போரினால் உக்ரைனிலிருந்து வெளியேறும் மக்களுக்கு உதவ இங்கிலாந்து அரசால் கடந்த மார்ச் 18-ம் தேதி தொடங்கப்பட்டதுதான், 'உக்ரைன் மக்களுக்கான வீடு திட்டம் (Homes for Ukraine)'. இந்தத் திட்டத்தின் மூலம் உக்ரைனில் இருந்து வெளியேற விரும்பும் அகதிகள் இங்கிலாந்தில் ஒருவரின் வீட்டில் ஆறு மாத காலம் வரை தங்க முடியும்.
இங்கிலாந்தில் உள்ள எவர் வேண்டுமானாலும், தங்களால் ஆறு மாத காலத்திற்கு உக்ரைன் மக்களை தங்கள் வீட்டில் தங்கவைத்துக்கொள்ள முடியும் என்றால், அவர்களுக்குத் தேவையான உணவு, பராமரிப்பு போன்றவற்றை கொடுக்க இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். தொண்டு நிறுவனங்களும், சமூகக் குழுக்களும் இதில் விண்ணப்பிக்க முடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உக்ரைன் அகதிகளுக்கு வீடு வழங்க முன் வருபவர்கள் அரசாங்கத்தால் முதலில் பரிசோதிக்கப்பட்டு, அவர்கள் கொடுத்த தகவல்கள் உண்மையா என்பது உள்ளூர் அதிகாரிகளால் சரிபார்க்கப்படும். அரசினால் தேர்வு செய்யப்படுபவர்கள் உக்ரைனியர்களின் பெயர் அல்லது குடும்ப விவரங்களை தெரிந்துகொண்டு, பின்னர் அவர்களை தொடர்பு கொண்டு, விசா விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும். சர்வதேச உக்ரேனிய பாஸ்போர்ட் கொண்ட அகதிகள் ஆன்லைனில் விண்ணப்பித்து, இங்கிலாந்துக்குச் செல்லலாம்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நாளே இங்கிலாந்தில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்தனர். ஆனால் இத்திட்டத்தை சமூக ஊடகங்கள் மூலம் பலர் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். போரிலிருந்து தப்பி வரும் பெண்கள், மற்றும் குழந்தைகளோடு வரும் பெண்களை மட்டும் கண்டறிந்து, அவர்களை தங்கள் வீட்டில் தங்க வைக்க தனியாக வசிக்கும் ஆண்கள் விண்ணப்பிக்கின்றனர்.
'எனவே தனியாக வசித்து வரும் ஆணோடு பெண் அகதியை தங்கவைப்பதை விடுத்து, பெண்களை பெண்களோடும், குடும்பத்தோடும் தங்கவைக்க வேண்டும். தகுந்த மேற்பார்வையின்றி செய்யப்படும் இந்த ஹோம் ஏற்பாடுகள், உக்ரைன் பெண்களை சிக்கல்களை, ஆபத்துகளை, வன்முறைகளை எதிர்கொள்ள வைக்கலாம்' என்று, ஐக்கிய நாடுகள் அகதிகள் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், 'ஏற்கெனவே பாதிக்கப்பட்ட மக்களைச் சுரண்டுவது உண்மையிலேயே வெறுக்கத்தக்கது. அதனால்தான், 'உக்ரைன் மக்களுக்கான வீடுகள்' திட்டத்தை குறிப்பிட்ட பாதுகாப்புகள் இருக்கும் வகையில் நாங்கள் வடிவமைத்துள்ளோம்' என அரசாங்கத் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
'உக்ரைன் மக்களுக்கான வீடுகள்' திட்டத்தின் கீழ் 12,500 விசாக்கள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், அதன் கீழ் 1,200 அகதிகள் மட்டுமே இங்கிலாந்திற்கு வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.