Published:Updated:

கர்ப்பிணியாக நடிப்பு... `பொம்மை குழந்தை’ பெற்ற பெண்... குழந்தையின்மை விரக்தியால் செய்த விபரீதம்!

plastic doll ( pixabay (representational image) )

பின்னர் பிளாஸ்டிக் பொம்மைக்குச் சிவப்பு பெயின்ட் அடித்து, முழுதும் உருவாகாத நிலையில் முன்கூட்டியே குழந்தை பிறந்துவிட்டது என்று கூறி, அதைச் சுற்றி உள்ளூரில் உள்ள சுகாதார மையத்துக்குப் பரிசோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

கர்ப்பிணியாக நடிப்பு... `பொம்மை குழந்தை’ பெற்ற பெண்... குழந்தையின்மை விரக்தியால் செய்த விபரீதம்!

பின்னர் பிளாஸ்டிக் பொம்மைக்குச் சிவப்பு பெயின்ட் அடித்து, முழுதும் உருவாகாத நிலையில் முன்கூட்டியே குழந்தை பிறந்துவிட்டது என்று கூறி, அதைச் சுற்றி உள்ளூரில் உள்ள சுகாதார மையத்துக்குப் பரிசோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

Published:Updated:
plastic doll ( pixabay (representational image) )

`திருமணம் ஆனதும் குழந்தை பிறந்து விட வேண்டும்; அனைத்தும் காலாகாலத்தில் நடந்து விட வேண்டும்’ என சமூகக் கட்டமைப்பில் சுழன்றுகொண்டிருக்கிறோம். இவை சரியாக நடக்கவில்லை என்றால், `வீட்ல விஷேசம் இல்லையா' என மெதுவாக ஆரம்பித்து, காலம் செல்லச் செல்ல அப்பெண்ணை உடலளவிலும் மனதளவிலும் காயப்படுத்துவதோடு, ஒதுக்கி வைப்பதும் உண்டு.

marriage(Representational image)
marriage(Representational image)
Pixabay

இப்படி தன்னுடைய மனக்குமுறல்களைப் பலர் உள்ளேயே புதைத்துக்கொண்டு வாழ்ந்துவிடுவர். ஆனால், இந்நிலையில் இருந்து தப்பிக்க, பெண் ஒருவர் செய்த செயல் பரபரப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம், எட்டவா உடி மோர் பகுதியில், 40 வயதான பெண் ஒருவருக்கு சுமார் 18 வருடங்களாகக் குழந்தை இல்லை. சமூகம் மற்றும் வீட்டின் பழிப்பேச்சுக்கு ஆளானவர், இதிலிருந்து தப்பிக்க என்ன வழி என்று சிந்தித்துள்ளார்.

தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து, தொடர்ந்து ஆறு மாதங்களாக ஆரம்ப சுகாதார மையத்துக்குச் சென்று சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார். 6 மாதத்துக்குப் பிறகு தன்னுடைய குடும்பத்தினரைக் குழப்பமடையச் செய்ய, வயிற்று வலியால் அவதிப்படுவதாகக் கூறியுள்ளார்.

அதன் பின்னர் பிளாஸ்டிக் பொம்மைக்கு சிவப்பு பெயின்ட் அடித்து, முழுதும் உருவாகாத நிலையில் முன்கூட்டியே குழந்தை பிறந்துவிட்டது என்று கூறி, அதைச் சுற்றி உள்ளூரில் உள்ள சுகாதார மையத்துக்குப் பரிசோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

plastic doll
plastic doll
social media

அதை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, இது உண்மையான குழந்தை அல்ல, பொம்மை எனக் கண்டறிந்தனர். அதோடு சிகிச்சை எடுத்துக்கொண்டதாகக் கூறப்பட்ட எக்ஸ்ரேக்களை பரிசோதித்தபோது, அவையும் போலியானவை என மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இது குறித்து மருத்துவ கண்காணிப்பாளரான டாக்டர் ஹர்ஷித் கூறுகையில், ``இந்தப் பெண் வயிற்றில் உண்டான தொற்றுக்கு சிகிச்சையெடுக்க சுகாதார மையத்துக்கு தினமும் சிகிச்சைக்கு  வந்துள்ளார். கர்ப்ப கால சிகிச்சைக்காக அல்ல. ஆனால், திருமணமாகி நீண்ட நாள்கள் ஆகியும், கர்ப்பம் தரிக்க முடியாமல் போனதால், வசை பேச்சுகளைச் சமாளிக்க, இவ்வாறு செய்துள்ளார்’’ என்று கூறினர்.