Published:Updated:

"சென்னை போன்ற பெருநகரங்களில் நாசூக்காக சாதி பார்க்கிறார்கள்!" - பி.சுகந்தி பார்வை

விகடன் டீம்

கிராமப்புறப் பெண்களில் பலரிடம் சாதிய உணர்வு அதிகமாக இருக்கிறது என்பது ஒரு கசப்பான உண்மை.

suganthi
suganthi

பி.சுகந்தி, மாநில பொதுச்செயலாளர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம். பெண்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துவருபவர். பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாகக் களத்தில் போராடி வெற்றிகளைப் பெற்றவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக சென்னை, திரு.வி.க நகர் தொகுதியில் போட்டியிட்டு, கணிசமான வாக்குகளைப் பெற்றவர். அவருடனான சந்திப்பிலிருந்து... விரிவாக படிக்க... http://bit.ly/2k8bS7i

ஆணாதிக்க அரசியல் என்று இருக்கிறது. பெண்ணாதிக்க அரசியல் இருக்கிறதா?

நம் சமூகத்தில் அனைத்து நடை முறைகளும் ஆணாதிக்கத்தால் கட்டமைக்கப்பட்டவையே. `ஆண் உயர்ந்தவர், பெண் தாழ்ந்தவள்' என்கிற சிந்தனை ஆண்டாண்டு காலமாக ஊறிப்போயிருக்கிறது. அரசியல் உட்பட அனைத்தும் ஆணாதிக்கத்தை மையப் படுத்தியே இருக்கின்றன. இதே சமூகத்தில் இருக்கும் பெண்களும் இயல்பாகவே ஆணாதிக்க சிந்தனைகளுடன் வளர்க்கப்படுகிறார்கள். அதுதான் யதார்த்தம்.

சமீபகாலமாக, சாதியக் கட்சிகளால் பெண்கள் திரட்டப்படும் போக்கு அதிகரித்துவருகிறது.

சாதாரண பெண்கள் எந்த மாதிரியான அரசியலைப் பேசுகிறார்கள்?

சாதாரண பெண்கள் பேசுகிற அத்தனையுமே அரசியல்தான். ஆனால், அவர்கள் பேசுவது அரசியல் என்பது அவர்களுக்குத் தெரியாது. குடங்களுடன் வீதிக்கு வந்து தண்ணீருக்காகப் போராடுவது, ரேஷன் கடை களில் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்படுவதற்கு எதிராக சண்டை போடுவது என எல்லாமே அரசியல்தான். சுருக்கமாகச் சொல்லப்போனால், வீட்டின் அடுப்படியிலுள்ள அஞ்சறைப் பெட்டியி லிருந்தே அரசியல் தொடங்கிவிடுகிறது.

சாதி அரசியல் என்பது கிராமப்புறப் பெண்களிடம் எந்த மாதிரியாக உள்ளது, நகர்ப்புறப் பெண்களிடம் எந்த மாதிரியாக உள்ளது?

suganthi
suganthi

கிராமப்புறப் பெண்களில் பலரிடம் சாதிய உணர்வு அதிகமாக இருக்கிறது என்பது ஒரு கசப்பான உண்மை. சாதி வன்முறை நிகழும் பல இடங்களில் பெண்கள் நேரடியாக வந்து சாதிய ஒடுக்குமுறையை நிகழ்த்துபவர்களாக இருக்கிறார்கள். ஆண்டாண்டுக் காலமாக சாதிய உணர்வு உரமூட்டி வளர்க்கப்பட்டதுதான் காரணம். சமீபகாலமாக, சாதியக் கட்சிகளால் பெண்கள் திரட்டப்படும் போக்கு அதிகரித்துவருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில், நாசூக்காக சாதி பார்க்கிறார்கள். பக்கத்து வீட்டுக்குக் குடி வந்திருப்பவர்கள் என்ன சாதி என்பதைத் தெரிந்துகொள்வதற்கு விதவிதமான முயற்சிகளைக் கையாள்கிறார்கள்.

> கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலை சாதாரண பெண்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? மதவாத அரசியலை பெண்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?

ஜனநாயக மாதர் சங்கம் முன்னெடுக்கும் அரசியல் என்ன? - இந்தக் கேள்விகளுக்கு பி.சுகந்தி அளித்த பதில்களை அவள் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > அஞ்சறைப்பெட்டியிலிருந்தே தொடங்குகிறது அரசியல்! - பி.சுகந்தி https://www.vikatan.com/lifestyle/women/suganthi-talks-about-her-political-journey

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/