Published:Updated:

மருத்துவர் டு ஐ.பி.எஸ்; சாதித்துக்காட்டிய பஞ்சாபின் சிங்கப்பெண்; யார் இந்த தர்பன் அலுவாலியா?

பாஸிங் அவுட் பரேட் (Passing out parade) அணிவகுப்புக்குத் தலைமை தாங்கிய ஆறாவது பெண் ஐ.பி.எஸ் என்ற பெருமையுடன் அந்த அணிவகுப்பை வழிநடத்திய தர்பன் அலுவாலியா, ``காவல் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற என் தாத்தாவைப் பார்த்து தோன்றிய என் ஐ.பி.எஸ் கனவு நிறைவேறிவிட்டது" என்கிறார்.

நம் எல்லோருக்குமே எதிர்காலம் குறித்த கனவுகள் இருக்கும். ஆனால், வாழ்வில் அடுத்தடுத்த நிலைகளை அடையும்போது அந்தக் கனவு சிலருக்குத் தேய்ந்துபோகலாம். அதை எட்டிப்பிடிக்க வழிகள் இருந்தாலும், பெண்களுக்குப் பெரும்பாலும் அதற்குத் தடைகளும் அதிகம் இருக்கும். அதையும் தாண்டி அக்கனவை எட்ட, மனவலிமை அதிகம் தேவை.

Darpan Ahluwalia
Darpan Ahluwalia
Twitter Photo:/ @svpnpahyd
``குடும்பத்துக்காக சமைக்கிற பெண்கள்தான் என் இன்ஸ்பிரேஷன்; ஏன்னா..?!" - `மாஸ்டர் செஃப்' வின்னர் தேவகி

அப்படி ஒரு வலிமையான பெண்தான், பஞ்சாபை சேர்ந்த தர்பன் அலுவாலியா. தன் ஆர்வமான மருத்துப் படிப்பை முடித்து, படிக்கும் காலத்திலேயே தன் எண்ணப்படி தன்னார்வத் தொண்டு நிறுவனத்தையம் தொடங்கியவர், தன் கனவான ஐ.பி.எஸ் பணியையும் இப்போது நனவாக்கியுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் தேசிய போலீஸ் அகாடெமியில், பாஸிங் அவுட் பரேட் (Passing out parade) அணிவகுப்புக்குத் தலைமை தாங்கிய ஆறாவது பெண் ஐ.பி.எஸ் என்ற பெருமையுடன் அந்த அணிவகுப்பை வழிநடத்திய தர்பன் அலுவாலியா, ``காவல் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற என் தாத்தாவைப் பார்த்து தோன்றிய என் ஐ.பி.எஸ் கனவு நிறைவேறிவிட்டது" என்கிறார் பெருமையுடன்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொஹாலியைச் சேர்ந்த தர்பன் அலுவாலியா, பாட்டியாலாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் 2017-ல் தனது மருத்துவப் படிப்பை முடித்தார். கல்லூரிக் காலத்திலேயே, பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். பின்னர், தன்னார்வத் தொண்டு நிறுவனமான ``பிங்க் லிங்க்' பிரசாரத்தின் உதவியுடன், அதிக எண்ணிக்கையிலான பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம்களை ஏற்பாடு செய்து வந்தார்.

இந்நிலையில், காவல்துறையிலும், சட்டத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தன் தாத்தாவின் மூலம் அத்துறைகளின் அறியாத பக்கங்களை கேட்டறிந்ததால் ஏற்பட்ட ஆர்வத்தால், மருத்துவத் துறை மக்கள் பணியைவிட காவல்துறை மக்கள் பணியில் ஆர்வம்கொண்டார். 2019-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற இவர், இந்திய அளவில் 80-வது இடத்தைப் பிடித்தார். இது அவரின் இரண்டாவது முயற்சியாகும்.

தேர்வில் வெற்றி பெற்றதை அடுத்து ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வந்தார் தர்பன் அலுவாலியா. பயிற்சி முடிந்து பஞ்சாப் கேடரில் ஐ.பி.எஸ் அதிகாரியாகியுள்ளார். முன்னதாக பயிற்சியின்போது நடந்த அடிப்படை பாடத்திட்டத்தில் உள் மற்றும் வெளிப் பாடத்திட்டங்களில் ஓவர் ஆல் கோப்பையையும், மேலும் அங்கு நடந்த பதக்க விழாவின்போது உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குக்கான தியாகி கே.எஸ். வியாஸ் டிராஃபியையும் வென்றார்.

Darpan Ahluwalia
Darpan Ahluwalia
Twitter Photo:/ @svpnpahyd
`இங்கு கால்நடை மருத்துவர்களின் தேவை அதிகம்!' - நுழைவுத் தேர்வில் தேசிய அளவில் சாதித்த ஓவியா

சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முன், மருத்துவர் அலுவாலியா அரசு மூன்றாம் நிலை சுகாதார மையத்தில் சில வருடம் வேலைபார்த்து வந்தார். அந்த அனுபவம், தனது இலக்குகளில் இன்னும் தெளிவாகக் கவனம் செலுத்த உதவியது எனக் கூறியுள்ளார்.

``மருத்துவச் சேவையிலிருந்து ஐ.பி.எஸ் பொறுப்புக்கு மாறுவது, என் பாதையை மாற்றுவது அல்ல, நான் செய்து வந்த சேவைகளை இன்னும் பெரிய அளவில் செய்வதற்கான வழி என்றே நினைக்கிறேன். இந்தப் புதிய பணியின் மூலம் மக்கள், குறிப்பாக, பெண்கள் எந்த ஒரு நெருக்கடி அல்லது அவசரநிலையிலும் காவல்துறையை நாடும்போது அவர்களுக்கு உறுதுணையாக இருப்பேன்” என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு