Published:Updated:

``நீங்கள் எப்போதும் சாம்பியன்தான் சாய்னா!" - மன்னிப்பு கேட்ட சித்தார்த்

நடிகர் சித்தார்த்
News
நடிகர் சித்தார்த்

பல்வேறு ஆர்வலர்கள் சித்தார்த்தின் கருத்துக்கு அவரை திட்டி, அவர் சாய்னாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரினர். பேட்மின்டன் வீராங்கனைக்கு எதிராக அவர் ட்வீட் செய்ததற்காக நடிகரின் கணக்கை முடக்குமாறு தேசிய மகளிர் ஆணையமும் (NCW) ட்விட்டரைக் கேட்டுக் கொண்டது.

சாய்னா நேவாலின் ட்வீட்டுக்கு சர்ச்சைக்குரிய பதிலளித்த நடிகர் சித்தார்த், மன்னிப்பு கேட்டு பகிரங்க கடிதம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

கடந்த வாரம், ஒரு ட்வீட்டில், ஜனவரி 5-ம் தேதி பஞ்சாப் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு மீறல் குறித்த தனது வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார் சாய்னா. சாய்னாவின் அந்தப் பதிவுக்குப் பதிலளித்திருந்தார் சித்தார்த். சித்தார்த்தின் ட்வீட் 'செக்ஸிஸ்ட்' என்று பரவலாக விமர்சிக்கப்பட்டது. சாய்னா நேவாலும் அவரின் விமர்சனத்துக்குப் பதிலளித்திருந்தார். அதைத் தொடர்ந்து நடிகர் சித்தார்த் நேற்று மன்னிப்பு கடிதம் ஒன்றை வெளியிட்டார்.

சாய்னா நேவால்
சாய்னா நேவால்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ட்விட்டரில் சித்தார்த் வெளியிட்ட அந்தக் கடிதத்தில், ``அன்புள்ள சாய்னா, சில நாள்களுக்கு முன்பு உங்கள் ட்வீட்டுக்கு பதிலளிப்பதாக நான் எழுதிய எனது முரட்டுத்தனமான நகைச்சுவைக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். பல விஷயங்களில் நான் உங்களுடன் உடன்படாமல் இருக்கலாம். ஆனால், உங்கள் ட்வீட்டைப் படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் அல்லது கோபத்தால் என்னுடைய ட்வீட்டில் பயன்படுத்திய தொனியையும் வார்த்தைகளையும் நியாயப்படுத்த முடியாது. அதைவிட அதிக இரக்கம் எனக்குள் இருப்பதை நான் அறிவேன். ஜோக்கைப் பொறுத்தவரை அதை விளக்காமலே புரிய வேண்டும். அப்படியில்லையென்றால் அது ஜோக்கே இல்லை. என் ட்வீட் ஒரு நல்ல நகைச்சுவையாக இருக்கவில்லை. அதற்கு மன்னிக்கவும். எனினும், எனது வார்த்தை விளையாட்டு மற்றும் நகைச்சுவைக்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் கூறும் தீங்கிழைக்கும் நோக்கம் என்பது எதுவும் இல்லை என்று நான் வலியுறுத்த விரும்புகிறேன். நான் ஓர் உறுதியான பெண்ணியவாதி மற்றும் எனது ட்வீட்டில் பாலினம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. உங்களைத் தாக்கும் நோக்கம் நிச்சயமாக எனக்கு இல்லை என்று நான் உறுதியளிக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ``இந்தப் பிரச்னையை நாம் முடித்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன். நீங்கள் எனது கடிதத்தை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் எப்போதும் என் சாம்பியனாக இருப்பீர்கள்" என்று தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

சித்தார்த்
சித்தார்த்

பல்வேறு ஆர்வலர்கள் சித்தார்த்தின் கருத்துகளுக்கு அவரை திட்டி, அவர் சாய்னாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரினர். பேட்மின்டன் வீராங்கனைக்கு எதிராக அவர் ட்வீட் செய்ததற்காக நடிகரின் கணக்கை முடக்குமாறு தேசிய மகளிர் ஆணையமும் (NCW) ட்விட்டரைக் கேட்டுக் கொண்டது. மேலும் சித்தார்த் மீது இந்திய குற்றவியல் சட்ட பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு பரிந்துரை செய்து இருக்கிறது.

இந்நிலையில், சித்தார்த் தான் யாரையும் அவமரியாதை செய்ய விரும்பவில்லை என்றும், தனது ட்வீட்டில் எந்த விதமான தூண்டுதலும் இல்லை என்றும் கூறியிருந்தார். பலரும் எதிர்ப்பு தெரித்தவிருந்த நிலையில், சித்தார்த் இந்த மன்னிப்பு கடிதத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.