Published:Updated:

பெண்களுக்கு டேர்ம் பிளான் ஏன் அவசியம்?

ஒரு தெளிவான விளக்கம்

ன்றைய பெண்கள், தங்களது குடும்பத்தை முன்னேற்றுவதிலும் ஊக்குவிப்பதிலும் பாரம்பர்ய குணத்துடன் செயல்படுகிறார்கள்; ஆண்களுக்கு நிகராக குடும்பப் பொறுப்பைச் சுமப்பதிலும், பல்வேறு பணிகளைச் செய்வதிலும் முக்கியப் பங்குவகிக்கிறார்கள். ஆனால், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (ஐ.ஆர்.டி.ஐ) சமீபத்திய ஆண்டு அறிக்கையின்படி, நம் நாட்டின் மக்கள்தொகையில் ஏறக்குறைய 48% பேர் பெண்கள். ஆனால், 2017-18-ம் ஆண்டில் விற்கப்பட்ட மொத்த காப்பீடுகளில் பெண்களின் பங்களிப்பு 32% மட்டுமே.

பெண்களுக்கு டேர்ம் பிளான் ஏன் அவசியம்?

ஒரு குடும்பத்தைக் காப்பாற்றும் ஆணின் இறப்பு அந்தக் குடும்பத்தில் எந்த அளவுக்குப் பாதிப்பை உண்டாக்குமோ, அதே அளவுக்குக் குடும்பத்தைக் காப்பாற்றும் ஒரு பெண்ணின் இறப்பும் குடும்பத்துக்குப் பெரும் பாதிப்பை உண்டாக்கும். ஆனால், பெண்கள் ஆண்களைப்போல ஆயுள் காப்பீட்டை எடுப்பதில்லை. சரி, ஆண்களைவிடப் பெண்கள் ஏன் தங்கள் வாழ்க்கையைக் குறைவாக மதிப்பிடுகிறார்கள்?

டேர்ம் பிளான்
டேர்ம் பிளான்

பொதுவாக, பெண்கள் ஆண்களைவிடக் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள். மேலும், குழந்தைப் பராமரிப்பில் பெண்களின் பங்களிப்பு அதிகம் போன்ற கணக்கீடுகளால் பெண்களுக்கு ஆண்களைவிடக் குறைவான ஆயுள் காப்பீடு தேவைப்படுகிறது. ஆனால், பெண்களின் வாழ்க்கையின் மதிப்பும், அர்ப்பணிப்புடன்கூடிய அவர்களின் பங்களிப்பும், அந்தக் குடும்பத்துக்குக் கிடைக்கும் வருமானத்தைவிட மிக மிக அதிகம்.

வீட்டு வேலைக்காரர், உணவியல் நிபுணர், குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் தினப் பராமரிப்பு ஆசிரியர் போன்ற பாரம்பர்ய வேலைகள் முதல் நெட்வொர்க் நிர்வாகி, சமூக ஊடகத் தொடர்புகள் மற்றும் ஆராய்ச்சி விஞ்ஞானி போன்ற வளர்ந்த தொழில்கள் வரை இன்று பெண்கள் அனைத்துப் பணிகளையும் திறம்படச் செய்கிறார்கள்!

ஆயுள் காப்பீட்டின் முதன்மை நோக்கம், குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் எதிர்பாராமல் இறக்கும்போது, நிதிப் பாதுகாப்பை அளிப்பதே!

ஆயுள் காப்பீட்டின் முதன்மை நோக்கம், ஒரு குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர்கள் எதிர்பாராமல் இறக்கும்போது, அந்தக் குடும்பம் இழக்கும் வருமானத்துக்கு மாற்றாக நிதிப் பாதுகாப்பை அளிப்பது. பிரச்னை என்னவென்றால், இல்லத்தரசி இறக்கும்போது அந்தக் குடும்பத்துக்குக் கிடைக்கும் வருமானத்தைவிட அவரின் இழப்பு மிக மிக அதிகம். ஒரு குடும்பத் தலைவி பணத்தை எதிர்பார்க்காமல் அக்கறையுடன் செய்த பொறுப்புமிக்க பணிகளுக்கு உரிய மதிப்பு என்ன... ஒரு தாய் செய்யும் ஒவ்வொரு வேலைக்குமான மதிப்பை நாம் கணக்கிட்டுப் பார்த்தால், அது மலைக்க வைக்கும் தொகையாக இருக்கும்.

பெண்களுக்கு டேர்ம் பிளான் ஏன் அவசியம்?

வீட்டுப் பணிகளை கவனித்துக்கொள்ளும் குடும்பத் தலைவி முதல் குடும்பத்துக்கு வருமானத்தை ஈட்டித் தந்து குடும்பத்தைக் காப்பாற்றும் தலைவியாகவும் தனது பங்களிப்பு தந்து வரும் பெண்களுக்கு, டேர்ம் இன்ஷூரன்ஸ் மிகச் சிறந்த காப்பீடு. அவர்களுக்கும், அவர்களை நம்பியிருக்கும் குடும்பத்தினருக்கும் நிதித் தேவைக்காக யாரையும் சார்ந்திராமல் தனித்து இயங்க டேர்ம் இன்ஷூரன்ஸ் நிச்சயம் தேவை. டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பது அனைத்துக் காப்பீட்டுத் திட்டங்களிலும் எளிதானது, எளிமையானது மற்றும் மிகவும் மலிவானது. இது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பொருளாதாரரீதியாக மிகக் குறைந்த பிரீமியத்தில் போதுமான அளவு குடும்பத்துக்குப் பாதுகாப்பை அளிக்கும். பாலிசிதாரர் எதிர்பாராமல் இறக்கும்போது, மரணத்தை ஈடுசெய்யும் வகையில் காப்பீடு செய்யப்பட்ட அந்தக் குறிப்பிட்ட தொகை அவரின் அன்புக்குரியவர்களுக்கு அல்லது காப்பீட்டின் பயனாளிகளுக்கு வழங்கப்படும். இருப்பினும், பாலிசிதாரர் பாலிசிக் காலம் வரை உயிரோடு இருக்கும்பட்சத்தில், அவரின் வாழ்க்கைத் துணைக்கு எந்தக் காப்பீட்டுத் தொகையும் கிடைக்காது. டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பது ஆபத்திலிருந்து காப்பாற்றும் ஓர் அருமையான காப்பீடு.

டேர்ம் இன்ஷூரன்ஸின் மிக முக்கியமான பலன், அதன் பிரீமியம் மிகக் குறைவு என்பதே. உதாரணமாக, திருமணமான பெண் 25 வயதில் ரூ.1 கோடி மதிப்பிலான டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்தால், அவர் ஒரு மாதத்துக்கு ரூ.500 செலுத்தினால் போதுமானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை ஒரு முறை வாங்கிவிட்டால், அதற்கான பிரீமியம் நிர்ணயம் செய்யப்பட்டுவிடும். வயது அதிகரிக்க அதிகரிக்க பிரீமியம் அதிகரிக்காது. எதிர்பாராதவிதமாக இறப்பு ஏற்பட்டால் காப்பீட்டுத் தொகை வழங்குவதற்கான சிறிய விலை இது. அவருடைய கணவர் அல்லது காப்பீட்டின் பயனாளிகள் தங்களது அவசிய கடனுக்கான பிணையமாக நிர்ணயிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையைப் பயன்படுத்தலாம் அல்லது குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் திருமணத்துக்காக அந்தத் தொகையைச் செலவிடலாம். தன் குழந்தைகளை ஆசீர்வதிப்பதற்காக அந்தப் பெண் இல்லாமலிருந்தாலும், அவர்கள் வாழ்நாள் முழுவதும் நினைவில்வைத்திருக்கும் ஒரு பரிசை அவரால் அவருடைய இறப்புக்குப் பின்னரும் தர முடியும்.

டேர்ம் பிளான்
டேர்ம் பிளான்

பெண்களுக்கான டேர்ம் இன்ஷூரன்ஸ் அளிக்கும் முக்கியமான சில நன்மைகள்... பிரத்யேகமான பிரீமியம் விகிதங்கள்; ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிக்கலான நோய்களுக்கான காப்பீட்டு வரம்பைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள்; பெண்கள் தொடர்பான சுகாதாரப் பிரச்னைகளுக்கான பாதுகாப்பு; பணமதிப்பு அல்லது பணத்தைத் திருப்பிப் பெறும் காப்பீட்டுக் கொள்கைகள்; மிகக் குறைந்த பிரீமியத் தொகை மற்றும் அவரின் அன்புக்குரியவர்களின் எதிர்கால நிதித் தேவைகளுக்கான விரிவான காப்பீடு.

பொருத்தமான டேர்ம் இன்ஷூரன்ஸை வாங்குவதன் மூலம் ஒரு பெண் தன்னைச் சார்ந்திருக்கும் குடும்பத்தினரின் முழுமையான நிதிப் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும். இதனால் அவரின் குடும்பத்தின் நிதித் திட்டமிடலில் முக்கியப் பங்கை வகிக்க முடியும். இது அந்தப் பெண்ணுக்கு ஓர் அர்ப்பணிப்புடனான நோக்கத்தையும், சிறப்பான சுயமதிப்பையும் அளிக்கிறது. மேலும், அந்தப் பெண்ணை தனது திருமண வாழ்க்கையில், ஆணுக்கு நிகரான ஒரு துணையாக உயர்த்துகிறது!

மார்ச் 8... சர்வதேச மகளிர் தினம். அந்த தினத்தில் பெண்கள் அனைவரும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு