated:

`வறுமையால் என்னை கருவிலேயே கலைக்கச் சொன்னார் அப்பா!' - SBI-ன் முதல் பெண் தலைவர் அருந்ததி

அருந்ததி பட்டாச்சார்யா
News
அருந்ததி பட்டாச்சார்யா

``என் அம்மா என்னைக் கருவுற்றிருந்தபோது என் தந்தைக்கு வேலையில்லை. அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக `இந்தக் குழந்தை நமக்கு வேண்டுமா' என்று யோசித்திருக்கிறார் அப்பா. ஆனால், அம்மாவுக்கு `பிறக்கவிருக்கிற குழந்தையால் குடும்பத்தில் நல்லது நடக்கும்' என்ற நம்பிக்கை இருந்தது.''

வங்கித் துறையில் மிகப்பெரிய சாதனைகளைச் செய்த அருந்ததி பட்டாச்சார்யாவை அறியாதவர்கள் இருக்க முடியாது. பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) 210 ஆண்டு கால வரலாற்றில் முதல் பெண் தலைவர் இவர்தான். கொல்கத்தாவைச் சேர்ந்த இவரை, ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2016-ல் உலகின் சக்தி வாய்ந்த 25 பெண்களில் ஒருவராகத் தேர்ந்தெடுத்தது. ஆசிய பசிபிக் நாடுகளின் சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவராக ஃபார்ச்சூன் இதழின் பட்டியலில் இடம்பிடித்தார். `இந்தியா டுடே' சக்தி வாய்ந்த மக்களில் ஒருவராக அருந்ததியைத் தேர்ந்தெடுத்தது. இவர் எழுதியுள்ள Indomitable: `A working woman’s notes on life, work and leadership' என்ற புத்தகம் 2022 ஜனவரியில் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது. புத்தகம் வெளியாவதற்கு முன்பே பலருடைய பேசு பொருளாகியிருக்கிறது. இந்த நேரத்தில், அருந்ததி பட்டாச்சார்யா பற்றியும் அவரைக்குறித்து அவரே வெளிப்படுத்தியுள்ள சில விஷயங்கள் குறித்தும் பேச வேண்டியது நம் கடமையாகிறது.

அருந்ததி பட்டாச்சார்யா
அருந்ததி பட்டாச்சார்யா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``நான் என் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தை. என் அம்மா என்னைக் கருவுற்றிருந்தபோது என் தந்தைக்கு வேலையில்லை. அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக `இந்தக் குழந்தை நமக்கு வேண்டுமா' என்று யோசித்திருக்கிறார் அப்பா. ஆனால், என் அம்மாவுக்கு `பிறக்கவிருக்கிற குழந்தையால் குடும்பத்தில் நல்லது நடக்கும்' என்ற நம்பிக்கை இருந்தது'' என்கிற அருந்ததி, 1977-ல் புரொபேஷனரி அதிகாரியாக எஸ்.பி.ஐ. வங்கியில் தன்னுடைய கரியரை ஆரம்பித்தார். அப்போது அவருக்கு 22 வயது. வங்கியின் பல பதவிகளை வகித்தவர், பாரத ஸ்டேட் வங்கியின் முதல் பெண் தலைவர் வரை உயர்ந்தார்.

``இதை `வுமென் எம்பவர்மென்ட்' எனப்படும் பெண் அதிகாரமாகப் பார்த்த உலகம், இதில் இழையோடி இருந்த ஆண், பெண் பாகுபாட்டைக் கவனிக்கவே இல்லை'' என அழுத்தமாகச் சொல்கிற அருந்ததி, அதைக் களைந்ததில் தன்னுடைய பங்கினையும் தன்னுடைய புத்தகத்தில் விவரித்திருக்கிறார். அதாவது, அதுவரை ஆண்கள் மட்டுமே பாரத ஸ்டேட் வங்கியின் தலைவராக இருந்து வந்ததால், எஸ்.பி.ஐ. வங்கியின் சட்டத்தில் `சேர்மன்' பதவிக்கு ஆண் பால் பெயர் மட்டுமே இருந்து வந்திருக்கிறது. அருந்ததி தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டபோதுதான், தலைவர் பதவிக்கு `சேர்பர்சன்' என்கிற பெண் பால் பெயரை தன் சட்டத்தில் சேர்த்தது பாரத ஸ்டேட் வங்கி.

State Bank of India
State Bank of India
Vikatan

அருந்ததியிடம் பெண்ணிய சிந்தனை மட்டுமல்ல, பெண்களின் சின்னச்சின்ன பிரச்னைகளுக்கான தீர்வுகளும் இருந்தன. பள்ளி நாள்களில் பயோ கெமிஸ்ட் ஆக வேண்டுமென்கிற அவருடைய கனவு சக மாணவனால் `கிச்சன் கெமிஸ்ட்டா' என்று கேலி செய்யப்பட்டார். மாணவிகள் தங்கிப் படிப்பதற்கான ஹாஸ்டல் வசதியில்லாத காரணத்தால் தனக்குக் கிடைத்த மருத்துவ படிப்பைப் படிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் அருந்ததி. இதன்பிறகுதான் பாரத ஸ்டேட் வங்கியில் புரொபேஷனரி அதிகாரியாக காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவர் வருவதற்கு முன்பு வரை ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி கழிப்பறைகள் இருந்ததுபோல, அதிகாரிகளுக்கும் தனியாகக் கழிப்பறைகள் இருந்தனவாம். இதை மாற்றி அனைவருக்கும் ஒரே விதமான வசதியை ஏற்படுத்தியது அருந்ததிதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆரம்ப காலத்தில், பெண் என்பதாலேயே `கடன் வழங்கல்' போன்ற கடினமான துறைகளில் பதவி மறுக்கப்பட்ட அருந்ததி, பின்னாளில் பெண்கள் வீட்டுக்கடன் வாங்கினால் ஒரு சதவிகிதம் தள்ளுபடியில் ஆரம்பித்து பெண்களுக்கான பலப்பல திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

அருந்ததி  பட்டாச்சார்யா
அருந்ததி பட்டாச்சார்யா

அருந்ததி ஏற்கெனவே 2017-ல் `பிரிப்பேர் ஃபார் அன்நோன்' என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். `பணிபுரியும் பெண்ணின் வாழ்க்கை, வேலை மற்றும் தலைமை குறித்த குறிப்புகள்' புத்தகம் இவருடைய இரண்டாவது புத்தகம். அருந்ததியின் வாழ்க்கை தொடர்பான இந்தப் புத்தகம், சாதிக்க நினைக்கிற பல பெண்களுக்கும் நிச்சயம் ஒரு வழிகாட்டியாக இருக்கும்.