Published:Updated:

நயன் - விக்கி: `வாடகைத்தாய் விதி மீறப்படவில்லை!’ - சுகாதாரத்துறை அறிக்கை சொல்வதென்ன?

இரட்டைக் குழந்தை ( twitter )

இத்தம்பதிக்கு (Intending Couple) பதிவு திருமணம் 11.03.2016-ல் நடைபெற்றதாகப் பதிவு சான்றிதழ் மருத்துவமனை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. அத்திருமண பதிவு சான்றிதழின் உண்மைத்தன்மை பதிவு துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நயன் - விக்கி: `வாடகைத்தாய் விதி மீறப்படவில்லை!’ - சுகாதாரத்துறை அறிக்கை சொல்வதென்ன?

இத்தம்பதிக்கு (Intending Couple) பதிவு திருமணம் 11.03.2016-ல் நடைபெற்றதாகப் பதிவு சான்றிதழ் மருத்துவமனை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. அத்திருமண பதிவு சான்றிதழின் உண்மைத்தன்மை பதிவு துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Published:Updated:
இரட்டைக் குழந்தை ( twitter )

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத்தாய் மூலமாக இரட்டைக் குழந்தையைப் பெற்றது தொடர்பான சுகாதாரத் துறையின் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் `வாடகைத்தாய் விதிகள் மீறப்படவில்லை’ எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நயன்- விக்கி
நயன்- விக்கி

சுகாதாரத்துறையின் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ``சென்னையில் பிரபல திரைப்பட நடிகை ஒருவருக்கு வாடகைத்தாய் மூலமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. அத்தம்பதியருக்கு திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் குழந்தை பிறந்ததாகத் தெரிவித்துள்ளனர். இச்செய்தியைத் தொடர்ந்து இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அவர்களால் 13.10.2022 உயர்மட்ட விசாரணை குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் மூலமாகவும் அத்தம்பதியர் குழந்தை பெற்றுக்கொண்டதாகத் தெரியவந்தது. அம்மருத்துவமனை மற்றும் சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் வாடகைத்தாய்க்கு பேறுகால சிகிச்சை அளித்த மருத்துவர்களிடமும் நேரடி விசாரணை, இக்குழுவால் மேற்கொள்ளப்பட்டது. மேலும், அந்த சிகிச்சை தொடர்பான விசாரணையில், கீழ்க்காணும் ஆய்வு குறிப்புகள் அறிவிக்கப்படுகின்றன. 

*இவ்விசாரணையில் இத்தம்பதி (Intending Couple) மற்றும் வாடகைத்தாய் ஆகியோருடைய வயது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவன (ICMR) செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் முறைக்கான வழிகாட்டு நெறிமுறை களின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிய வந்தது. 

* ICMR வழிகாட்டு நெறிமுறைகளின் பிரிவு 3.10.5-ன்படி வாடகைத்தாய்க்கு உரிய தகுதியான வயதிலும் அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உயிருடன் உள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது. 

* இத்தம்பதியருக்கு (Intending Couple) பதிவு திருமணம் 11.03.2016-ல் நடைபெற்றதாகப் பதிவு சான்றிதழ் மருத்துவமனை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. அத்திருமண பதிவுச் சான்றிதழின் உண்மைத்தன்மை பதிவுத் துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நயன் - விக்கி: `வாடகைத்தாய் விதி மீறப்படவில்லை!’ - சுகாதாரத்துறை அறிக்கை சொல்வதென்ன?

* ICMR வழிகாட்டு நெறிமுறைகளின் பிரிவு 3.16.2-ன்படி மேற்காணும் தம்பதி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்த மருத்துவச்சான்று விசாரணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

* தனியார் மருத்துவமனையில் தம்பதிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை விசாரித்தபோது 2020-ல் அவர்களின் குடும்ப மருத்துவரால் வழங்கப்பட்ட பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் சிகிச்சை அளித்ததாகக் குறிப்பிட்டார். அக்குடும்ப மருத்துவரின் முகவரியில் விசாரணை செய்தபோது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அத்தொலைபேசி எண்கள் உபயோகத்தில் இல்லை ; மேலும் விசாரணையில் அம்மருத்துவர் வெளிநாடு சென்றுவிட்டதாகத் தெரிய வருவதால் அக்குடும்ப மருத்துவரிடம் குழு விசாரணை மேற்கொள்ளவில்லை.

* சினைமுட்டை சிகிச்சை சம்பந்தமான நோயாளியின் சிகிச்சை பதிவேடுகள் பராமரிக்கப்படவில்லை. மருத்துவமனையால் முறையாகப் பராமரிக்கப்படவில்லை.

* 2020 ஆகஸ்ட் மாதத்தில் சினைமுட்டை (Oocytes) மற்றும் விந்தனு பெறப்பட்டு கருமுட்டைகள் (Embroyo) உருவாக்கப்பட்டு உறைநிலையில் மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டு 2021 நவம்பர் மாதத்தில் வாடகைத்தாய் ஒப்பந்தம் போடப்பட்டது. மார்ச் 2022-ல் கருமுட்டைகள் வாடகைத்தாயின் கருப்பையில் செலுத்தப்பட்டு இக்குழந்தைகள் அக்டோபர் மாதம் பிரசவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

* செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் வாடகைத்தாய் உறவினராக இருத்தல் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. ஆனால், இச்சட்டத்துக்கு முந்தைய ICMR வழிகாட்டுதலின்படி உறவினர் அல்லாதோர் வாடகைத்தாயாக செயல்படவும் அவசிய செலவிற்கு மட்டும் பணம் வழங்கும் வழிமுறையும் இருந்தது. விசாரணையில் வாடகைத்தாய் பேறுகாலத்தின்போது சென்னையில் தனியார் மருத்துவமனையில் பேறுகால பராமரிப்பு சிகிச்சை பெற்று வந்துள்ளார். கருக்கள் வளர்ந்த நிலையில் இரட்டை குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளது. அக்குழந்தைகள் 09.10.2022 அன்று தம்பதியர்களிடம் (Intending Couple) வழங்கப்பட்டுள்ளது.’’

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.