`மக்கள் நீதி மய்யம் கட்சி ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்குச் சம்பளம் அளிக்கப்படும்' என்று கமல்ஹாசன் பேசியுள்ளார்.

கமல்ஹாசனின் இந்த அறிவிப்பை காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி-யுமான சசி தரூர் பாராட்டியிருந்தார். `இல்லத்தரசி களுக்கு அரசாங்கம் ஊதியம் வழங்க வேண்டும் என்ற திட்டம் வரவேற்கத்தக்கது. இதனால் சமூகத்தில் இல்லத்தரசிகளின் மதிப்பும் அதிகாரமும் உயரும்” என்று சசி தரூர் குறிப்பிட்டிருந்தார்.

சசி தரூரின் ட்வீட்டை மேற்கோள் காட்டி கமல்ஹாசனின் திட்டத்துக்கு பிரபல பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் எதிர்ப்பு தெரிவித் துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்களது அன்புக்குரியவர்களிடம் நாங்கள் கொள்ளும் உறவுக்கு விலை அட்டையை ஒட்ட வேண்டாம். எங்கள் பிள்ளைகளை நாங்கள் வளர்ப்பதற்கு எங்களுக்கு ஊதியம் வேண்டாம். எல்லா வற்றையும் தொழிலாகப் பார்க்காதீர்கள். எங்கள் வீட்டில் நாங்கள் ராணியாக இருப்ப தற்கு விலை நிர்ணயம் எதற்கு? இதற்குப் பதிலாக உங்களை நேசிக்கும் பெண்ணை அன்பு, காதல் மற்றும் மதிப்புடன் நடத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

ஆதரவாகவும் எதிராகவும் பல குரல்கள் ஒலிக்க, இல்லத்தரசிகளின் வேலைகளுக்கு ஊதியம் வழங்குவது சாத்தியமா, ‘பெண் சக்தி’ என்ற திட்டத்தின் மூலம் மக்கள் நீதி மய்யம் சொல்ல வருகிற விஷயம் என்ன?

அக்கட்சியின் மாநில மகளிர் மற்றும் குழந்தைகள்நல அணியின் மாநிலச் செயலாளர் மூகாம்பிகா ரத்தினத்திடம் பேசினோம்.

பொருளாதார சுதந்திரம் பூர்த்தி யாகும்!

“பொதுவாக, வீட்டில் பெண்கள் செய்யும் வேலைகள் மதிப்பீடு செய்யப்படுவதே இல்லை. மாறாக அவர்களின் உழைப்பு அலட்சியப்படுத்தப் படுகிறது. அவர்கள் செய்யும் வேலைகளால் தான், வீட்டு ஆண்களும் பிள்ளைகளும் வெளியில் வேலைக்குச் சென்று சம்பாதித்து குடும்பப் பொருளாதாரத்தை மேம்படுத்த முடிகிறது.

இல்லத்தரசிகளின் வேலைகளை மதிக்க, அவர்களை அங்கீகரிக்க முன்னெடுக்கப் பட்டதுதான் பெண் சக்தி திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம், இல்லத்தரசிகளுக்கு சம்பளம் வழங்குவது சாத்தியமற்றது என்ற எதிர்கருத்துகள் வருவதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், கணவனை இழந்த பெண்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் கொடுக்கும் அரசு உதவித் தொகையைப்போல, இல்லத்தரசி களுக்கும் குறிப்பிட்ட உதவித்தொகையை வழங்க முடியும் என்பதைப் பல பொருளாதார நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து உணர்ந்த பிறகே ‘பெண் சக்தி’ திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. பெண்களின் நிதித் தேவை, அரசால் பூர்த்தியாகும்போது, அதற்காக கணவன் மற்றும் பிள்ளைகளைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருக் காது. அவர்களது பொருளா தார சுதந்திரமும் பூர்த்தி யாகும்'' என்றார்.

மீண்டும் சமையலறையில் முடங்குவார்கள்!

`நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு இந்தத் திட்டம் உதவி செய்யுமா, பெண்களின் வளர்ச்சிக்கு இது எந்த விதத்தில் உறுதுணையாக இருக்கும்' என்ற கேள்விகளுடன் பொருளாதார ஆலோசகர் வி.கோபாலகிருஷ்ணனிடம் பேசியபோது, “இல்லத்தரசி களுக்கு சம்பளம் வழங்கும் திட்டம் குறித்த விவாதங்கள் பல ஆண்டுகளாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்தத் திட்டத்தை நடை முறைப்படுத்துவதன் மூலம் பொருளாதார ரீதியில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. மாறாக, பெண்களின் திறமையும், அவர்களின் உழைப்பும்தான் மட்டுப்படுத்தப்படும். ‘அர சாங்கம்தான் இல்லத்தரசி களின் வேலைக்கு சம்பளத்தை தீர்மானித்திருக்கிறதே, எதற்காக வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டும்’ என்று படித்த பெண்கள்கூட நினைக்கலாம். அல்லது ஆண்களும், அரசு கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக்கொண்டு, தன் மனைவியை வேலைக்கு அனுப்ப மறுக்கலாம்.

இப்படியான சூழல் உருவாகும்போது, பெண்கள் மீண்டும் சமையலறைகளில் முடங்கிவிட வாய்ப்பு இருக்கிறது. இதற்குப் பதிலாக அவர்களின் திறனை வளர்க்கும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் பயிற்சிகள் வழங்குவது, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் நிதியுதவி செய்து அவர்களின் தொழில்முனையும் ஆர்வத்தை ஊக்கப்படுத்துவது போன்றவற்றைச் செய்யலாம்” என்றார்.

இல்லத்தரசிகள் இதை எப்படிப் பார்க்கிறார்கள்... ஆண்கள் என்ன நினைக்கிறார்கள்?

டாரத்தி துரைசாமி, சென்னை: “குடும்பத்தலைவிகள் செய்யுற வேலைகளை யாருமே உழைப்பா பார்க்கிறதே இல்ல. தேர்தல் நேரத்துல, குடும்பத் தலைவிகளுக்குன்னு தனியா இப்படியொரு வாக்குறுதியை நான் முதல் தடவையா கேள்விப்படுறேன். ஆனா, இதைக் கணவர் தரணும்கிறதை ஏத்துக்க முடியாது. என் ஹஸ்பண்ட் என் உழைப்பை மதிச்சு ஊதியம் கொடுக்கலாம். இது மத்த குடும்பத்தலைவிகளுக்கும் கிடைக்கும்னு சொல்ல முடியாது. இதுவே அரசாங்கம் கொடுத்தா எல்லாருக்கும் கிடைக்கும். வறுமைக்கோட்டுக்கு கீழேயிருக்கிற குடும்பத் தலைவிகளுக்கு அதிக ஊதியம் கொடுத்தா இன்னும் நல்லா இருக்கும்”.

பூங்கொடி, சத்தியமங்கலம்: “என் குடும்பத்தைப் பராமரிக்கிறது, என் குழந்தைகளை வளர்க்கிறது, ஏன் என் பேரக்குழந்தைகளைப் பார்த்துக்கிறது வரை எல்லாம் என் கடமைகள். இதுக்காக என் கணவர்கிட்டயோ, என் மகன்கிட்டயோ நிச்சயம் ஊதியம் வாங்க மாட்டேன். பாசத்துக்கு சமமா பணத்தை வைக்க அம்மாக்களோட மனசு ஒப்புக்காது. ஆனா, மக்களோட வரிப் பணத்துல இருந்து முதியோர் பென்ஷன், விதவை பென்ஷன் தர்ற மாதிரி குடும்பத் தலைவிகளுக்கும் ஒரு தொகை கொடுத்தா வாங்கிப்பேன்.”

கருணாநிதி, சென்னை: “ஆண்கள் செய்யுற வேலைகள் எந்த விதத்திலும் குறைஞ்சது இல்ல, வீடுகள்ல இல்லத்தரசிகள் செய்யுற வேலை. அந்த வேலைக்கு எவ்வளவு ஊதியம் கொடுத்தாலும் தகும். ‘இல்லத் தரசிகளுக்குச் சம்பளமா கொடுக்கணும்’னு என்ற கருத்து வரவேற்கத்தக்கது. கணவர்கள் தான் அந்தத் தொகையைக் கொடுக்கணும் சொன்னாங் கன்னா, ‘ஊதியம்’ என்ற பேர்ல நான் அதைத் தர மாட்டேன். என் மனைவி என்மேலயும், குழந்தைங்க மேலயும் செலுத்துற அன்புக்கு என்னால எப்படி விலை கொடுக்க முடியும்?”

மனோகரன், விழுப்புரம்: “இந்தத் திட்டம் குடும்பத்தோட பாசப் பிணைப்புல விரிசலை ஏற் படுத்தலாம். இது இல்லத்தரசி களையும், குடும்பத்தின் மேல அவங்க வச்சிருக்கிற அன்பையும் அவமானப்படுத்துற மாதிரியானது. தன் கணவனுக்கும், பிள்ளை களுக்கும் எது தேவை, எது தேவையில்லைன்னு ஒரு குடும்பத்தலைவி பார்த்துப் பார்த்துச் செய்யுறாங்கன்னா அதுக்கு காரணம் அக்கறையும், பாசமும்தான். இந்த உணர்வுகளை வேலையா கணக்குல எடுத்துகிட்டு ஊதியம் தர்றது குடும்பத்துக்குள்ள ஒருவித இயந்திரத் தன்மையைக் கொண்டு வந்துடும். மரியாதையைக் கொடுத்து அவங்க தேவை களைப் பூர்த்தி செய்யுறது மட்டும்தான் இல்லத்தரசிகளுக்கு அவங்க குடும்பத்தினர் கொடுக்குற சிறந்த ஊதியமா இருக்கும்.”

