Published:Updated:

ஆணவக் கொலைகளை பெரிய கட்சிகள் கண்டுகொள்ளாதது ஏன்? - அ.அருள்மொழி பதில்

சாதியின் பெயரால் தமிழகத்தில் ஆணவக்கொலைகள் நடக்கின்றன. ஆனால், பெரிய கட்சிகளெல்லாம் இதைக் கண்டும் காணாமல் உள்ளன. இதன் பின்னால் உள்ள அரசியல் என்ன?

அ.அருள்மொழி
அ.அருள்மொழி

குழந்தைப் பருவத்தில் பெரியாரின் மடியில் தவழ்ந்தவர் என்கிற பெருமை மட்டுமல்ல, பெரியாரின் பகுத்தறிவு மற்றும் சுயமரியாதைக் கொள்கைகளை உறுதியாகப் பற்றி வளர்ந்தவர் அ.அருள்மொழி. உயர் நீதிமன்ற வழக்கறிஞரான இவர், ஒரு சிறந்த பேச்சாளர். திராவிடர் கழகத்தின் பிரசாரச் செயலாளராகவும் உள்ளார். அவருடனான சந்திப்பில்...

நீங்கள் கல்லூரியில் படித்த காலத்தில் இருந்த மாணவர் அரசியலுக்கும், இப்போது இருக்கும் மாணவர் அரசியலுக்கும் என்ன வேறுபாடு?

எல்லாக் காலத்திலும் அரசியல் விழிப்புடன்தான் மாணவர்கள் இருக்கிறார்கள். ஆனால், இன்றைக்கு மாணவர்கள் மீதான அரசின் அடக்குமுறை அதிகமாக உள்ளது.

சேலத்தில் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் நான் படித்தேன். அங்கே போதுமான பேராசிரியர்கள் இல்லை. கல்லூரிக்குச் சுற்றுச்சுவர் இல்லை. இப்படிப் பல பிரச்னைகள் இருந்தன. அதற்காகத் தொடர்ந்து போராடி வந்தோம். அந்த நேரத்தில், ஏற்காட்டில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்த அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரின் காரை மறித்தோம். எங்கள் கோரிக்கைகளை உடனே அவர் நிறைவேற்றினார். அடிப்படைப் பிரச்னைகளுக்காக மட்டுமல்லாமல், இந்தித் திணிப்பு, ஈழத் தமிழர் எனப் பல பிரச்னைகளுக்காக தமிழ்நாட்டு மாணவர்கள் தொடர்ந்து போராடிவந்துள்ளார்கள். எல்லாக் காலத்திலும் அரசியல் விழிப்புடன்தான் மாணவர்கள் இருக்கிறார்கள். ஆனால், இன்றைக்கு மாணவர்கள் மீதான அரசின் அடக்குமுறை அதிகமாக உள்ளது.

சாதியின் பெயரால் தமிழகத்தில் ஆணவக்கொலைகள் நடக்கின்றன. ஆனால், பெரிய கட்சிகளெல்லாம் இதைக் கண்டும் காணாமல் உள்ளன. இதன் பின்னால் உள்ள அரசியல் என்ன?

இன்னமும் அரசியல் கட்சிகளில் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கான பிரதிநிதித்துவம் என்பது ஓரளவுக்குத்தான் இருக்கிறது. அதிகார முடிவுகளை எடுக்கிற இடத்துக்கு அவர்கள் இன்னும் வரவில்லை. உயர் சாதிகள் அல்லது இடைப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள்தாம் முடிவெடுக்கிற, வழிநடத்துகிற இடத்தில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சாதி நலன் என்கிற ரீதியில் பார்க்கிறார்கள். இது மிகவும் வருத்தத்துக்குரிய போக்கு. இது உறுதியாக மாற்றப்பட வேண்டும்.

அ.அருள்மொழி
அ.அருள்மொழி

> சாதிய அரசியலில் மிகவும் பாதிக்கப்படுவது ஆண்களா... பெண்களா? இப்போதைய காலகட்டத்தில் அரசியலுக்கு வர பெண்களுக்கு தடை ஏதும் உள்ளதா? பெரியாரிடம் நீங்கள் கற்றுக்கொண்ட அரசியல் என்ன? தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் அளித்துள்ளனவா? - இந்தக் கேள்விகளுக்கு அ.அருள்மொழி அளித்துள்ள பதில்களை அவள் விகடன் இதழில் வாசிக்கலாம்.

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/