Published:Updated:

"8-வது மாசத்துலேயே ஆபரேஷன் பண்ணி குழந்தையை வெளியே எடுத்துடுவாங்க!" வலி பகிரும் வாடகைத் தாய்!

Child ( Representational image )

இப்போதெல்லாம் ஒரு பிரசவத்திலேயே இரண்டு, மூணு கரு செலுத்திடுறாங்க. ஒரே பிரசவத்தில் ரெண்டு குழந்தையை பெற்றுக் கொடுத்துடுறாங்க. ஒரு குழந்தைக்கு மூணு லட்சம் வாங்கிக்கிறாங்க.

"8-வது மாசத்துலேயே ஆபரேஷன் பண்ணி குழந்தையை வெளியே எடுத்துடுவாங்க!" வலி பகிரும் வாடகைத் தாய்!

இப்போதெல்லாம் ஒரு பிரசவத்திலேயே இரண்டு, மூணு கரு செலுத்திடுறாங்க. ஒரே பிரசவத்தில் ரெண்டு குழந்தையை பெற்றுக் கொடுத்துடுறாங்க. ஒரு குழந்தைக்கு மூணு லட்சம் வாங்கிக்கிறாங்க.

Published:Updated:
Child ( Representational image )
ஆனந்த விகடன் யூடியூப் தளத்தில் வெளியாகும் 'உடைத்துப் பேசுவோம்' பகுதிக்காக வாடகைத்தாய் ஒருவரை நேரில் சந்தித்து பேசினோம். வாடகைத்தாய் குறித்து திடுக்கிடும் தகவல்கள் பலவற்றை அவர் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவரிடம் பேசியதிலிருந்து..
வாடகைத் தாய்
வாடகைத் தாய்

என் பெயர் சுமதி. வியாசர்பாடியில் இருக்கிறேன். எனக்கு மூணு பொண்ணு. ஒரு பையன். என் கணவர் ஆட்டோ ஓட்டிட்டு இருக்கார். எங்க வீட்ல நிறைய கடன் பிரச்னை இருந்துச்சு. பசங்க படிப்புக்கு, சாப்பாட்டுக்குன்னு ரொம்பவே கடன் வாங்கி இருந்தோம். கடன் கொடுத்தவங்க காசு கேட்டு வீட்டு முன்னாடி நின்னு ரொம்ப அசிங்கமா பேசி பிரச்னை பண்ணினாங்க. அதைப் பார்த்துட்டு எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற ஒரு அக்கா வாடகைத் தாய் பற்றி சொன்னாங்க. நீ வாடகைத் தாயாக வந்தால் உனக்கு ரெண்டு லட்ச ரூபாய் வாங்கித் தரேன்னு சொன்னாங்க. என் பசங்க, வீட்டுக்காரர் எல்லாரிடமும் இது குறித்து சொன்னதுக்கு அவங்க வேண்டாம்னு மறுத்துட்டாங்க. அந்த அக்கா கூப்பிட்டாங்கன்னு சும்மா அவங்க கூட அந்த மருத்துவமனைக்கு போனேன். அங்க ஒரு பொண்ணு என்கிட்ட எனக்கு கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆச்சு. இன்னும் எனக்கு குழந்தை இல்லைன்னு என் மாமியார் ரொம்ப டார்ச்சர் பண்றாங்கன்னு சொல்லி வருத்தப்பட்டுச்சு. அது எனக்கு கஷ்டமாகிடுச்சு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வீட்டுக்கு வந்து மறுபடியும் வீட்டுக்காரர்கிட்டேயும், குழந்தைங்ககிட்டேயும் கேட்டேன். அவங்க உன் விருப்பம்னு சொல்லிட்டாங்க. சரின்னு அந்த அக்காகிட்ட வாடகைத் தாயாக வரேன்னு சொல்லவும் என்னை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனாங்க. அவங்க என் உயரம், எடை எல்லாத்தையும் பார்த்தாங்க. வீட்டு முகவரி எல்லாம் வாங்கினாங்க. யாருக்கு குழந்தை பெற்று கொடுக்கப் போறோமோ அவங்க எங்களை பார்த்தாங்களே தவிர எங்களுக்கு அவங்க யாருன்னே தெரியாது. மேற்கொண்டு காசு கேட்கக்கூடாது, குழந்தையை உரிமை கொண்டாடக் கூடாது, காசுக்காகத்தான் இதை நீங்க பண்றீங்கன்னுலாம் சொல்லி என்கிட்ட கையெழுத்து வாங்கிட்டாங்க. ஒரு நாள் மருத்துவமனையில் தங்க வச்சி கரு செலுத்த ஊசி போட்டாங்க. லேசா வயிறு தெரிய ஆரம்பிக்கவும் அந்த ஆஸ்பத்திரியிலேயே ஹாஸ்டல் மாதிரி ஒரு இடம் இருந்துச்சு. அந்த இடத்தில் தங்க வச்சிட்டாங்க. அங்க என்னை மாதிரி பத்து பேர் இருந்தாங்க.

வாடகைத்தாய்
வாடகைத்தாய்

அங்க ரொம்ப நல்லா அக்கறை எடுத்து கவனிச்சிப்பாங்க. 8-வது மாசத்துலேயே ஆப்ரேஷன் பண்ணி குழந்தையை வெளியில் எடுத்துடுவாங்க. கண்ணு முழிச்சு பார்க்கும்போது குழந்தை அங்க இருக்காது. இத்தனை நாளா நம்ம வயித்துல சுமந்த குழந்தை பொண்ணா, ஆணா, கருப்பா, சிவப்பான்னு எதுவுமே தெரியாது. அந்தக் குழந்தை பெற்ற பத்து நாளில் வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. அதுக்கு பிறகு உடம்பு கொஞ்சம் முடியாம போச்சு.. வயிறு வலி எல்லாம் இருந்துச்சுன்னு ஆஸ்பத்திரிக்கு போனா உடனே நமக்கு என்ன ஏதுன்னு பார்க்காம அலட்சியமா நடந்துக்கிட்டாங்க. அது எனக்கு மட்டுமில்லை எல்லாருக்குமே இதுதான் நடக்கும்!

நான் ஒரு முறை வாடகைத் தாயாக இருந்தேன். ரெண்டு லட்சம் கொடுக்கிறதா சொல்லி ஒன்றரை லட்சம் ரூபாய்தான் கொடுக்கிறதா பத்திரத்தில் எழுதி என்கிட்ட காட்டியிருக்காங்க. எழுத, படிக்க தெரியாததனால நானும் கையெழுத்து போட்டுக் கொடுத்துட்டேன். கடைசியில் எனக்கு ஒன்றரை லட்சம் மட்டும் தான் கொடுத்தாங்க. மீதி பணம் கேட்டப்ப டாக்டரும், ஏஜென்ட்டும் பிரிச்சிக்கிட்டாங்கன்னு அப்புறமாகத்தான் தெரிஞ்சது.

வாடகைத்தாய்
வாடகைத்தாய்

இப்போதெல்லாம் ஒரு பிரசவத்திலேயே இரண்டு, மூணு கரு செலுத்திடுறாங்க. ஒரே பிரசவத்தில் ரெண்டு குழந்தையை பெற்றுக் கொடுத்துடுறாங்க. ஒரு குழந்தைக்கு மூணு லட்சம் வாங்கிக்கிறாங்க. இப்ப இதுக்காக வர்றவங்க எல்லாரும் பயங்கர உஷாராக இருக்காங்க. எங்களை மாதிரி ஹாஸ்டலில் எல்லாம் தங்க வேண்டியதில்லை. மாச, மாசம் அவங்க செலவுக்குன்னு 5000 ரூபாய் கொடுக்கிறாங்க.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கரு நம்ம வயித்துல சுமக்குற வரைக்கும் அவங்க செலவு.. பிறந்த பிறகு நமக்கு தான் உடலளவில் அதிக வலி இருக்கும். அப்போதெல்லாம் என்னன்னு கூட பார்க்காம அலட்சியமா நடத்துவாங்க. குழந்தையை கண்ணால கூட பார்க்க முடியலைங்கிற வருத்தம் ரொம்ப இருக்கும். சின்னக் குழந்தைங்க யாராவது விளையாடுறதை பார்த்தா நம்ம வயித்துல பிறந்த குழந்தையும் இப்ப இவ்ளோ பெருசாகிருக்கும்லன்னு தோணும். பிறகு நாம எப்படி அந்தக் குழந்தையை உரிமை கொண்டாட முடியும்னு என்னை நானே சமாதானம் பண்ணிப்பேன்.

இப்படித்தான் ஒருமுறை மருத்துவமனைக்கு போயிருந்தேன். அங்க 12 வயசு பையனுக்கு கிட்னி ஃபெயிலியர். அவங்க குடும்பம் நல்ல வசதியானவங்க. என்னன்னு கேட்டப்ப அந்தப் பையனுக்கு யாருடைய கிட்னியும் செட் ஆகலைன்னு சொன்னாங்க. அந்த நேரத்தில் அந்தக் குழந்தை நல்லா இருக்கட்டும்னு தோணுச்சு. நான் தரேன்னு சொல்லவும், `என் பிள்ளையோட உயிரை வாழ வச்சீங்கம்மா!'ன்னு சொல்லி அந்தப் பையனுடைய அம்மா என் காலிலேயே விழுந்துட்டாங்க. அப்புறம் ரெண்டு பேருடைய ரத்தத்தையும் டெஸ்ட் பண்ணி பார்த்துட்டு ஓகேன்னு சொன்னாங்க. அந்த பையனுக்காக என் கிட்னியையும் தானம் கொடுத்திட்டேன்.

மேலும் பல விஷயங்கள் குறித்து அவர் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!