Published:Updated:

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: அம்மாநிலப் பெண்களுக்கு சொத்துரிமை அளிக்கிறதா? ஓர் அலசல்

நரேந்திரமோடி

பரபரப்பான காஷ்மீர் விவகாரம் குறித்து பல செய்திகள் சமூக ஊடகங்களில் பரவிக்கொண்டிருந்தன. அவற்றில் ஒன்று, மத்திய அரசின் இந்தச் செயல்பாடு காஷ்மீர் பெண்களுக்கு ஆதரவானது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: அம்மாநிலப் பெண்களுக்கு சொத்துரிமை அளிக்கிறதா? ஓர் அலசல்

பரபரப்பான காஷ்மீர் விவகாரம் குறித்து பல செய்திகள் சமூக ஊடகங்களில் பரவிக்கொண்டிருந்தன. அவற்றில் ஒன்று, மத்திய அரசின் இந்தச் செயல்பாடு காஷ்மீர் பெண்களுக்கு ஆதரவானது.

Published:Updated:
நரேந்திரமோடி

இரண்டு நாள்களாக இந்தியா முழுக்க பேசுபொருள் காஷ்மீர்தான். காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது மத்திய அரசு. அதற்கு சில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், மக்களவை மற்றும் மாநிலங்கவையில் அரசின் முடிவு வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது. இனி, காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்படும் சிறப்புச் சலுகைகள் இல்லை. பரபரப்பான இந்த விவகாரம் குறித்து பல செய்திகள் சமூக ஊடகங்களில் பரவிக்கொண்டிருந்தன. அவற்றில் ஒன்று, மத்திய அரசின் இந்தச் செயல்பாடு காஷ்மீர் பெண்களுக்கு ஆதரவானது. ஏனெனில், இதற்கு அம்மாநிலப் பெண்கள் வேறு மாநில ஆண்களைத் திருமணம் செய்துகொண்டால், காஷ்மீரில் நிலம் வாங்க முடியாத நிலை இருந்தது. இப்போது அந்த நிலை மாற்றப்பட்டு, இந்தியாவில் வசிக்கும் ஆண்களை, காஷ்மீரியப் பெண்கள் திருமணம் செய்தாலும் காஷ்மீரில் நிலம் வாங்க முடியும் என்பதாக மாறிவிட்டது. இந்தத் தகவல் குறித்து மேற்கொண்டு தெரிந்துகொள்ள சிலரைத் தொடர்புகொண்டோம்.

கே.டி.ராகவன், பா.ஜ.க
கே.டி.ராகவன், பா.ஜ.க

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளரும் வழக்கறிஞருமான ராகவன், "இதில் என் கருத்தைச் சொல்வதற்கு முன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் சொல்லியதை நினைவுபடுத்துகிறேன். ஏனென்றால் அவர் காஷ்மீரைச் சேர்ந்தவர். அவர், '370 சட்டப்பிரிவினால், வேறு மாநிலத்தினரை திருமணம் செய்துகொண்ட என்னால், என் ஊரில் நிலம் வாங்க முடியவில்லை' என்று சொல்லியிருக்கிறார். அவர் பேசியது இணையதளத்தில் விரிவாகக் கிடைக்கிறது. இதுதான் யதார்த்தம். பா.ஜ.கவின் இந்த நடவடிக்கையால் பெண்களுக்கு அந்த உரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவுடன் 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இணைந்ததுபோலத்தான் காஷ்மீர் சமஸ்தான ராஜா ஹரிசிங்கும் இணைந்தார். உடன்படிக்கைகளும் ஒரே மாதிரிதான் இருந்தன. அதனால், இவருக்குத் தனியாக வாக்கு கொடுத்து, இப்போது மீறுவதுபோல சித்திரிப்பது சரியல்ல. எல்லா மாநிலங்களைப் போலத்தான் காஷ்மீரும். இப்போது நடைபெற்றிருக்கும் மாற்றம் காஷ்மீரியப் பெண்களுக்கு நிலம் வாங்கும் உரிமையைப் பெற்றுத்தந்திருக்கிறது" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
வெளிமாநிலத்தவரைத் திருமணம் செய்துகொண்டதால் காஷ்மீரில் நிலம் வாங்க முடியவில்லை.
சுனந்தா புஷ்கர்
சசி தரூருடன் சுனந்தா புஷ்கர்
சசி தரூருடன் சுனந்தா புஷ்கர்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், சில ஆண்டுகளுக்கு முன் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "2006, 2007 ஆம் ஆண்டுகளில் நான் ஜம்முவில் நிலம் வாங்க ஆசைப்பட்டேன். ஆனால், முடியவில்லை. காரணம் நான் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டதுதான். ஆனால் அவர் அப்போது உயிரோடு இல்லை. நான் விதவை. ஆனபோதும் வெளிமாநிலத்தவரைத் திருமணம் செய்துகொண்டதால் நிலம் வாங்க அனுமதியில்லை. நான் பெண் என்பதாலும் காஷ்மீரைச் சேர்ந்தவள் எனும் முறையிலும் 370 சட்டப்பிரிவு ஏதேனும் ஒரு வகையில் நீக்கப்பட வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தப் பிரச்னை காஷ்மீர் மக்களின் இன உரிமைக்கானது என்பதைப் புரிந்துகொள்வதே சரியானது.
வழக்கறிஞர் அஜிதா

இதுகுறித்து வழக்கறிஞர் அஜிதாவிடம் பேசியபோது, "காஷ்மீரைப் பொறுத்தவரை அம்மாநிலத்தின் இயற்கை வளங்கள் அம்மக்களுக்கு உரியவை என்பதாக நிலைமை இருந்தது. வேறு மாநிலத்தவர் அங்குள்ள பெண்ணைத் திருமணம் செய்கையில் அந்தக் கணவருக்கு அந்தச் சொத்து போய்விடக்கூடாது என்பதால் அப்படி ஒரு சூழல் இருந்தது. வளங்களைக் காக்க வேண்டும் என்று நோக்கம்தான் பிரதானமாக இருந்தது. இப்போது, மத்திய அரசின் சட்டத் திருத்தத்தால், பெண்களுக்குச் சொத்துரிமை வந்திருப்பது உண்மைதான்.

அஜிதா, வழக்கறிஞர்
அஜிதா, வழக்கறிஞர்

ஆனால், அவர்களுக்கு மட்டுமே வரவில்லை. பல்வேறு பெரிய நிறுவனங்களுக்கும் அல்லவா வந்திருக்கிறது. அதில் பெண்களுக்கும் உரிமை இயல்பாக வந்திருக்கிறது. ஒரு பெண்ணின் சொத்தான ஓரிரு ஏக்கர் கிடைப்பதைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால் பெருநிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கில் நிலம் போகும் சூழலும் வந்துவிட்டதே! உண்மையில், இந்தப் பிரச்னை காஷ்மீர் மக்களின் இன உரிமைக்கானது என்பதைப் புரிந்துகொள்வதே சரியானது. ராஜா காலத்திலிருந்து இப்போதுவரை காஷ்மீரிய மக்கள் உரிமைகளுக்காகப் போராடியே வருகின்றனர்." என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism