Published:Updated:

`கன்னித்தன்மை சோதனையில் தோல்வி... ரூ.10 லட்சம் அபராதம்': திருமணமான பெண்ணுக்கு நிகழ்ந்த கொடூரம்!

Abuse ( pixabay )

தன்னுடைய கன்னித்தன்மையை நிரூபிக்கத் தவறியதால், மாப்பிள்ளை வீட்டார் பெண்ணை அடித்துத் துன்புறுத்தி, விசாரித்துள்ளனர். பஞ்சாயத்தில் அளித்த புகாரின் பேரில் ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

`கன்னித்தன்மை சோதனையில் தோல்வி... ரூ.10 லட்சம் அபராதம்': திருமணமான பெண்ணுக்கு நிகழ்ந்த கொடூரம்!

தன்னுடைய கன்னித்தன்மையை நிரூபிக்கத் தவறியதால், மாப்பிள்ளை வீட்டார் பெண்ணை அடித்துத் துன்புறுத்தி, விசாரித்துள்ளனர். பஞ்சாயத்தில் அளித்த புகாரின் பேரில் ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

Published:Updated:
Abuse ( pixabay )

பெண்களின் கன்னித்தன்மையையும், கற்பையும் ஓர் உறுப்பில் வெளியேறும் ரத்தத்தை வைத்துச் சோதிப்பதை, இந்தச் சமூகம் இன்றளவும் விடவில்லை. திருமணமான பெண்கள் கன்னித் தன்மையோடு இருக்கிறார்களா என்பதைச் சோதிக்க, முதல் இரவு அன்று வெள்ளைப் பாவாடையோடும், வெள்ளைப் படுக்கை விரிப்போடு அனுப்பும் குடும்பங்கள் இன்னமும் இருக்கின்றன. காலையில் பதற்றத்தோடு அந்தத் துணிகளை ஆராயும் அவர்களின் குரூர எண்ணம் இன்றும் தொடர்வதுதான் பெரு; அவலம்.

திருமணமான பெண் ஒருவர், கன்னித்தன்மையோடு இல்லை என அவரை அடித்து உதைத்துத் துன்புறுத்தியதோடு, அவருக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.

abuse
abuse

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா நகரத்தில், 24 வயது பெண் ஒருவருக்கு கடந்த மே 11-ம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு குக்டி மரபின்படி, அப்பெண்ணுக்குக் கன்னித்தன்மை பரிசோதனை நடத்தியுள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவர் அந்தச் சோதனையில், தன்னுடைய கன்னித்தன்மையை நிரூபிக்கத் தவறியதால், மாப்பிள்ளை வீட்டார், பெண்ணை அடித்துத் துன்புறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது அந்தப் பெண் தன்னுடைய அண்டை வீட்டாரால், தான் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதையும், இது குறித்து சுபாஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதையும் கூறினார்.

 Police
Police
Photo: Vikatan

பஞ்சாயத்து உறுப்பினர்களிடம் இந்தத் தகவலை, மாப்பிள்ளை வீட்டார் கொண்டு செல்ல, அப்பெண்ணின் கன்னித்தன்மையை இழந்த அந்தப் பெண்ணை புனிதமாக்க, 10 லட்சம் ரூபாயை அபராதமாகக் கொடுக்க வேண்டும் என, அக்குடும்பத்தினரைக் கட்டாயப்படுத்தி உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, அப்பெண் காவல் நிலையத்தில் தன்னுடைய கணவர், மாமியார், பஞ்சாயத்து உறுப்பினர்கள் மீது புகார் அளித்தார். காவல் துறையினர் பல சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர்.

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்..