ஹாங்காங்கைப் பின்பற்றலாமே இந்தியா!

ஹாங்காங்கில் வீட்டு வேலை செய்யும் இல்லத்தரசிகளுக்கு தனியாக ஊதியம் கிடையாது. அங்கே பெரும்பாலான பெண்கள் வேலைக்குப் போகிறவர்கள். கணவனும் மனைவியும் வேலைக்குப் போவதால், வீட்டு வேலை களைப் பார்க்க பணிப்பெண்களை அமர்த்திக்கொள்ளலாம். பணிப்பெண்கள் பெரும்பாலும் பிலிப்பைன்ஸ், இந்தோ னேசியா நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்களது குறைந்த பட்ச ஊதியம் மற்றும் பணிக்கால விதிகளுடன்கூடிய ஒப்பந்தம், விசா விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

பணிப்பெண்களை வேலைக்கு வைக்காதவர்கள், பேறுகால விடுப்பு முடிந்து பணிக்குப் போகும்போது குழந்தைகளைக் காப்பகங்களில் விட்டுச் செல்லலாம். அரசு காப்பகங்களில் கட்டணம் இல்லை. சில வீடுகளில் தாத்தா பாட்டிகள் பிள்ளைகளைப் பகல் வேளைகளில் பார்த்துக்கொள்வார்கள். அவர்கள் செலவழிக்கிற நேரத்துக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும். இது விதியில்லை. சீன கலாசாரத்திலேயே உள்ளது.

ஹாங்காங்கில் கணவர்கள் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்வார்கள். சாக்கு போக்கு சொல்லித் தப்பிக்க முடியாது. ஏனெனில், அங்கே கணவர் களைத் தேர்ந்தெடுப்பது பெண்கள்தாம். கணவருக்கும் இரண்டு மாதங்கள் வரை பேறு கால விடுப்பு கிடைக்கும். மனைவி விரைவில் பணிக்குத் திரும்ப வேண்டியிருந்தால், கணவனின் விடுப்பை நிறுவனங்கள் அங்கே நீட்டித்துத் தருகிறார்கள்.

- மு.இராமனாதன், எழுத்தாளர்

பெண்களின் வளர்ச்சியைத் தடைசெய்துவிடும்!

‘’இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கும் முறை ஐரோப்பிய நாடுகளில் இல்லை. இங்கு பெண்கள் வேலைக்குச் செல்லாமல் இருக்க மாட்டார்கள் என்பதால், பெண்களுக்குத் தேவையான மற்ற எல்லா உதவிகளையும் அரசாங்கம் செய்துவருகிறது. உதாரணத்துக்கு, கருத்தரித்த பெண் சில மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டும். கணவர் வேலைக்குச் செல்ல வேண்டும். அந்த நேரத்தில் அவர்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், அரசாங்கத்திடம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

குழந்தையைக் காப்பகத்தில் விடுவதற்கான பண உதவியையும் அரசாங்கம் வழங்குகிறது. ஒருவேளை குழந்தை மாற்றுத்திறனாளியாக இருந்து, அம்மா எந்நேரமும் அக்குழந்தையுடன் இருக்க வேண்டும் என்ற நிலையில், அந்தப் பெண்ணால் வேலைக்குச் செல்ல முடியாது. இதற்கும் அரசாங்கம் உதவி செய்யும். வேலையில்லாமல் அடுத்த வேலைக்கு முயன்று கொண்டிருக்கும் சில மாதங் களுக்கும் அரசாங்கத்திடம் இருந்து பெண்கள் நிதி உதவி பெற்றுக்கொள்ளலாம்.

இப்படி, தேவைப்படுகிற கால கட்டத்தில்தான் அரசாங்கம் உதவிகளைச் செய்ய வேண்டுமே தவிர, அவர்களின் அன்றாட வீட்டு வேலைகளைக் கணக்கிட்டு, அதற்கு ஊதியம் வழங்குவது பெண்களின் வளர்ச்சியைத் தடை செய்துவிடும். இல்லத்தரசிகளுக்கு அரசாங்கமே ஊதியம் கொடுக்க ஆரம்பித்தால் ‘நீ வீட்டுவேலை மட்டும் செஞ்சா போதும்’ என்று கணவரும், கணவரின் குடும்பத்தாரும் பெண்களை வீட்டுக்குள் உட்கார வைத்துவிடலாம்.

அரசன், பத்திரிகையாளர் (ஐரோப்பா)

#VikatanPollResults

இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்குவது குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, விகடன்.காம் வலைதளத்திலும், ட்விட்டர் பக்கத்திலும் கருத்துக்கணிப்பு செய்யப்பட்டிருந்தது. அதில் கிடைத்த சர்வே ரிசல்ட்...