Published:Updated:

ஹிஜாப் அணிந்து பாடம் எடுக்க தடை விதித்த கல்லூரி; பணியை ராஜினாமா செய்த பெண் விரிவுரையாளர்!

Women wearing Hijab (Representational Image) ( Image by hjrivas from Pixabay )

``மாணவர்களுக்கு மட்டும்தான் `ஒரே சீருடை' சட்டம் என்று நினைத்திருந்தேன். ஆனால் ஆசிரியர்களுக்கும் அது உண்டு என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை'' என்று கூறியவர் அடுத்த நாள், அதாவது பிப்ரவரி 16-ம் தேதி தன் பணியை ராஜினாமா செய்து அதை அறிவித்தார்.

ஹிஜாப் அணிந்து பாடம் எடுக்க தடை விதித்த கல்லூரி; பணியை ராஜினாமா செய்த பெண் விரிவுரையாளர்!

``மாணவர்களுக்கு மட்டும்தான் `ஒரே சீருடை' சட்டம் என்று நினைத்திருந்தேன். ஆனால் ஆசிரியர்களுக்கும் அது உண்டு என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை'' என்று கூறியவர் அடுத்த நாள், அதாவது பிப்ரவரி 16-ம் தேதி தன் பணியை ராஜினாமா செய்து அதை அறிவித்தார்.

Published:Updated:
Women wearing Hijab (Representational Image) ( Image by hjrivas from Pixabay )

கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமியப் பெண்கள் கல்வி நிலையங்களுக்கு ஹிஜாப் அணிந்து வருவதை தடை செய்ததை தொடர்ந்து, தும்குரு மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி பெண் விரிவுரையாளர் ஒருவர் தன் பணியை ராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வந்த பெண்களை வகுப்புக்குள் அனுமதிக்காததை தொடர்ந்து அவர்கள் போராட்டம் செய்தது, இந்து மாணவர்கள் பதிலுக்கு காவித் துண்டு அணிந்து போராடியது, பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அளித்தது, 144 சட்டம் அமல்படுத்தப்பட்டது என அடுத்தடுத்து பல சம்பவங்கள் நிகழ்ந்தன.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் தும்குரு மாவட்டத்தில் உள்ள ஜெயின் கல்லூரியில் பணியாற்றி வரும் சாந்தினி என்ற பகுதி நேர பெண் விரிவுரையாளர், கடந்த 15-ம் தேதி தனது வகுப்பிற்கு ஹிஜாப் அணிந்து வந்துள்ளார். ஆசிரியர்கள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என்று கூறிய கல்லூரி நிர்வாகம் அவரை வகுப்பிற்கு செல்ல அனுமதிக்கவில்லை.

Women wearing Hijab (Representational Image)
Women wearing Hijab (Representational Image)
Photo by mostafa meraji on Unsplash

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில், ``மாணவர்களுக்கு மட்டும்தான் `ஒரே சீருடை' சட்டம் என்று நினைத்திருந்தேன். ஆனால் ஆசிரியர்களுக்கும் அது உண்டு என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை'' என்று கூறியவர் அடுத்த நாள், அதாவது பிப்ரவரி 16-ம் தேதி தன் பணியை ராஜினாமா செய்து அதை அறிவித்தார்.

மேலும் அவர், ``இத்தனை வருடங்களாக நான் ஹிஜாப் அணிந்து வந்துதான் வகுப்பெடுத்திருக்கிறேன். என் ஆடை குறித்து நான் முடிவெடுக்க முடியாது என்று கூறப்படும் சூழ்நிலையை நான் சந்திப்பது இதுவே முதல் முறை. இந்தியாவில் கலாசாரம் பெண்களைக் கட்டுப்படுத்துவதாக உணர்கிறேன். எங்கள் வீட்டில் என்னுடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். சகோதரர்கள், சகோதரிகளுக்கு இடையில் எங்கள் தந்தை எந்த வேறுபாடும் காட்டவில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஹிஜாப் பிரச்னையில் நல்லவிதமான தீர்ப்பு வந்தவுடன் முதல்வர் என்னை மறுபடியும் கல்லூரியில் சேர்த்துக்கொள்வார் என்று நம்புகிறேன். இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படும் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மீது அனைவரது பார்வையும் இருக்கும் நிலையில், பன்முகத்தன்மை, தனித்துவம் மற்றும் கலாசாரத்தை மேம்படுத்தும் உத்தரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்'' என்று சாந்தினி கூறியிருக்கிறார்.

மேலும், ``கல்வி என்பது மாணவர்களுக்கு அன்பையும், ஒற்றுமையையும் உருவாக்கும் இடமெனக் கருதினேன். ஆனால் தற்போதைய சூழ்நிலையைப் பார்க்கும்போது அரசியல்வாதிகள் தங்களுடைய லாபநோக்கிற்கு இவற்றைப் பயன்படுத்துகிறார்கள். நான் இந்தக் கல்வி நிறுவனம் அல்லது முதல்வருக்கு எதிரானவள் அல்லர். ஆனால் நான் அமைப்புக்கு எதிராக நிற்கிறேன்" என்று கூறிய சாந்தினி, ஹிஜாப் சர்ச்சை தேர்தலை மனதில் வைத்து அரசியல் ரீதியாகத் தூண்டப்பட்டது என்றும் தெரிவித்தார்.

ஹிஜாப் சர்ச்சை
ஹிஜாப் சர்ச்சை

இந்த சர்ச்சைக்கு மத்தியில், பிப்ரவரி 17-ம் தேதி அன்று தும்குருவில் உள்ள அரசு பெண்கள் கல்லூரிக்கு வெளியே போராட்டம் நடத்தியதற்காக, CrPC யின் 144 வது பிரிவின் கீழ் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மீறியதற்காக 10 மாணவிகள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 143, 145, 188 மற்றும் 149 ஆகிய பிரிவுகளின் கீழ் கர்நாடக காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யதுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீறுபவர்களை கைது செய்யுமாறு கர்நாடக அரசை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெள்ளிக்கிழமை வலியுறுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ``நீதிமன்ற இடைக்கால உத்தரவை மீறுபவரை எந்த அணியாக இருந்தாலும் சரி, அவர்களை சிறைக்குள் தள்ளுங்கள்” என்று மத்திய அமைச்சர் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism