Published:Updated:

`அரைகுறை ஆடை அணிந்த பெண் மீது பாலியல் சீண்டல் குற்றம் இல்லை’ - கேரளா நீதிமன்றம்

நீதிமன்றம்

பெண் பாலியல் ரீதியான செயல்பாடுகளைத் தூண்டும் வகையில் ஆடை அணிந்திருந்தால், அவரை பாலியல் துன்புறுத்தல் செய்தால் அது குற்றமாகாது என்று கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் சீண்டல்
பாலியல் சீண்டல்

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவிக் சந்திரன். சமூக செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான இவர் 2020-ம் ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி நந்தி கடற்கரையில் நடந்த நிகழ்வு ஒன்றில், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று ஒரு பெண் எழுத்தாளர் கொடுத்த புகாரின் பெயரில் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு தற்போது முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது கோழிக்கோடு அமர்வு நீதிமன்றம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தீர்ப்புக்கான நகல் தற்போது வெளியாகியுள்ளது. அந்தத் தீர்ப்பில் நீதிபதி எஸ்.கிருஷ்ணகுமார், ``குற்றம் சாட்டப்பட்ட சிவிக் சந்திரன் தரப்பில் வழங்கப்பட்ட புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில், புகார் கொடுத்த பெண் அணிந்திருந்த உடை அவர் பாகங்கள் தெரியும் வகையில் இருந்துள்ளது. அந்த ஆடை பாலியல் எண்ணத்தைத் தூண்டும் வகையில் இருந்துள்ளது.

அந்தப் புகைப்படத்தில் குற்றம் சாட்டப்பட்டவரின் மடியில் அந்தப் பெண் அமர்ந்திருக்கிறார். அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக மடியில் அமர வைத்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறுவதை நம்பமுடியவில்லை. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் 74 வயதான மாற்றுத்திறனாளி என்னும் பட்சத்தில், அவர் எப்படி இதைச் செய்திருக்கக்கூடும்" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Sexual harassment
Sexual harassment
Pixabay

மேலும் தீர்ப்பில், ``இதையடுத்து பாலியல் துன்புறுத்தல் வழக்குகளுக்கான சட்டப்பிரிவு 355 A இந்த வழக்குக்குப் பொருந்தாது என்று கூறி குற்றம் சுமத்தப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சிவிக் சந்திரன் வேண்டுமென்றே பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார் என்பதும் நிரூபணம் ஆகிறது. எனினும், பாலியல் துன்புறுத்தலின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டுமானால் குற்றம்சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவருக்கு உடல் ரீதியாக மற்றும் விரும்பத்தகாத வெளிப்படையான பாலியல் செயல்பாட்டில் ஈடுப்பட்டிருக்க வேண்டும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட சிவிக் சந்திரன் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் இளம்பெண் ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் ஆகஸ்ட் 2-ம் தேதி முன்ஜாமீன் வழங்கப்பட்டது.