Published:Updated:

மனைவிக்கும் மகளுக்கும் பாலியல் வன்கொடுமை; குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

உச்சநீதிமன்றம்

இதை விசாரித்த கர்நாடக நீதி மன்றம், தன் மனைவியை பாலியல் அடிமையாக வைத்து பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக இந்திய தண்டனை சட்டம் 376வது பிரிவின் கீழ் சுமத்தப்பட்ட குற்றசாட்டுகளை ரத்து செய்ய மறுத்தது.

மனைவிக்கும் மகளுக்கும் பாலியல் வன்கொடுமை; குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

இதை விசாரித்த கர்நாடக நீதி மன்றம், தன் மனைவியை பாலியல் அடிமையாக வைத்து பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக இந்திய தண்டனை சட்டம் 376வது பிரிவின் கீழ் சுமத்தப்பட்ட குற்றசாட்டுகளை ரத்து செய்ய மறுத்தது.

Published:Updated:
உச்சநீதிமன்றம்

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணின் கணவர் தினமும் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, ஆபாசப் படங்களைப் பார்த்து விட்டு அதே போல் தன்னிடம் நடந்துகொள்ளச் சொல்லி மனைவியை வற்புறுத்தி உள்ளார். அப்பெண் கர்ப்பமாக இருந்த போதும் பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமல்லாமல், பள்ளியிலிருந்து வீடு திரும்பும் மகளுக்கும் பாலியல் தொல்லைகள் கொடுத்துள்ளார். மகளின் முன்பே பாலியல் வன்கொடுமை செய்து கணவர் துன்புறுத்தியதாக கர்நாடக நீதிமன்றத்தில் இப்பெண் புகார் அளித்தார்.

இதை விசாரித்த கர்நாடக நீதிமன்றம், தன் மனைவியை பாலியல் அடிமையாக வைத்து வன்கொடுமை செய்த குற்றத்திற்காக இந்திய தண்டனை சட்டம் 376-வது பிரிவின் கீழ் சுமத்தப்பட்ட குற்றசாட்டுகளை ரத்து செய்ய மறுத்தது.

Court (Representational Image)
Court (Representational Image)
Image by succo from Pixabay

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்த கணவர், உச்ச நீதிமன்றத்தில் இந்தப் பிரிவின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி மனுவை தாக்கல் செய்தார். கர்நாடக உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த வழக்கு குறித்த விசாரணைக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு தடை விதிக்காத நிலையில், மே 29-ம் தேதி வழக்கு விசாரணை தொடங்கும் என மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் டேவ் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism