Published:Updated:

C.B.Muthamma பெண்களுக்கு எதிரான அரசு விதிகளை மாற்றியெழுதியவர் | இன்று, ஒன்று, நன்று - 24

சி.பி.முத்தம்மா

சென்னை பிரசிடென்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிச்சாங்க. கல்லூரியில் மூன்று முறை தங்கப்பதக்கம் வாங்கும் அளவுக்கு சிறப்பாக படிச்சாங்க. கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு முத்தம்மாவினுடைய கவனம் சிவில் சர்வீஸ் பக்கம் திரும்புச்சு.

C.B.Muthamma பெண்களுக்கு எதிரான அரசு விதிகளை மாற்றியெழுதியவர் | இன்று, ஒன்று, நன்று - 24

சென்னை பிரசிடென்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிச்சாங்க. கல்லூரியில் மூன்று முறை தங்கப்பதக்கம் வாங்கும் அளவுக்கு சிறப்பாக படிச்சாங்க. கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு முத்தம்மாவினுடைய கவனம் சிவில் சர்வீஸ் பக்கம் திரும்புச்சு.

Published:Updated:
சி.பி.முத்தம்மா

சிவில் சர்வீஸ் இன்றைக்கும் பலருடைய கனவு, தேடல் விருப்பம். இன்னைக்கு நாம பாக்குற நம்ம தேசதோட வளர்ச்சி, கட்டமைப்பு எல்லாத்தையுலயுமே ஒரு சிவில் சர்வீஸ் அதிகாரியோட திட்டமிடல் இருக்கும். தேர்தல் அரசியலைக் கடந்து மக்களுக்கான பணிகள் செய்யணும்னு விரும்புற, வாய்ப்பிருக்கிற மிக முக்கியமான அங்கம்தான் சிவில் சர்வீஸ் பணிகள். பாமர மக்களுக்கு தேவவையான விஷயங்களை புரிஞ்சுகிட்டு இந்த தேசத்தை ஏற்றத் தாழ்வின்றி வழிநடத்த வேண்டிய மிகமுக்கிய பொறுப்பு இந்த அதிகாரிகளுடையது.

சிவில் சர்வீஸ்
சிவில் சர்வீஸ்

சிவில் சர்வீஸ் என்று அழைக்கப்படும் இந்தியக் குடியுரிமைப்பணிகளில் சேர பல கட்ட தேர்வுகள்-ல தேர்ச்சி பெறணும். இன்னைக்கு ஆண்-பெண் வித்தியாசமின்றி பலர் சிவில் சர்வீஸ் தேர்வுகள்-ல தேர்ச்சி பெற்று அதிகார பொறுப்பு வகிக்கிறாங்க. ஆனா பல காலங்களுக்கு முன்னாடி சூழல் அப்படி இல்ல. பெண்களுக்கு சிவில் சர்வீஸ் என்பது எட்டாக்கனியாக தான் இருந்துச்சு. அந்த நிலையை மாற்றி வரலாற்றுல தன்னோட பெயரை அழுத்தமா பதிவு செஞ்சு, பல பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் உந்துசக்தியா இருந்தவங்கதான் சி. பி. முத்தம்மா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1924-ஆம் ஆண்டு ஜனவரி 24-ல கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்துல விராஜ்பேட் என்னும் ஊரில் பிறந்தவங்கதான் கொனேரி பெல்லியப்பா முத்தம்மா. சிறுவயது முதலே முத்தம்மாவுக்கு படிப்பின் மீதன ஆர்வம் அதிகம். முத்தம்மாவுக்கு 9 வயசு இருக்கும்போதே அவரோட அப்பா இறந்துட்டாரு. கணவரின் மறைவுக்குப் பிறகு முத்தம்மாவோட அம்மா பிள்ளைகளோட படிப்பு தான் குடும்பத்தை உயர்த்தும் என ரொம்ப உறுதியா நம்பினாங்க.

கொனேரி பெல்லியப்பா முத்தம்மா
கொனேரி பெல்லியப்பா முத்தம்மா

கல்விதான் இருளகற்றும் பேரொளினு நம்பின முத்தம்மாவும் நல்லா படிச்சாங்க. பள்ளிப்படிப்பை முடிச்சு கல்லூரியில் சேர சென்னைக்கு வந்தார் முத்தம்மா. சென்னை பிரசிடென்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிச்சாங்க. கல்லூரியில் மூன்று முறை தங்கப்பதக்கம் வாங்கும் அளவுக்கு சிறப்பாக படிச்சாங்க. கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு முத்தம்மாவினுடைய கவனம் சிவில் சர்வீஸ் பக்கம் திரும்புச்சு. எளிய, வாழ்க்கைப் போராட்ட சூழல்ல வளர்ந்த முத்தம்மா சிவில் சர்வீஸ் தேர்வு எழுதணும்னு யோசிச்சது வரலாற்றுல மிகமுக்கியமான முடிவு. அறிவில் சிறந்த முத்தம்மா வெற்றிகரமாக தேர்ச்சியும் பெற்றாங்க. தேர்ச்சி பெற்றாகிவிட்டது, அடுத்து ட்ரெயினிங், அப்புறம் பணி என எளிதாக இல்லை முத்தம்மாவின் பயணம். இவரை இந்த பணியில் சேர விடாமல் செய்ய பல முயற்சிகள் நடந்தன. முத்தம்மா அதை எல்லாம் முறியடித்து 1949-இல் பணியில் சேர்ந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தனது 25-வது வயதில் முத்தம்மா வெளியுறவுத் துறையில் சேரும்போது, அக்குழுவின் பணி நியமன தலைவர், 'வெளியுறவுத் துறையில்தான் நீ சேர வேண்டுமா?' எனக் கேட்டபோது, 'ஆமாம் எனக்கு இந்தப் பணி தான் பிடித்திருக்கிறது' என்று கூறிய முத்தம்மா உடனே அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். அந்த கையெழுத்து அவர் வாழ்வை மட்டுமல்ல பல பெண்களின் வாழ்வையும் முன்னேற்றப் போகிறது என பணி நியமனத் தலைவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை!

வெளியுறவுத் துறை
வெளியுறவுத் துறை

அந்த கால கட்டத்தில் வெளியுறவுத்துறையில் பெண்களுக்கு எதிராக பல விதிகள் இருந்தன. பணி முதிர்வு, பதவி உயர்வு போன்றவற்றிலும் உரிமை வேண்டும் என்று எந்தப் பெண்ணும் கோர முடியாது. வெளியுறவுத்துறையில் பணியாற்றும் பெண்கள் திருமணம் செய்ய வேண்டும் என்றால் அரசாங்கத்திடம் அனுமதி வாங்க வேண்டும். திருமணத்திற்குப் பிறகு பணியில் முன்புபோல செயல்பட முடியலைனா ராஜினாமா செய்ய வேண்டும். பெண்களின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் எதிராக இருக்கும் இந்த விதிகளை எதிர்த்து முத்தம்மா வழக்கு தொடுத்தார்.

உச்சநீதிமன்றத்தில் இவர் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணய்யர் இந்த விதிகள் ஆண்களுக்கு சலுகைகள் வழங்குவது போல் அமைந்திருப்பதை உணர்ந்தார். "தமது குடும்பப் பொறுப்புகள் காரணமாக ஒரு பெண் தனது பணியைச் சரிவரச் செய்ய முடியாவிட்டால் அவரது பணி பறிபோகும் என்றால் அந்த விதி, மணமான ஆணுக்குமல்லவா பொருந்தும்?" என்ற கேள்வியையும் எழுப்பினார் நீதிபதி. இதற்கு பிறகு பாலியல் பாகுபாடு நிறைந்த விதிகள் உடனே மாற்றப்பட்டன. இந்த மாற்றம் சமூகத்தின் பொதுபுத்தியில் கெட்டிதட்டிப் போயிருந்த அனைத்தையும் சம்மட்டி அடித்து உடைந்தெறிந்தார் முத்தம்மா.

முத்தம்மா
முத்தம்மா

இந்த வழக்கும் இவர் பெற்ற வெற்றியும் அரசின் கவனத்தை ஈர்த்துச்சு. விரைவில் பதவி உயர்வு முத்தம்மாவின் வாசல் தேடி வந்தது. 1970-இல் ஹங்கேரிக்கு இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டு இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரி என்ற பெருமையை பெற்றார். நெதர்லாந்து, கானா உள்ளிட்ட நாடுகளுக்கும் தூதராக பணியாற்றினார். 32 ஆண்டுகள் சிறப்பாக அரசு பணியில் ஈடுபட்ட முத்தம்மா 1982-இல் ஓய்வு பெற்றார்.

கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாத முத்தம்மா ஓய்வுக்கு பிறகும் சும்மா இருக்கல. டெல்லியில் இவருக்கு சொந்தமான நிலம் 15 ஏக்கர் இருந்தது. அதை அன்னை தெரசாவின் ஆதரவற்றோர் இல்லம் கட்ட நன்கொடையாக வழங்கி முகமறியாத மனிதர்களுக்கு தானும் ஒரு அம்மாவாக ஆனாங்க. அரசுப் பணி, சமூகப் பணி ரெண்டும் வேற வேற இல்ல இந்த சமூகத்துக்கான பணழ அரசுப் பணியே என்பதுக்கு உதாரணமா இருந்தவங்க முத்தம்மா.

முத்தம்மா
முத்தம்மா

தனது 85-வது வயதில் அக்டோபர் 10, 2009-ம் ஆண்டு பெங்களூருவில் காலமானார். முத்தம்மாங்கிற பெயரை இன்னிக்கும் நாம சொல்றோம் இவரை பத்தி பேசுறோம்னா அதற்கு இவரோட துணிவு, விடாமுயற்சி, போராட்ட குணம், தன்னம்பிக்கை இதெல்லாம் தான் காரணம். எல்லா சூழலும் தனக்கு எதிரா இருந்தாலும் தன்னம்பிக்கையும், அறிவுத் தேடலும் நமக்கு கேடயமா இருக்கும். நமக்கு மட்டுமில்ல நம்ம சார்ந்த இந்த சமூகத்துக்கேங்கிறது ஆழமா பதிய வச்ச முத்தம்மா வரலாற்றுல எப்பவும் அழியாத பெயர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism