Published:Updated:

மெட்ரோ ரயிலில் நடனமாடிய பெண்... சுட்டிக்காட்டிய ட்விட்டர் - அதிகாரிகள் நடவடிக்கை என்ன தெரியுமா?

மெட்ரோவில் நடனமாடிய பெண்! ( ட்விட்டர் )

ஹைதராபாத் மெட்ரோ ரயிலில் பயணித்த ஒரு பெண், ரயிலின் உள்ளே நடனமாடி ரீல்ஸ் எடுத்துள்ளார். பிறருக்கு தொல்லை விளைவிக்கும்படி உள்ள அந்த வீடியோவை ட்விட்டர் சுட்டிக்காட்டி, ஹைதராபாத் மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகளை உடனே நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தது.

மெட்ரோ ரயிலில் நடனமாடிய பெண்... சுட்டிக்காட்டிய ட்விட்டர் - அதிகாரிகள் நடவடிக்கை என்ன தெரியுமா?

ஹைதராபாத் மெட்ரோ ரயிலில் பயணித்த ஒரு பெண், ரயிலின் உள்ளே நடனமாடி ரீல்ஸ் எடுத்துள்ளார். பிறருக்கு தொல்லை விளைவிக்கும்படி உள்ள அந்த வீடியோவை ட்விட்டர் சுட்டிக்காட்டி, ஹைதராபாத் மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகளை உடனே நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தது.

Published:Updated:
மெட்ரோவில் நடனமாடிய பெண்! ( ட்விட்டர் )

டிக்டாக் முழுவதுமாகத் தடைசெய்யப்பட்ட பின்பு, பல டிக்டாக் பிரியர்கள் இன்ஸ்டாகிராம் பக்கம் திரும்பினார்கள். இன்ஸ்டாவில் தங்களுக்கான ஃபாலோயர்களைப் பிடிப்பதற்காக எதையெல்லாமோ வீடியோவாக எடுத்து பதிவிட்ட பிறகுதான் அடுத்த வேலையையே செய்வதென இருக்கிறார்கள்.

அப்படி ஆர்வக்கோளாறில் ஒரு பெண் மெட்ரோவில் நடனமாடி ரீல்ஸ் எடுத்தது, சொந்த செலவிலேயே சூன்யம் வைத்துக் கொள்வதுபோல, அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நடனமாடிய பெண்
நடனமாடிய பெண்

சமீபத்தில் நஸ்ரியா நடித்து வெளியான படத்தில், `Hello musicians Kottinadama’ என்ற வசனத்தோடு ஒரு பாடல் வரும். அந்தப் பாடலுக்கு இணையவாசிகள் பலரும் ரீல்ஸை வெளியிட்டு வருகின்றனர்.

ஹைதராபாத் மெட்ரோ ரயிலில் பயணித்த ஒரு பெண், ரயிலின் உள்ளேயும், ரயில்வே ஸ்டேஷனின் நடைபாதையிலும் நடனமாடி ரீல்ஸ் எடுத்துள்ளார். சுற்றி உள்ளவர்களைக்கூட கண்டு கொள்ளாமல் அந்தப் பெண் நடனமாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வலம் வந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிறருக்குத் தொல்லை விளைவிக்கும்படி உள்ள அந்த வீடியோவை ட்விட்டர் சுட்டிக்காட்டி, ஹைதராபாத் மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகளை உடனே நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தது.

இது குறித்து ஹைதராபாத் மெட்ரோ ரயில் நிலைய மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவிக்கையில், ``ட்விட்டர் குறிப்பிட்டதன் அடிப்படையில் இதை விசாரிக்கிறோம். மெட்ரோ ரயில் நிலைய விதிகளின்படி, மெட்ரோ ரயிலிலும் நடைபாதைகளிலும் புகைப்படம் எடுப்பதும், வீடியோ எடுப்பதற்கும் அனுமதி இல்லை. ஆனால், மக்கள் அடிக்கடி இவற்றைச் செய்கிறார்கள். அவர்கள் பிடிபடும் பட்சத்தில் இது குற்றமாகவே கருதப்படும்.

சினிமா, தொலைக்காட்சி நிகழ்வுகள், விளம்பரங்கள் போன்றவற்றுக்கு மெட்ரோவில் புகைப்படம், வீடியோக்கள் எடுக்க தனியாகக் கட்டணம் செலுத்தி, மெட்ரோ ரயில்வே அதிகாரிகளிடம் இருந்து அனுமதியும் பெற வேண்டும். அனுமதியின்றி வீடியோ எடுப்பது, புகைப்படம் எடுப்பது போன்றவை குறித்து மெட்ரோ ரயில்வே சட்டத்தில் குறிப்பிடவில்லை என்றாலும், மக்களுக்கு இடையூறு விளைவிப்பது, குடித்துவிட்டு மெட்ரோவில் பயணிப்பதற்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

நடனமாடிய பெண் இன்னும் யாரென்று அடையாளம் காணப்படவில்லை; கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் இவருக்கு அபராதம் விதிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.