Election bannerElection banner
Published:Updated:

நாக்பூர்: சர்ச்சை தீர்ப்பளித்த நீதிபதி...`நிரந்தர நீதிபதி' பரிந்துரையைத் திரும்பப் பெற்ற கொலீஜியம்!

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை ( Representational Image )

இந்தத் தீர்ப்புக்கு மக்களிடம் கடும் எதிர்ப்புகள் வந்ததால் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதை உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 39 வயது நபர், அதே பகுதியில் வசிக்கும் 12 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக, சிறுமியின் பெற்றோர்கள் 2016-ம் ஆண்டு காவல் துறையில் புகார் அளித்தனர். இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி , குழந்தைகள் பாலியல் குற்றத்தடுப்பு சட்டத்தின் 8-வது பிரிவின் படி குற்றவாளிக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனையை அறிவித்தது. ஆனால், சம்பந்தப்பட்ட குற்றவாளி தரப்பில் மும்பை நீதிமன்றத்தில் இந்த வழக்கு மேல் முறையீடு செய்யப்பட்டது.

இளம்பெண் பாலியல் வன்கொடுமை
இளம்பெண் பாலியல் வன்கொடுமை
representational image

இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கனடிவாலா, போக்சோ 7வது சட்டப்பிரிவின் படி தோல் மீது தோல் பட்டு செய்யப்படும் அத்துமீறல்களும், பாலியல் வன்கொடுமை நோக்கத்துடன் பிறப்புறுப்பு, மார்பகங்களை நேரடியாகத் தொட்டு இருந்தால் மட்டுமே அது பாலியல் வன்கொடுமையாக ஏற்றுக்கொள்ளப்படும். சிறுமிகளை ஆடையின் மீது தொடுவது போக்சோ சட்டத்தின் படி குற்றமாகாது!" என்று கூறி சம்பந்தப்பட்ட குற்றவாளியை பாலியல் தாக்கலுக்கு உரிய மூன்று முதல் எட்டாண்டுகள் தண்டனையிலிருந்து விடுவித்து ஓர் ஆண்டு சிறைத்தண்டனை மட்டும் போதும் எனத் தீர்ப்பு வழங்கினார். இந்தத் தீர்ப்புக்கு மக்களிடம் கடும் எதிர்ப்புகள் வந்ததால் தீர்ப்பை நடைமுறைப் படுத்துவதை உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

அதே போன்று 5 வயது மகளை 50 வயது ஆண் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு பெற்றோர் புகார் அளித்திருந்தனர். அந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், குற்றவாளிக்கு 25,000 அபராதமும், பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கினர். இந்த வழக்கு ஜனவரி 28-ம் தேதி மும்பை உயர் நீதிமன்றத்துக்கு மேல்முறையீட்டுக்கு வந்தது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
Representational Image

புஷ்பா கனடிவாலா ஏற்கெனவே வழங்கிய தீர்ப்புக்கு உயர் நீதிமன்றம் 27.01.2021-ம் தேதி தடை விதித்திருந்த நிலையில், 28-01 -2021 அன்று மேல்முறையீட்டு வழக்காக விசாரிக்கப்பட்ட பாலியல் வழக்கிலும், "குழந்தை முன் பேன்ட்டை அன்ஸிப் செய்வது பாலியல் தாக்குதல் ஆகாது, பாலியல் தொல்லை என்றே கருதப்படும் "என்று கூறி சம்பந்தப்பட்ட குற்றவாளியை சிறைத்தண்டனையிலிருந்து விடுவித்து தீர்ப்பு வழங்கி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பினார் நீதிபதி புஷ்பா கனடிவாலா.

இந்நிலையில் மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக இருந்த புஷ்பாவை, நிரந்தர நீதிபதியாக்க, உயர் நீதிமன்ற நீதிபதி தேர்வுக்குழுவான கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது. ஆனால், புஷ்பா கனடிவாலா வழங்கியுள்ள சர்சைக்குரிய தீர்ப்பால் உயர் நீதிமன்றம் தன்னுடைய பரிந்துரையைத் திரும்பப் பெற்றுள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

மேலும், இன்னும் சில ஆண்டுகள் புஷ்பா கனடிவாலா முப்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவே இருந்து போக்சோ சட்டம் பற்றிய முழுமையான தெளிவை அடைய வேண்டும்" என்றும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு