Published:Updated:

பெண்களின் சுயமரியாதையை மீட்ட மூவலூர் ஆ.ராமாமிர்தம் அம்மையார்! - The Legend

மூவலூர் ஆ.ராமாமிர்தம் அம்மையார்
மூவலூர் ஆ.ராமாமிர்தம் அம்மையார்

தேவதாசி முறையை எதிர்த்ததால் கொலைமுயற்சிக்கு ஆளானவர். மேடையிலேயே அவமானப்படுத்தப்பட்டவர், மொழிப்போருக்காகத் தன்னையே அர்ப்பணித்தவர்!

தேவதாசி முறை தமிழக வரலாற்றிலும் பண்பாட்டிலும் பதிந்த காலத்தின் கரும்புள்ளி. கடவுளின் பெயரால் பெண்களின் சுயமரியாதையைச் சிதைக்கும் கொடிய முறையான தேவதாசி முறையை ஒழிப்பதற்காகப் பாடுபட்ட மூவலூர் ஆ.ராமாமிர்தம் அம்மையார் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்?
மூவலூர் ஆ.ராமாமிர்தம் அம்மையார்
மூவலூர் ஆ.ராமாமிர்தம் அம்மையார்

காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் ராமாமிர்தம். கராச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் கொடியை ஏற்றக்கூடாது என்று பிரிட்டிஷ் அரசு தடை விதித்தபோது அந்தக் கொடியையே சேலையாக அணிந்து மாநாட்டில் கலந்துகொண்டவர் ராமாமிர்தம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

தேவதாசி முறையை எதிர்த்ததால் கொலைமுயற்சிக்கு ஆளானவர். மேடையிலேயே அவமானப்படுத்தப்பட்டவர், மொழிப்போருக்காகத் தன்னையே அர்ப்பணித்த மூவலூர் ஆ.ராமாமிர்தம் பற்றி தெரிந்துகொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்.
அடுத்த கட்டுரைக்கு