Published:Updated:

`சமூக வலைதள ஆதரவுக்கு நன்றி; ஆனால் சூழலை அது மாற்றவில்லை!’ - வீடு இடிக்கப்பட்ட அஃப்ரீன் ஃபாத்திமா

அஃப்ரீன் ஃபாத்திமா ( ட்விட்டர் )

''இது என் கதை மட்டுமில்லை. இந்தியாவில் உள்ள அனைத்து இஸ்லாமிய குடும்பத்தின் கதையாகவே உணர்கிறேன். இஸ்லாமியர்கள் வெளியே பேசினாலே காவல்துறை கைது செய்யலாம் என்ற நிலைதான் நீடிக்கிறது.” - அஃப்ரீன் ஃபாத்திமா

`சமூக வலைதள ஆதரவுக்கு நன்றி; ஆனால் சூழலை அது மாற்றவில்லை!’ - வீடு இடிக்கப்பட்ட அஃப்ரீன் ஃபாத்திமா

''இது என் கதை மட்டுமில்லை. இந்தியாவில் உள்ள அனைத்து இஸ்லாமிய குடும்பத்தின் கதையாகவே உணர்கிறேன். இஸ்லாமியர்கள் வெளியே பேசினாலே காவல்துறை கைது செய்யலாம் என்ற நிலைதான் நீடிக்கிறது.” - அஃப்ரீன் ஃபாத்திமா

Published:Updated:
அஃப்ரீன் ஃபாத்திமா ( ட்விட்டர் )

முகமது நபிகள்குறித்து பா.ஜ.கவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியதால், நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக கடந்த வெள்ளிக்கிழமை உத்தரப்பிரதேசத்தில் உள்ள மொரதாபாத், பிரக்யாராஜ் ஆகிய இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

அஃப்ரீன் ஃபாத்திமா
அஃப்ரீன் ஃபாத்திமா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு கட்டத்தில் போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டத்தை முன்னின்று நடத்தியதாக ஜாவேத் முகமது என்ற நபர் கைது செய்யப்பட்டார். ஜாவேத் முஹமதுவின் வீடு புல்டோசர் மூலம் ஜூன் 12-ம் தேதி இடித்துத் தள்ளப்பட்டது. இது குறித்து ஜூன் 10, 2022 தேதியிட்ட பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையத்தின் அறிவிப்பில், ’ஜாவேத்தின் வீடு சட்டவிரோதக் கட்டுமானம் என்று மே 10 அன்று அவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மே 24 அன்று விசாரணைக்கு வரும்படி கூறப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மே 25 அன்று வீட்டை இடிக்க முடிவு எடுக்கப்பட்டது. மேலும் ஜூன் 9 வரை அவருக்கு அவகாசம் வழங்கப்பட்டது. அப்போதும் அவர் ஆஜராகாத காரணத்தால் ஜூன் 12-ம் தேதி காலை 11 மணிக்குள் வீட்டைக் காலி செய்யுமாறு கூறப்பட்ட பிறகுதான் வீடு இடிக்கப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது

இந்நிலையில் வீடு இடிக்கப்பட்ட விவகாரம் குறித்து ஜாவேத் முஹமதின் மகளும், சமூக ஆர்வலருமான அஃப்ரீன் ஃபாத்திமா, இந்தியாவில் இடிக்கப்பட்ட வீடுகளின் குரலாக தொடர்ந்து பேசி வருகிறார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவியான அவர், ஆளும் பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சிப்பவர். இவர் Article-14 இணைய ஊடகத்துக்கு தனது வீடு இடிக்கப்பட்டது குறித்து பேட்டியளித்துள்ளார். அதில்...

அஃப்ரீன் ஃபாத்திமா
அஃப்ரீன் ஃபாத்திமா

"எங்கள் வீடு இடிக்கப்படலாம் என முன்னரே தெரிந்து வீட்டைவிட்டு வெளியேறினோம். எனது வீடு இடிக்கப்பட்ட பின் என் மனம் வெறுமையாகிவிட்டது. நான் முடங்கிவிட்டதாக உணர்ந்தேன். என்ன செய்வது, யாரை அழைப்பது என்று தெரியவில்லை. ஒரு கனவு போல் உணர்ந்தேன்.

கைது செய்யப்பட்ட என் தந்தை மீதான குற்றச்சாட்டுகள் தெளிவாக இல்லை. அவர் அலகாபாத்தில் உள்ள நைனி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்தன. என் தாயும் சகோதரியும் போலீஸ் காவலில் இருப்பது பற்றியும் முரண்பட்ட தகவல்கள் வந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அரசின் குற்றச்சாட்டு 'முழு பொய்'!

எங்கள் வீடு சட்டவிரோதமான கட்டுமானம் என்பது முழுமையான பொய். நோட்டீஸ் குறித்து எங்கள் குடும்பத்தாரிடம் எந்தத் தகவலும் சொல்லப்படவில்லை. வீடு இடிக்கப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு அதிகாரிகள் வீட்டின் முன்பு நோட்டீஸை ஒட்டிக்கொண்டார்கள்.

இடிக்கப்பட்ட வீடு
இடிக்கப்பட்ட வீடு

நானும் என் தந்தையும் பா.ஜ.கவினர், சிறுபான்மையினரை மோசமான முறையில் நடத்துவதை விமர்சிக்கும் இஸ்லாமியர்கள் என்பதால் எங்கள் குடும்பம் குறிவைக்கப்படுகிறது" என்றார்.

"இது எனக்கும் எனது அரசியலுக்கும் அல்லது என் தந்தைக்கும் அவரது அரசியலுக்கும் எதிரானது மட்டுமல்ல. எங்கள் முழு குடும்பத்துக்கும் எதிரான பழிவாங்கும் செயல். அவர்கள் என் அம்மாவையும் சகோதரியையும் அழைத்துச் சென்றது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எங்கள் பாதுகாப்பு மட்டுமே இப்போதைக்கு என் கவனமாக இருக்கிறது.

அஃப்ரீன் ஃபாத்திமா
அஃப்ரீன் ஃபாத்திமா

சமூக ஊடகங்களில் எனக்குக் கிடைத்த ஆதரவுக்கு நன்றி. ஆனால் அது எங்களது தற்போதைய யதார்த்தத்தையோ, எனது குடும்பத்துக்கு இழைக்கப்படும் சட்டரீதியான அடக்குமுறையையோ, பிராயாக்ராஜ் மீது ஏற்பட்ட பயத்தையோ மாற்றவில்லை. இது மிகவும் பதற்றமான சூழ்நிலை. இப்படி வாழ்வது மிகவும் பயமாக இருக்கிறது. இது என் கதை மட்டுமில்லை. இந்தியாவில் உள்ள அனைத்து இஸ்லாமிய குடும்பத்தின் கதையாகவே உணர்கிறேன். இஸ்லாமியர்கள் வெளியே பேசினாலே காவல்துறை கைது செய்யலாம் என்ற நிலைதான் நீடிக்கிறது” என்று அஃப்ரீன் ஃபாத்திமா தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism