Published:Updated:

புடவைக்கு மேல் கட்டாய கோட் அணியக் கட்டுப்பாடு; பாலின பாகுபாட்டை எதிர்த்து வேலையைவிட்ட ஆசிரியை!

பாகுபாடு

``சில மாணவர்கள், ஆசிரியைகளை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதால் இப்படி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக சக ஆசிரியைகள் தெரிவித்தனர். அது உண்மையானால், அந்த மாணவர்களுக்கு தேவை பாலியல் கல்விதானே தவிர, ஆசிரியர்களுக்கு எதற்கு ஆடைக்கட்டுப்பாடு?"

புடவைக்கு மேல் கட்டாய கோட் அணியக் கட்டுப்பாடு; பாலின பாகுபாட்டை எதிர்த்து வேலையைவிட்ட ஆசிரியை!

``சில மாணவர்கள், ஆசிரியைகளை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதால் இப்படி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக சக ஆசிரியைகள் தெரிவித்தனர். அது உண்மையானால், அந்த மாணவர்களுக்கு தேவை பாலியல் கல்விதானே தவிர, ஆசிரியர்களுக்கு எதற்கு ஆடைக்கட்டுப்பாடு?"

Published:Updated:
பாகுபாடு

கேரளாவை சேர்ந்த மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ஒருவர், பள்ளியில் தனக்கு விதிக்கப்பட்ட ஆடைக்கட்டுப்பாடு, மற்றும் அங்கு நிலவும் பாலின பாகுபாடு காரணமாக தன் வேலையை விட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.

கேரளாவின் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த லிட்டில் ஃபளவர் பள்ளியில் மேல்நிலை வகுப்புகளுக்கு ஆங்கில ஆசிரியையாக கடந்த மே மாதம் பணியில் சேர்ந்திருக்கிறார் ராணி ஜோசஃப். எந்த வகையான பாகுபாடுகளுக்கும் எதிரானவராக தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் ஆசிரியை ராணி ஜோசஃப், ஆசிரியைகள் தாங்கள் அன்றாடம் அணிந்து வரும் புடவை அல்லது சுடிதாருக்கு மேல் கோட் அணியவேண்டும் என்று பள்ளி நிர்வாகத்தால் நிர்பந்திக்கப்பட்டதாகக் கூறியிருக்கிறார்.

Representational Image
Representational Image
Pixabay

தனது பணி விலகல் குறித்து அங்குள்ள ஊடகங்களில் அவர் விரிவாகப் பேசியிருக்கிறார். ``அந்தப் பள்ளி இருபாலருக்குமான பள்ளி என்ற போதிலும் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனி வகுப்பறைகள் இருக்கும். அதேபோல இருபாலினருக்கும் இருவேறு படிக்கட்டுகள் இருக்கும். இவற்றை கண்காணிப்பதற்கென்றே அங்கு அன்றாடம் சில ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அப்பள்ளியில் படிக்கும் மாணவிகள்கூட, தாங்கள் ஒன்றாக நடக்கவோ, குழுவாக நின்று பேசவோ பல்வேறு விதிகளும் கட்டுப்பாடுகளும் உள்ளன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்பள்ளியில் மாணவ - மாணவியருக்கு மட்டுமன்றி ஆசிரியைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு அங்கு பணிபுரியும் ஆசிரியைகள், தங்களது உடைக்கு மேலே கோட் அணிந்து வரவேண்டும் என்பது விதி. எனக்கும் அப்படி விதி இருந்தது. இந்த மாத தொடக்கத்தில் நான் எனக்கான கோட்-ஐ பெற்றேன். அதன் அளவில் சில மாற்றங்கள் செய்ய வேண்டி, ஆல்ட்ரேஷனுக்காக கொடுத்திருந்தேன். இதனால், சில தினங்களுக்கு என்னால் கோட் அணியமுடியவில்லை.

பெண்
பெண்

ஆனால், அதை புரிந்து கொள்ளாமல், பள்ளியின் முதல்வர் கோட் அணிவது பற்றி எனக்கு நினைவூட்டிக்கொண்டே இருந்தார். இது, எனக்குத் தொல்லை கொடுப்பது போல ஒருகட்டத்தில் மாறியது. செப்டம்பர் 14-ம் தேதியன்று, பள்ளி முதல்வர் என்னை மாணவர்கள் முன்னிலையில் வைத்து, கோட் அணியாதது குறித்து கடுமையாகக் கேட்டார். அவருடைய அந்த நடவடிக்கை, நான் ஆபாசமாக உடையணிந்திருப்பது போன்ற தோற்றத்தை எனக்கு ஏற்படுத்தியது. இதனால் நான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானேன்.

சில மாணவர்கள், ஆசிரியைகளை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதால் இப்படி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக சக ஆசிரியைகள் தெரிவித்தனர். அது உண்மையானால், அந்த மாணவர்களுக்கு தேவை பாலியல் கல்விதானே தவிர, ஆசிரியர்களுக்கு எதற்கு ஆடைக்கட்டுப்பாடு என்று கேட்டேன். ஆனால் அதற்கு எந்த பதிலும் இல்லை.

என் பணி விலகல் முடிவு குறித்து பேச்சு நடத்த ஆசிரியர் - மாணவர் அமைப்பை சேர்ந்த சிலர் என்னை அணுகினர். இந்த விஷயத்தை என்னால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. எனக்கு நிகழ்ந்தது, பணியிடத்தில் நிகழ்ந்த துன்புறுத்தலாகும்” என்றுள்ளார். ராணி ஜோசஃப், இப்பள்ளியின் முன்னாள் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

Representational Image
Representational Image

பள்ளியின் மீது வைக்கப்பட்ட இந்த பாலியல் பாகுபாடு குறித்த குற்றச்சாட்டு குறித்து பள்ளி முதல்வர் சோஜி ஜோசஃப் மற்றும் பள்ளியின் மேனேஜர் மாத்யூவிடம் உள்ளூர் ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. ஆனால் அவர்கள் இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

- இன்ஃபேண்ட் ஷீலா