பெண்கள் கர்ப்பமாவதைத் தவிர்க்க வேண்டும், அதே சமயம் கருத்தடை முறைகளைப் பின்பற்றுவதையும் விரும்புவதில்லை என பெரும்பாலான இந்திய ஆண்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
காலம் காலமாக குடும்ப கட்டுப்பாடு மற்றும் கருத்தடை முறை போன்றவை குறித்த பொறுப்பு பெண்களின் மீதே சுமத்தப்பட்டு வரும் நிலையில், 2019-2021 ம் ஆண்டு தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் (NFHS-5), `கருத்தடை என்பது பெண்களுக்கான விஷயம், அது குறித்து ஆண்கள் கவலைப்பட வேண்டியதில்லை' என 35.1% இந்திய ஆண்கள் தெரிவித்துள்ளனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பெண்கள் கர்ப்பமாவதைத் தவிர்க்க வேண்டும் என ஆண்கள் தெரிவித்தாலும், அவர்களில் 19.6% பேர் கருத்தடை முறைகளைப் பயன்படுத்தும் பெண்கள் ஒழுக்கமற்ற பெண்கள் (promiscuous) எனவும் தெரிவித்துள்ளனர்.
தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் இந்தக் கணக்கெடுப்பானது இந்தியாவின் 707 மாவட்டங்களில், 28 மாநிலங்களில், 8 யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 6,10,000 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்தக் குடும்பங்களில் உள்ள 15 முதல் 49 வயதுடைய பெண்கள் மற்றும் 15 முதல் 54 வயதுடைய ஆண்களிடம் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.