Election bannerElection banner
Published:Updated:

`பாலியல் வழக்கு கருத்துகளில் ஆணாதிக்கம் கூடாது!' - சர்ச்சை தீர்ப்பும் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலும்

Supreme Court Of India
Supreme Court Of India

ஜாமீன் வழங்குவதற்கான நிபந்தனையாக, குற்றம் சுமத்தப்பட்டவரும் அவர் மனைவியும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்குச் சென்று அவருக்கு ராக்கி கட்ட வேண்டும் என்று மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

உச்ச நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை அன்று, மகாராஷ்டிராவின் உயர் நீதிமன்றம் பாலியல் வழக்கு ஒன்றில் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு வழங்கிய ஜாமீனை தள்ளுபடி செய்த பின்னர், 'பாலியல் வழக்குகளில் கருத்து கூறும்போது நீதிபதிகள் கவனமாக இருக்க வேண்டும்' என்று குறிப்பிட்டது.

மத்தியபிரதேச உயர் நீதிமன்றம், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் தொடர்ந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு ஜாமீன் வழங்குவதற்கான நிபந்தனையாக, குற்றம் சுமத்தப்பட்டவரும் அவர் மனைவியும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்குச் சென்று அவருக்கு ராக்கி கட்ட வேண்டும் என்று தெரிவித்தது.

Sexual Harassment (Representational Image)
Sexual Harassment (Representational Image)

இந்த ஜாமீனை ரத்து செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் எஸ்.ரவிந்தர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு, பாலியல் வழக்குகளில் நீதிபதிகள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கும்போது அதில் ஆணாதிக்கம் இருக்கக்கூடாது என்று குறிப்பிட்டது. 'பாலியல் வன்கொடுமை செய்தவரை சகோதரனாக ஏற்றுக்கொள்ளச் சொல்வது நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளக் கூடியது இல்லை, இது பாலியல் துன்புறுதலுக்கு உள்ளான வழக்குகளை நீர்த்துப்போகச் செய்யும்.

மேலும், நீதிபதிகள் பாலியல் வன்முறை வழக்குகளில் தவறான கருத்துகள், ஆணாதிக்க ரீதியிலான கேள்விகள், குறிப்பாகக் கடந்த கால வாழ்க்கை, தத்துவங்கள் மற்றும் வன்முறைக்கு உள்ளாக்கியவரை பாதிக்கப்பட்ட பெண் திருமணம் செய்துகொள்ள பரிந்துரைப்பது, பாலினத்தை சுட்டிக்காட்டி கருத்துகள் கூறுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்' எனக் கூறியுள்ளனர். இந்தச் சமூகத்தில் முக்கியமான பொறுப்பு வகிக்கும் நீதிபதிகள் உண்மைகளை ஆராய்ந்து, சட்டத்தின் அடிப்படையிலும், ஆதாரங்களின் அடிப்படையிலுமே முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Supreme Court
Supreme Court

மேலும் அவர்கள், 'பாலின கண்ணோட்டத்துடன் நீதிமன்றத்தில் கருத்து தெரிவிக்கும்போதும், வழக்குக்கு புறம்பாக உத்தரவு இடும்போதும் அது சமூகத்தில் பாலின பாரபட்சத்தை வலுப்படுத்துவது போன்று ஆகிவிடும். அதனால் பாதிக்கப்பட்ட நபரை சமாதானப்படுத்த முயலாமல், தங்கள் கருத்துகளை தெரிவிக்கும்போது நீதிபதிகள் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாகத் தவறான கருத்துகளைத் தவிர்க்க வேண்டும்' எனவும் கூறினர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு