Published:Updated:

``எவ்ளோ கஷ்டம்... ப்ச்... வருத்தம்தான் மிச்சம்!'' - சிவகாமி ஐ.ஏ.எஸ்.

சிவகாமி ஐ.ஏ.எஸ்

`என்ன இப்படிச் சொல்றீங்க? நான் உட்பட பொதுமக்களில் பலரும் உங்க அரசியல் பணிகளைத் தொடர்ந்து கவனிச்சுக்கிட்டிருக்கிறோம். நிச்சயம் உங்கள் பணிக்கு மாற்றம் கிடைக்கும்' என நம்பிக்கையளித்தார் ஒரு தோழி.

``எவ்ளோ கஷ்டம்... ப்ச்... வருத்தம்தான் மிச்சம்!'' - சிவகாமி ஐ.ஏ.எஸ்.

`என்ன இப்படிச் சொல்றீங்க? நான் உட்பட பொதுமக்களில் பலரும் உங்க அரசியல் பணிகளைத் தொடர்ந்து கவனிச்சுக்கிட்டிருக்கிறோம். நிச்சயம் உங்கள் பணிக்கு மாற்றம் கிடைக்கும்' என நம்பிக்கையளித்தார் ஒரு தோழி.

Published:Updated:
சிவகாமி ஐ.ஏ.எஸ்

ஐஏஎஸ் அதிகாரியாக சிறப்பாகப் பணியாற்றிய சிவகாமி, 2008-ம் ஆண்டு நேரடி அரசியலில் இறங்கினார். ஆனால், மக்கள் அவர் பக்கம் இல்லை என்பதை உணர்ந்தவர் மெளனமாகினார். எங்கே, எப்படி இருக்கிறார், என்ன செய்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள, அவரை தொலைபேசியில் பிடித்தோம்.

``தனிக்கட்சி தொடங்கி 10 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், உங்கள் அரசியல் பயணத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

சிவகாமி ஐ.ஏ.எஸ்
சிவகாமி ஐ.ஏ.எஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"மக்கள், தங்களுக்கான தலைவர்களைத் தாங்களே தேடிக் கண்டுபிடிப்பதில்லை. அப்படிச் செய்தால், என்னைப் போன்ற சிலரை மக்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள். மாறாக, மக்களைத் தேடி நாங்களாகச் செல்லும்போது, எங்களைப் பற்றிய புரிதல் அவர்களிடம் பெரிதாக இருப்பதில்லை. நானாக என்னைப் பற்றி விளக்கிக் கூறினால், `ஐஏஎஸ் அதிகாரியாக இருந்ததுபோதாமல், எம்.எல்.ஏ ஆகவேண்டுமா? உங்களுக்கு அவ்வளவு அதிகார ஆசையா?' எனக் கேட்பவர்களும் உண்டு. அதனால், என் பணிகளுக்கு மக்களிடம் பெரிதாகப் பலன் கிடைப்பதில்லை. என்றாவது ஒருநாள், மக்கள் என்னை ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன். அதனால், என் முயற்சியைக் கைவிட மாட்டேன்."

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"தற்போதைய உங்களின் செயல்பாடுகள் பற்றி..."

சிவகாமி ஐ.ஏ.எஸ்
சிவகாமி ஐ.ஏ.எஸ்

"20-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் சங்கங்களுடன் இணைந்து, அவர்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறேன். அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம், இந்தியப் பெண்கள் பகுத்தறிவாளர்கள் சங்கங்களைத் தொடங்கி, அதற்காகவும் பணியாற்றுகிறேன். நீட் தேர்வு மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டம் உட்பட, மக்களைப் பாதிக்கும் அரசின் விவகாரங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறேன். இவையெல்லாமே என் கட்சியான `சமூக சமத்துவப் படை' மற்றும் அரசு ஊழியர்கள் சங்கத்தின் மூலமாக செயல்படுத்திக்கொண்டிருக்கிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மக்கள், தங்களுக்கான தலைவர்களைத் தாங்களே தேடிக் கண்டுபிடிப்பதில்லை. அப்படிச் செய்தால், என்னைப் போன்ற சிலரை மக்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள். மாறாக, மக்களைத் தேடி நாங்களாகச் செல்லும்போது, எங்களைப் பற்றிய புரிதல் அவர்களிடம் பெரிதாக இருப்பதில்லை.
சிவகாமி ஐ.ஏ.எஸ்

2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும், ஓராண்டு வெளிநாட்டில் இருந்தேன். பிறகு மீண்டும் தமிழகம் வந்து என் கட்சிப்பணி சார்ந்த விஷயங்களைத் தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கிறேன். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அளவுக்கு எனக்கு வசதியில்லை. `உங்களின் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பேன்; தீர்வு காண்பேன்' என்ற கோரிக்கைகளை முன்வைத்தே தேர்தல்களில் மக்களிடம் வாக்கு கேட்டேன். ஆனால், மக்கள் என்னை வெற்றிபெறச் செய்யவில்லை. எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அதனால், மக்களுக்காகவே தொடர்ந்து உழைக்கிறேன்.

தொடர்ந்து போராடிக்கொண்டிருந்தாலும் அதை மீடியாக்களும் கண்டுகொள்வதில்லை. என்னைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. விளம்பரங்கள் மற்றும் வார்த்தை ஜாலங்கள் மூலமாக என்னால் மக்களைச் சென்றடை முடியவில்லை. மக்களைக் கவர வேண்டும் என்பதைவிட, மக்களுக்காக உழைக்க வேண்டும். அதை மக்களுக்குப் புரியவைக்க தொடர்ந்து முயற்சி செய்கிறேன்."

``ஐஏஎஸ் அதிகாரி என்பதே மக்கள் பணி செய்வதுதான். அப்பணியிலிருந்து விலகி அரசியலுக்கு வரக் காரணம்?"

சிவகாமி ஐ.ஏ.எஸ்
சிவகாமி ஐ.ஏ.எஸ்

"நான் பிறப்பதற்கு முன்பே, என் அப்பா பழனிமுத்து சுயேட்சை எம்.எல்.ஏ-வாக இருந்திருக்கிறார். 17 வயதில் ஹாஸ்டலில் சேர்ந்துவிட்டேன். அதனால், என் அப்பா உட்பட என் இளமைக் காலத்தில் யாரிடமும் நேரடியாக அரசியல் அனுபவங்களைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், விவரம் புரிந்த பருவத்தில் மக்கள் பிரச்னைகளை அறிந்து, அதைத் தீர்க்கும் முனைப்பில் ஐஏஎஸ் அதிகாரியானேன். 28 ஆண்டுகள் ஐஏஎஸ் அதிகாரியாக நிறைவாகப் பணியாற்றினேன். ஆனாலும் பெரிய உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது. கல்வி, வேலை, திருமணம், குடும்பம், ஓய்வு என்ற சுயநலமான நேர்க்கோட்டு வாழ்வில் எனக்கு ஆர்வமில்லை.

சிந்திப்பது மட்டுமில்லாமல், அதற்கு செயல்வடிவம் கொடுத்தால்தானே மாற்றத்தை உருவாக்க முடியும். அதனால், ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றுவதைவிடவும், அரசியலில் இறங்கி ஏராளமான மக்களுக்கு சேவை செய்யலாம் என்று நினைத்தேன்.
சிவகாமி ஐஏஎஸ்

மக்கள் நலன் மற்றும் தேச நலனைப் பற்றி சிந்திப்பதுதான் என் பிரதான பழக்கம். சிந்திப்பது மட்டுமில்லாமல், அதற்கு செயல்வடிவம் கொடுத்தால்தானே மாற்றத்தை உருவாக்க முடியும். அதனால், ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றுவதைவிடவும் அரசியலில் இறங்கி ஏராளமான மக்களுக்கு சேவை செய்யலாம் என்று நினைத்தேன். தவிர, ஆட்சியாளர்களும் தங்கள் பொறுப்பை நிறைவாகச் செய்யவில்லை.

எனவே, அரசியல் களத்தில் இறங்கி பணியாற்ற உடனடியாக என் அரசுப் பணியிலிருந்து விலகினேன். அதற்காக ஒருநாளும் நான் வருத்தப்பட்டதில்லை. மாறாக, இன்னும் முன்கூட்டியே ஐஏஎஸ் பணியிலிருந்து விலகியிருந்தால், கூடுதலாக மக்கள் பணி செய்திருக்கலாமே என்றுதான் நினைப்பேன். என் நோக்கத்தின்படி சரியாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன்."

`` `ஆட்சியாளர்கள் சரியாகச் செயல்படவில்லை' என அரசியலுக்கு வந்த நிலையில், பிரதான கட்சிகளுடனே கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தீர்கள். இதை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?"

சிவகாமி ஐ.ஏ.எஸ்
சிவகாமி ஐ.ஏ.எஸ்

``நான் அரசுப் பணியிலிருந்தபோதே, `தலித் நில உரிமை இயக்க'த்தை இரண்டு ஆண்டுகள் நடத்தி, நில உரிமைக்காகத் தொடர் போராட்டங்களை நடத்தினேன். அதன் பலனாகவே, `ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் இலவச நிலம்' என்ற தேர்தல் அறிக்கையை 2006-ம் ஆண்டு தி.மு.க வெளியிட்டது. எங்கள் தொடர் முயற்சியால், பஞ்சமி நில மீட்பு ஆணையம் மற்றும் அருந்ததியர்களுக்கு இட ஒதுக்கீடு ஆகியவையும் அப்போதைய தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. மேலும், `பெண்கள் முன்னணி' என்ற அமைப்பின்மூலம், 2007-ம் ஆண்டு மதுரையில் ஒரு லட்சம் பெண்களைத் திரட்டி, `பெண்கள் கலை இரவு' என்ற நிகழ்ச்சியை நடத்தினேன். 2008-ம் ஆண்டு, இரண்டரை லட்சம் பெண்களைத் திரட்டி, `பெண்களும் அரசியலும்' என்ற மாநாட்டை நடத்தினேன். இத்தகைய செயல்பாடுகளுக்குப் பிறகே, தமிழகத்திலுள்ள பிரதான அரசியல் கட்சிகள், மகளிரணி, இளம் பெண்கள் பாசறை போன்ற பெண்கள் அணிக்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கின. ஓர் அரசு அதிகாரியாகச் செயல்பட்டதாலேயே, இவ்வளவு மாற்றங்களைக் கொண்டுவர முடியும்போது, நேரடி அரசியலில் ஈடுபட்டால் பெரிய மாற்றத்தை உண்டாக்கலாம் என்ற எண்ணத்தில்தான் அரசியலுக்கு வந்தேன்.

அரசியல் களத்தில் இறங்கி பணியாற்ற உடனடியாக என் அரசுப் பணியிலிருந்து விலகினேன். அதற்காக ஒருநாளும் நான் வருத்தப்பட்டதில்லை. மாறாக, இன்னும் முன்கூட்டியே ஐஏஎஸ் பணியிலிருந்து விலகியிருந்தால், கூடுதலாக மக்கள் பணி செய்திருக்கலாமே என்றுதான் நினைப்பேன்.
சிவகாமி ஐஏஎஸ்

எனக்கு கன்சிராம் கொள்கையில் உடன்பாடு உண்டு. அதனால்தான், பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தேன். ஆனால், அவர் மறைந்த பின் அக்கட்சியின் செயல்பாடுகள் எனக்குப் பிடிக்காததால் அக்கட்சியிலிருந்து விலகினேன்.  பிறகு, `சமூக சமத்துவப் படை' என்ற கட்சியைத் தொடங்கி தனியாகவே செயல்பட்டேன்.

இந்நிலையில்தான், 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் என்னை அழைத்த மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி, தி.மு.க-வுடன் என் கட்சி கூட்டணி அமைக்க வலியுறுத்தினார். சட்டமன்றத்தில் எங்கள் கட்சிக்குப் பிரதிநிதித்துவம் கிடைத்து. அதன்மூலம் மக்களுக்கு வலுவாகக் குரல் கொடுக்கலாமே என்ற எண்ணத்தில்தான் தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து, பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டேன். ஆனால், வெற்றி கிடைக்கவில்லை."

``உங்களின் போராட்டங்களுக்கு மக்களிடம் பெரிதாக ஆதரவு கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் இருக்கிறதா?"

சிவகாமி ஐ.ஏ.எஸ்
சிவகாமி ஐ.ஏ.எஸ்

``நான் ஒரு பெண் தோழியிடம், `மக்களுக்காக நிறைய பணியாற்றியும் அதை மக்களே புரிந்துகொள்வதில்லை; வருத்தமாக இருக்கிறது' எனச் சலிப்பாகக் கூறினேன். `என்ன இப்படிச் சொல்றீங்க? நான் உட்பட பொதுமக்களில் பலரும் உங்க அரசியல் பணிகளைத் தொடர்ந்து கவனிச்சுக்கிட்டிருக்கிறோம். நிச்சயம் உங்கள் பணிக்கு மாற்றம் கிடைக்கும்' என நம்பிக்கையளித்தார். இப்படி எங்கள் கட்சிப் பணியைப் பலரும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையில் உழைத்துக்கொண்டிருக்கிறேன்.

தவிர, இந்தியப் பெண்கள் பகுத்தறிவாளர்கள் சங்கத்தின் மூலம், எந்தச் சாதியினர் பெரும்பாலும் குற்றவாளிகளாக ஆக்கப்படுகிறார்கள், சிறைகளில் இருப்பவர்கள் என்ன காரணத்தினால் அந்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்? அவர்கள், குற்றப்பரம்பரையினரா அல்லது சமூகத்தில் அடித்தட்டு நிலையில் இருப்பவர்களா? அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி, சமூகத்தில் பெண்களின் நிலை,  உட்பட பல்வேறு ஆய்வுப் பணிகளையும் செய்கிறோம். அவற்றைக் கொள்ளையாக அரசிடம் ஒப்படைத்து, அதையொட்டி சமூகத்தில் நல்ல மாற்றம் உருவாக வேண்டும் என்ற முயற்சியில் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறேன்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism