Published:Updated:

``பெண்களின் திருமண வயதில் மட்டும் அரசு அக்கறை காட்டினால் போதுமா?" - மாதர் சம்மேளனம் கேள்வி

Marriage - Representational Image
News
Marriage - Representational Image ( Photo: LVR சிவக்குமாா் )

``பெண்கள் மீது அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், ஊட்டச்சத்துக் குறைப்பாடுகளின் காரணமாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் பாதுகாக்க, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அனைத்துப் பெண்களுக்கும் தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்."

பெண்களின் திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில்தான், தஞ்சாவூரில் நடைபெற்ற இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநில கூட்டத்தில், மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

Marriage
Marriage
Pixabay

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பெண்ணின் திருமண வயதை உயர்த்துவது தொடர்பாக, மத்திய அரசின் நிதி அயோக் ஒரு குழுவை அமைத்திருந்தது. ஜெயா ஜெட்லி தலைமையில் இயங்கிய அக்குழுவில், மத்திய சுகாதாரத்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்தை சேர்ந்த உயர் அலுவலர்கள் மற்றும் நிபுணர்கள் இடம்பெற்றிருந்தனர். அக்குழுவினர் மத்திய அரசுக்கு சில முக்கியப் பரிந்துரைகளை வழங்கினார்கள். அதன் பிரதிபலிப்பாக, கடந்த ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தினத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை நாடு முழுவதும் பெரும் கவனம் ஈர்த்தது.

``மத்திய அரசு, நமது தேசத்தின் சகோதரிகள் மற்றும் மகள்களின் உடல்நலனில் அக்கறை கொண்டுள்ளது. ஊட்டச்சத்துக் குறைபாட்டில் இருந்து பெண்களைக் காக்க, அவர்கள் சரியான வயதில் திருமணம் செய்துகொள்வதை உறுதி செய்வது மிகவும் அவசியம். இப்போது நாட்டில் ஆணின் திருமண வயது 21 ஆகவும், பெண்ணின் திருமண வயது 18 ஆகவும் உள்ளது. இதில் பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது" எனத் தெரிவித்திருந்தார் பிரதமர்.

இந்நிலையில்தான் பெண்களின் திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்தும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. நாடாளுமன்றத்தில் இது சட்ட முன்வடிவாகத் தாக்கல் செய்யப்பட்டு விரைவில் சட்ட வடிவமாக நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.

இதற்கு இந்திய மாதர் தேசிய சம்மேளனம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தஞ்சாவூரில் நடைபெற்ற இந்த அமைப்பின் மாநிலக் குழு கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இது குறித்துப் பேசும் இந்த அமைப்பின் நிர்வாகிகள், ``பெண்களின் திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். இதனால் இந்தியாவில் உள்ள பெண்களுக்கு எந்த ஒரு பலனும் கிடைக்கப்போவதில்லை. பெண்கள் மீது மத்திய பா.ஜ.க அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், ஊட்டச்சத்துக் குறைப்பாடுகளின் காரணமாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் பாதுகாக்க, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அனைத்துப் பெண்களுக்கும் தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கும் சமமான ஊதியம் கிடைக்க நலத்திட்டங்களை வகுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்கள்.

மாநில குழுக்கூட்டம்
மாநில குழுக்கூட்டம்

மேலும் பேசும்போது, ``தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியில் உள்ள பா.ஜ.க அரசு பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான மசோதாவை மக்களையில் தாக்கல் செய்யாமல் ஏமாற்றி வருகிறது’’ என்றவர்கள், தமிழக அரசுக்கும் முக்கிய கோரிக்கை விடுத்து, தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

``பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான செயல்திட்டங்களுக்கு, மத்திய அரசு அளித்து வரும் நிர்பயா நிதியைத் தமிழக அரசு முழுமையாகவும் முறையாகவும் பயன்படுத்தி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’’ எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.