Published:Updated:

அந்த மரணம்தான் எனக்கு ஆற்றலைத் தந்தது! - ஸ்ரீதேவி

  ஸ்ரீதேவி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீதேவி

வித்தியாசம்

அந்த மரணம்தான் எனக்கு ஆற்றலைத் தந்தது! - ஸ்ரீதேவி

வித்தியாசம்

Published:Updated:
  ஸ்ரீதேவி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீதேவி

“பெசன்ட் நகர்ல ஒரு முதியவருக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாகத் தகவல். உடனே அங்க போனேன். அவர் பக்கத்தில் போகவே எல்லோரும் தயங்கினாங்க. நான் அவரைத் தூக்கி, சுத்தப்படுத்தி என் மடியில் படுக்கவெச்சு தண்ணி கொடுத்தேன். தண்ணீர் தொண்டையில் இறங்கிட்டிருக்கும்போதே அவர் உயிர் என் மடியிலேயே பிரிஞ்சுடுச்சு. அந்த மரணத்திலிருந்து மனரீதியா வெளியில் வர எனக்கு ஒரு வாரம் தேவைப்பட்டுச்சு. ஆனா, அந்த மரணம்தான், `இனி இப்படி ஒரு உயிர் போகக் கூடாது'ன்னு ஆதரவற்றவங்களை அடுத்தடுத்து பாதுகாக்கிற ஆற்றலை எனக்குத் தந்தது'' என்று தொடங்குகிறார் ஸ்ரீதேவி.

அந்த மரணம்தான் எனக்கு ஆற்றலைத் தந்தது! - ஸ்ரீதேவி

“மத்தவங்களுக்கு உதவுறது சேவை இல்ல, அதுவும் கடமைதான். ஆரம்பத்தில், பொருளாதார உதவிகளா இல்லாம, ஆதரவற்றவர்களை மருத்துவமனைக்கு அழைச்சிட்டுப் போறது, வயசானவங்களைக் குளிப்பாட்டி விடறது, தொழுநோயாளிகளுக்கு உதவறதுன்னு என் உடல் உழைப்பால் உதவி செய்துட்டிருந்தேன். அப்புறம் சமூக வலைதளங்களைக் கருவியா பயன்படுத்தி, உதவி தேவைப்படுறவங்களுக்கும் உதவுறவங் களுக்கும் இடையே ஒரு பாலமா இருந்தேன். கல்லூரியில் படிச்சப்ப, என் நண்பர்களுடன் இணைந்து எளிய மக்கள் வாழும் இடங்களுக்குப் போவேன். பாலியல் விழிப்புணர்வு, பெண் கல்வியின் முக்கியத்துவம் போன்றவற்றை அங்கே வீதி நாடகங்களா அரங்கேற்றுவோம்; அடிப்படைக் கல்வியைக் கற்றுக்கொடுப்போம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒருகட்டத்தில், மக்களுக்குத் தங்களுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்துக்க பொருளாதார உதவிதான் முதன்மையாகத் தேவைப்படுதுன்னு புரிஞ்சது. அதனால வேலை தேட ஆரம்பிச்சேன். அப்போ இயக்குநர்

லிங்குசாமி சார் தயாரிச்ச ‘ஜிகினா’ படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைச்சது. ஆனா, திரையில் எனக்கான அடையாளத்தை உருவாக்கிக்க முடியலை. டப்பிங் ஆர்ட்டிஸ்ட் டாக என் பயணத்தை மாத்தினேன். நிறைய போராட்டங்களுக்குப் பின் சினிமாவிலும் சீரியலிலும் டப்பிங் வாய்ப்பு கிடைச்சது. வருமானம் குறைவா இருந்தாலும், என் அத்தியாவசிய தேவைகள் போக, வருமானத்தில் 40 சதவிகிதத்தை மத்தவங்களுக்காகச் செலவு பண்றேன்’’ என்கிற ஸ்ரீதேவி கடந்த மூன்று வருடங்களில் 300-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்களை, தன் நண்பர்களின் உதவியுடன் சேவை இல்லங்களில் சேர்த்துள்ளார்.

அந்த மரணம்தான் எனக்கு ஆற்றலைத் தந்தது! - ஸ்ரீதேவி

‘`ஆதரவற்று இருக்கிறவங்ககிட்ட, ‘உங்களைப் பாதுகாப் பான இடத்துல சேர்க்கிறேன் வாங்க’னு சொன்னா, அவங்க நம்மை சந்தேகத்தோடு பார்ப்பாங்க. அவங்க நம்பிக்கையைப் பெற, பல மணி நேரமெல்லாம்கூட பேசவேண்டியிருக்கும். அவர்களை ஆதரவற்றோர் இல்லங்களில் காவல்துறையின் உதவியோடு சேர்த்துட்டா, பின்னால நமக்கு எந்தப் பிரச்னையும் வராது’’ என்கிறவரிடம், குடும்பத்தின் ஆதரவு பற்றிக் கேட்டோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘`ஆரம்பத்துல எங்க வீட்டில் எதிர்ப்பு தெரிவிச்சாலும், இப்போ என்னைப் புரிஞ்சுக்கிட்டு முழுமனசோடு இதையெல்லாம் செய்ய அனுமதிக்கிறாங்க. டப்பிங் வேலைகள் போக மற்ற நேரங்களில் எல்லாம் சேவை வேலைகளையே பார்த்திட்டிருக்கேன். மாற்றுத்திறனாளி மாணவர்கள் 60 பேருக்கு மாலை நேரங்களில் இலவச ட்யூஷன் எடுப்பதோடு, 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல் பாடங்களை நண்பர்களோடு சேர்ந்து ட்யூஷன் எடுக்கிறேன். ஏழை மாணவர்களுக்குக் கல்வி உதவிகளை ஒருங்கிணைக்கிறேன்.

அந்த மரணம்தான் எனக்கு ஆற்றலைத் தந்தது! - ஸ்ரீதேவி

இவை தவிர, விசேஷங்களில் வீணாகும் உணவுகளை சேகரிச்சு பசியில் இருக்கிறவங்களுக்குக் கொடுக்கிறேன். அதைப் பற்றி எனக்குத் தகவல் கொடுத்தா போதும். அந்த ஏரியாவில் இருக்கும் என் நண்பர்கள் விசேஷம் நடக்கும் இடத்துக்குப் போய் உணவை கலெக்ட் செய்துக்குவாங்க’’ என்கிறவர் உறுதிபடச் சொல்லி முடிக்கிற விஷயம் எல்லோருக்குமானது.

‘உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை’னு கேட்கிறவங்க கேட்டுட்டே தான் இருப்பாங்க. அப்புறம் இந்தச் சமுதாயத்துக்கு யார் தான் பொறுப்பு? நீங்களும் நானும்தானே!”

ஸ்ரீதேவியின் வார்த்தை களும் வாழ்க்கையும் பலர் மனங்களிலும் சேவை விதை தூவக்கூடியவை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism