Published:Updated:

`கடினமென எதுவுமில்லை; கூடுதல் உழைப்புபோதும்!’ - சுந்தர் பிச்சையின் கவனம் ஈர்த்த பெண்

என்னை வேறு துறைக்கு மாற்றச் சொல்லி பல முறை, பேராசிரியர்களை அணுகியிருக்கிறேன்.

சரஃபீனா நான்ஸ்
சரஃபீனா நான்ஸ் ( twitter )

உலக அளவில் விண்வெளி, அறிவியல், கணிதம் உள்ளிட்ட துறைகளில் இப்போது இருப்பதை விட பன்மடங்கு அதிகரிக்க, அவர்களை ஊக்குவிக்கும் முயற்சிகள் பல்வேறு மட்டங்களில் நடைபெற்றுவருகின்றன.

அவற்றில் ஒன்றாக, வான்இயற்பியல் (Astrophysics) மாணவியான சரஃபீனா நான்ஸ்ஸின் ட்விட்டர் பதிவை, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை நேற்று ரீ ட்விட் செய்து பாராட்டியுள்ளார்.

சரஃபீனா நான்ஸ்சின் பதிவில் "நான் தற்போது வான்இயற்பியலில் முனைவர் பட்டத்திற்கான என்னுடைய இரண்டு ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரித்திருக்கிறேன். ஆனால், நான்கு ஆண்டுகளுக்கு முன் இயற்பியலை என்னுடைய உயர்கல்வியாகத் தேர்வு செய்தற்கு நான் வருந்தாத நாள்களே இல்லை.

Sarafina Nance
Sarafina Nance

கல்லூரியில் நடந்த இயற்பியல் தேர்வில் இரண்டு முறை பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தேன். இயற்பியல் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, வேறு படிப்பைத் தேர்வு செய்யலாமா என்றுகூட யோசித்தேன். என்னை வேறு துறைக்கு மாற்றச் சொல்லி பல முறை, என்னுடைய துறை பேராசிரியர்களை அணுகியிருக்கிறேன்.

அதற்கான வாய்ப்புகள் இல்லையென்ற பின்பு, எனக்கு நானே ஊக்கம் கொடுத்துக்கொண்டு இயற்பியல் துறையில் பயணிக்க ஆரம்பித்தேன். இப்போது அதன் பயனாகத்தான் என்னுடைய முனைவர் பட்டத்தை முடித்துள்ளேன். கடினம் என்று எதுவும் இல்லை. வெற்றி பெற அதிக முயற்சி மட்டும் செய்தால் போதும்" என்று பதிவிட்டுள்ளார்.

சரஃபீனா நான்ஸ்சின் இந்தப் பதிவை சுந்தர் பிச்சை தன்னுடைய ட்விட்டரில் `சரியாகச் சொன்னீர்கள்; பலருக்கு முன்மாதிரியானது’ என்ற கேப்ஷனுடன் என்று ரீ ட்விட் செய்து, ஊக்கப்படுத்தியுள்ளார். சரஃபீனா நான்ஸ் மார்பகப் புற்று நோயிலிருந்து மீண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.